Wednesday, May 22, 2013

* வாழ்க்கையின் யதார்த்தங்கள்.


வாழ்க்கையின் யதார்த்தங்கள்.

உங்களது ஆரம்பம் மட்டும் முடிவல்ல.
முன்னேற்றம் என்பது இறுதி அல்ல.வரவுகள்
சுகம் சுகமல்ல.இழப்புக்கள் மட்டும் தோல்வியல்ல.
தோல்விகளால் முடங்கிவிடாதீர்கள்.
முடங்குவிட்டீர்கள் என்றால் எழும்பவே ஏலாது.
வாழ்கையை அனுபவிக்க இன்பம் துன்பம் இரண்டும் தேவை.
இன்பத்துக்கும் துன்பத்துக்கும் நாமே காரணம் என எண்ணுங்கள்.
உங்களது வாழ்க்கையின் மேடு பள்ளங்கள் எல்லாவற்றுக்கும்
உங்கள் வாழ்க்கையின் வகுத்தலில் இட்ட தவறே காரணம்.
இறந்த பின் புகழ் பாடுவோர் அதிகமே.
பெற்றோரை அன்பில் புலத்துக்குள் அழைப்பவர்கள்
ஏன் பேஸ்மன் காவலாளியாக்கிறார்கள்.
பிள்ளைகளின் அன்புக்கு பெற்றோரின் அன்பு கீழ்தரமாகின்றது.
பெற்றோரின் கீழ்தரமான நோக்கு பிள்ளைகளை நோகடிக்கின்றது.
தாய்மை என்பது மேன்மையானது.மேன்மையான தாய்மையை சில தாய்களின் நடத்தைகள் தாய்மையை கொச்சப்படுத்துகின்றார்கள்.
ஆண்பிள்ளைகள் சுதந்திரம் பெண்களுக்கு இல்லையே ஆனால் அந்த ஆணின் நடத்தைக்கு பெயர்கள் றவுடி,காமுகன் என நீளும்.
பெண்களிடம் சுதந்திரம் என்பதால் பரம்பரையே தப்பான பாதைக்கு எடுத்து செல்கிறார்கள்.
இருக்கும்போது மதிப்பளுக்காதோருக்கு இறந்த பின் மதிப்பளிப்பதால்
புகழ்பாடிய எங்களை பிணம் கூட காறி துப்பும்.
சமூகவாதி வாழும்போது இடைஞ்சல் கொடுப்போர் இறந்த பின் புகழ் பாட முன் வகிப்பவர்களே அதிகம் வாழும் சமூகம்.
இருக்கும் போது ஒழுங்கான உணவு வழங்கார் இறந்தபின் எட்டு,செலவு, அந்தியட்டி என படையல்கள்.
வறுமையில் இருக்கும்போது நீ யாரோ நான் யாரோ பணம் வர வர உறவுகள்,நண்பர்கள் என கூட்டம் சேரும்.
ஒருவனுக்கு உதவ நினைத்தால் அவனிடம் பணமாக வளங்காதீர் அவன் தொழில் ஒன்றுக்காய் உதவுங்கள்.
நம்புவனையே நம்பிக்கொண்டே இருப்பதும் நம்பிக்கையற்றவனை நம்ப வைப்பதற்கு முயற்சிசெய்வதும் ஆபத்தானது.

No comments:

Post a Comment