பெண்ணுக்கு ஆண் உயிர் தோழனா இருக்க முடியுமா?
இன்றைய காலத்தில் ஒவ்வொரு உறவுகளுக்குள்ளும் பெரும் பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கு காரணம் இருபாலாருக்கும் சரியான புரிந்து கொள்ளும் திறன் இல்லாததே ஆகும். அதிலும் தற்போது காதலர்களுக்கு வரும் பிரச்சனைகளில் முக்கியமானது, காதலிக்கு ஆண் இனத்திலோ, காதலனுக்கு பெண் இனத்திலோ நண்பர்கள் இருப்பது தான்.
அதிலும் அந்த நட்பை பார்க்கும் போது வரும் பிரச்சனை காதலர்களுக்குள் மட்டும் வராமல், அதனை கேட்பவர்களுக்கு, பார்ப்பவர்களுக்கு தவறாகவே தோன்றும். இப்போது உதாரணமாக ஒரு பெண்ணுக்கு ஆண் தோழன் இருப்பது யாருக்காவது தெரிந்துவிட்டால், அதைக் கேட்கும் போது அனைவரது புருவமும் நிச்சயம் மேலே எழும்பும்.
மேலும் நமது சமுதாயத்தின் கண்ணில் இத்தகைய விஷயம் பட்டால், அது பல வழிகளில், கோணங்களில் நகரும். அத்தகைய நமது சமுதாயம், ஒரு திருமணத்திற்கு மேல் திருமணம் செய்து கொள்பவர்களைப் பற்றியோ அல்லது திருமணம் செய்து கொள்ள போகும் இருவர் ஒரே வீட்டில் திருமணமாகாமல் வாழும் முறையை எல்லாம் பார்க்கும் போது கூட பெரிய விஷயமாக நினைக்காது. ஆனால் ஒரு பெண்ணுக்கு ஆண் தோழன் இருந்தால் மட்டும் ஒவ்வொரு விதமான பேச்சு எழும்.
சரி, இப்போது உண்மையில் ஒரு பெண்ணுக்கு அத்தகைய தோழன் இருந்தால், என்னவெல்லாம் நடக்கும் என்று சிறிது பார்ப்போமா!!!
பெண் தோழிகளை விட ஆண் தோழர்கள் இருந்தால், நிறைய சந்தோஷம் இருக்கும். எப்படியெனில் அவர்கள் எப்போதும் கலகலப்பாக இருப்பார்கள். அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார்கள். எந்நேரமும் ஒரே வேடிக்கையாக இருக்கும்.
ஏதேனும் அவசர உதவி என்றால் பெண் தோழிகள் கூட சில சமயங்களில் செய்யமாட்டார்கள். ஆனால் அதுவே ஒரு ஆண் தோழனிடம் சொன்னால், நிச்சயம் அந்த உதவி கிடைக்கும்.
ஆண்கள் ஒரு பெண்ணை உண்மையில் தோழியாக நினைத்துவிட்டால், அது எத்தகைய சூழ்நிலையிலும் மாறாமல் இருக்கும். மேலும் அந்த நட்பிற்கு ஏதேனும் கலங்கம் ஏற்படும் வகை நேர்ந்தால், அவர்கள் அந்த நட்பிற்காக அவர்களை விட்டு விலக கூட முயல்வர்.
அதிலும் ஒரு பெண்ணுக்கு ஒரே ஒரு ஆண் தோழன் இருந்தால், இருவருக்கும் ஒரு நல்ல புரிதல் இருக்கும். மேலும் அந்த நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஏதாவது நண்பர்கள் கிடைத்தால் கூட, அந்த இடத்தில் எந்த ஒரு பொறாமை, கோபம் போன்றவை வராமல் இருக்கும்.
ஆண் உயிர் நண்பனாக இருப்பது கடினம்...
இந்த உலகில் உள்ள பெண்கள் அனைவரும் சரியான வாயாடிகள். அத்தகைய ஒரு பெண்ணுக்கு காதலனும் இருக்கிறான், நண்பனும் இருக்கிறான். அந்த சமயத்தில், அந்த பெண் நண்பனிடமும், காதலனிடமும் ஒரே மாதிரியான முறையில் பேசுகிறாள் என்றால், அந்த நேரத்தில் காதலனுக்கும், நண்பனுக்கும் என்ன வித்தியாசம். பொதுவாக அந்த விஷயத்தில் வாழ்க்கைத்துணைவர்கள் யாரும் புரிந்து கொள்ளமாட்டார்கள்.
அவர்களுக்கு கோபம் தான் வரும். அப்படியிருக்கையில் நண்பன் உங்களை நன்கு புரிந்து கொள்பவனாக இருந்தால், பின் எதற்கு இத்தனை நாள் அவனுடன் நட்புடன் இருக்க வேண்டும், பழக வேண்டும். அது வேஸ்ட் அல்லவா?
இப்போது நீங்கள் வாழ்க்கைதுணை மற்றும் உயிர் நண்பன் மீது ஒரே அளவில் பாசம் வைத்திருக்கிறீங்கள் என்று வைப்போம். இல்லை, உங்கள் துணையின் மீது கொஞ்சம் அதிகமாகவே தான் இருக்கும். ஆனால் ஒரு சமயம் உங்கள் உயிர் நண்பனால், உங்களுக்கும் உங்கள் வாழ்க்கை துணைக்கும் பிரச்சனை வந்தால், நீங்கள் இந்த நேரத்தில் யாருக்கு ஆதரவாக பேசுவீர்கள். இது தேவையா?
ஆண் மற்றும் பெண்ணின் எண்ணம் மற்றும் அலைநீளம் ஒரே போல் இருக்காது. நீங்கள் என்னவேண்டுமென்றாலும் நினைக்கலாம். ஆனால் அதை ஆண்கள் எப்போதும் அவர்கள் மனதில் தோன்றுவதை வைத்து தான் பேசுவார்கள. பின் அது இறுதியில் வாழ்க்கையை முற்றுபுள்ளியாக்கிவிடும்.
எனவே நீங்கள் உங்கள் வாழ்க்கையை நன்கு யோசித்து முடிவெடுங்கள். உங்கள் நண்பன் உங்களுக்கு வாழ்க்கை முழுவதும் ஒரே நிலையில் இருக்க முடியாது. அப்படி இருக்க வேண்டுமெனில் அவனே உங்கள் வாழ்க்கை துணையாக இருக்க வேண்டும். சொல்லப்போனால் இதைப் பற்றி பேசினால் பேசிக் கொண்டே போகலாம். உங்கள் உயிர் நண்பனால், உங்களுக்கும் உங்கள் வாழ்க்கை துணைக்கும் பிரச்சனை வந்தால், நீங்கள் இந்த நேரத்தில் யாருக்கு ஆதரவாக பேசுவீர்கள். முதலில் இதற்கு பதிலளியுங்கள்.

No comments:
Post a Comment