என்னுயிரே.. என்னுயிரே...!
வலி மட்டும்தானா காதல்... நிச்சயம் இல்லை.. ஒவ்வொரு காதலுக்கும் ஒரு வலிமையும் இருக்கும்... வலிமை தருவதுதான் உண்மையான காதல்.
உயிர்கள் இரண்டின் சங்கமம் கொடுக்கும் சுகம் இருக்கிறதே... அது சொர்க்கத்தையும் ஓவர்டேக் செய்து விடும் இந்த சுகானுபவம். ஒவ்வொருவருக்கும் காதல் பரம சுகத்தை மட்டுமல்ல, பாரம் சுமக்கத் தேவையான பலத்தையும் கூடவே தந்து விட்டுத்தான் செல்கிறது.
உன் அருகாமை கதகதப்பை என் தோள்களில் உணர்கிறேன்.
உன் சுகந்தத்தை என் நாசிகளில் உணர்கிறேன்
உன் சிரிப்பொலியை என் காதுகளில் உணர்கிறேன்.
நான் எங்கோ... நீ எங்கோ இருந்தாலும்...
இதுதான் காதலின் அடிப்படை. உடல் ரீதியான உணர்வுகளையும் தாண்டி, இருப்பையும், நடப்பையும் தாண்டி, உள்ளங்கள் உரசிக் கொள்ளும் அந்த் தருணம் இருக்கிறதே... அடடா, அடடா.. அதுவல்லவோ சுகம்.
நீ எனக்கு விஷம்
நீ எனக்கு இனிப்பு
நீ எனக்கு துவர்ப்பு
நீ எப்படி இருந்தாலும்
எனக்கு நீ அமிர்தம்...
காதல் வந்தால் வரும் உணர்வு இது.
நீதான் என் இதயத்தைச் சுட்டாய்
நீதான் என் இதயத்தைப் பொசுக்கினாய்
நீயேதான் அதற்கு மருந்தையும் போட்டு விட்டாய்
உன் அன்பால்
காதலில் மட்டும்தான் இப்படி எப்படிப்பட்ட 'சூட்டையும்' தாங்கக் கூடிய பக்குவமும், பொறுமையும் வரும். நிறையப் பேர் சொல்வார்கள், காதலிக்க ஆரம்பித்து விட்டான், இனி இவன் அவ்வளவுதான் என்று. நிச்சயம் தவறு... காதலர்களிடம் போய் கேட்டுப் பாருங்கள், குறிப்பாக ஆண்களிடம் கேட்டுப் பாருங்கள், அவன் எப்படியெல்லாம் 'பலன்' அடைந்தான் என்று தெரியும்.
மனசுக்குள் ஒரு அமைதி வரும், இதுவரை இல்லாத அளவுக்குப் பொறுமை வரும், எதையும் ரசிக்கும் மன நிலை வரும், கோபம் பறந்தோடும், குணம் கூடும், ஏன் அழகு கூட கூடும். அவனையே அவன் ரசிக்க ஆரம்பிப்பான். சுற்றியிருப்பவர்களை எல்லாம் பாசிட்டிவாக பார்க்கும் சிந்தனை வரும் - காதல் உணர்வுகள் ஒருபக்கம் அலையென பொங்கி, பிரவாகமாக ஓடிக் கொண்டிருக்கும், மறுபக்கம் இப்படிப்பட்ட மாற்றங்களும் கூடவே வந்து சேரும்.
வாழ்க்கையின் அழகான விஷயம் காதல்.. ஆயிரம் அர்த்தங்களை அது உங்களுக்குச் சொல்லித் தரும்.. மனசை காதலிக்கும்போது கிடைக்கும் சொர்க்க உணர்வு இருக்கிறதே, அதற்கு ஈடு இணை எதுவுமே கிடையாது, இதைச் சொல்லிப் புரிய வைக்க முடியாது...
பிறந்த ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் முடிந்து போகும்
நீயும் அப்படியே
நானும் அப்படியே
ஆனால் கதை முடியும்போது
உன் காதல் என்னுடன் ஒட்டிக்கிடக்கும்
என் உயிருடன் கலந்த உதிரம் போல
நாம் மரித்துப் போகலாம்
நம் காதல் நம்மைப் பார்த்து சிரித்து காலத்திற்கும் நிற்கும்!.
எனவே காதலை உணருங்கள், காதல் உணர்வோடு மூழ்கிப் போங்கள்.. தவறே இல்லை!
No comments:
Post a Comment