Sunday, May 19, 2013

* வெளிநாட்டு வாழ்க்கை


வெளிநாட்டு வாழ்க்கை


வெளிநாடு என்று வருபவர்கள்
இங்கு..
வெள்ளி சிதறிக் கிடக்கும் என்றும்
தங்கம் பொங்கி வழியும் என்றும்
காசு தேசம் முழுதும் கொட்டிக் கிடக்கும் எனவும்
நினைத்துக் கொண்டா வருகிறார்கள்?

சின்ன கஷ்டமும் படாமல்
பகட்டு வாழ்வு வேண்டுமாம்…..

ஊரில்…
என் சொத்தின் மதிப்புத் தெரியுமா?
என் அந்தஸ்து மரியாதை பற்றி விளங்குமா?
படித்தவன் நான்…

இப்படியெல்லாம் பீற்றுவதால்
இங்கு உய்வுண்டா?

மாஞ்சோலை நிழல் பற்றி
தீஞ்சுவை பலா பற்றி
வயல் பற்றி கடல் பற்றி
அயலிலிருந்த திடல் பற்றி
இரைமீட்டுப் பார்ப்பதிலே
இடைஞ்சல் இல்லைதான்

ஆனால்..
எந்நேரமும் பிரஸ்தாபித்தால்
இந்நேரம் வீணல்லவா?

வந்திறங்கி மூன்று நாளிருக்காது..
இதுதான் வெளிநாடா? ஒருவித சலிப்பு
எங்கள் நாடுபோல் வருமா? ஒரு பீற்றல்
வந்து மாட்டிக்கொண்டோம்! ஒரு பிதற்றல்

வந்து இறங்கிவிட்டாய்.. சரி..
வாழ்ந்து பார்க்க வேண்டாமா?

ஒரு பழமொழியுண்டு…
அமெரிக்காவில் அமெரிக்கனாயிரு..!
ஆனால்..
மறத் தமிழனென்பதை
மறவாதிரு!

No comments:

Post a Comment