Friday, September 26, 2014

என் பெயர் என்ன ???

என் பெயர் என்ன ???


என் பெயர் என்ன ???.

நீ அழுத போது
உன்னை தரதரவென்று
இழுத்துப் போய் 
பள்ளிக் கூடத்தில்
சேர்த்தேன்
படித்து பெரிய ஆளாக
வர வேண்டும் என்ற எண்ணத்தில்

இன்று நான் அழுகிறேன்
என்னை இழுத்துப் போய்
முதியோர் இல்லத்தில் சேர்க்கிறாயே
அங்கே நான் எதை படிக்க வேண்டுமென்று

பத்துமாதம் உன்னை வயிற்றில்
சுமந்தபோது பாரமாக
நான் நினைக்கவில்லை
உன் பத்தினி வந்ததும்
உன் வீட்டில் நான் ஒரு ஓரமாக
இருப்பதையே நீ பாரமாக நினைக்கிறாயே

நீ ஓடி ஓடி விளையாடிய போது
நீ செல்லும் இடமெல்லாம்
உன் பின்னாலே வந்து
உனக்கு சோறு ஊட்டி
உன் வயிறு நிறைந்ததில்
என் வயிறும் மனமும் நிறைந்தது
எனக்கு வயிறாற உணவு வேண்டாம்
ஒரு வேளையானலும் உன் வீட்டு சோறு போதும்

உன் வருங்காலத்திற்காக
உன்னை பெற்று வளர்த்து
படிக்க வைத்து,கல்யாணம் முடித்து
நீ வாழ்வதற்காக உன்னை ஆளாக்கினேன்
என் எதிர்காலத்திற்காக
நான் சாவதற்கு என்னை நீ
பார்த்துக் கொள்ளக் கூட மறுக்கிறாய்

பிள்ளையேப் பெறாமல்
இருந்திருந்தால் மலடியாகிருப்பேன்
யாருமே இல்லாதிருந்தால்
அனாதையாகிருப்பேன்
பிள்ளைகளைப் பெற்றும்
இன்று நான் முதியோர் இல்லத்தில்

நான் மலடியா
நான் அனாதையா
என் பெயர் என்ன..?

நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/naanpaarkkumulakam21 

Thursday, June 12, 2014

* செக்ஸ் அடிமை (sexual addiction) 18+


செக்ஸ் அடிமை (sexual addiction) 18+

குடி போதை மயக்கத்தை அனுபவித்தவர்கள் அதில் இருந்து மீள முடியாமல் மீண்டும் மீண்டும் குடியைப் பற்றியே சிந்திப்பது போல் சிலர் செக்ஸ் அடிமைகளாக இருப்பது உண்டு. 

இந்த அடிமைத்தனம் காரணமாக எந்தநேரமும் அதைப்பற்றியே சிந்தித்தல், அன்றாட சொந்த வேலைகளைக்கூட செய்ய முடியாமல் சிரமப்படுதல் போன்றவை ஏற்படலாம். அது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது. ஆண்களுக்கு இந்த குறைபாடு அதிகரிக்கும் போது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளுதல், ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளுதல், ஆண் ஆணுடன் உறவு கொள்ளுதல் போன்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இந்த நிலையில் மேலும் பல கலாசார சீரழிவுக்கான செயல்களில் ஈடுப்படுவதைக் காணமுடியும். கீழ்க்கண்ட செயல்பாடுகளைக் காண நேர்ந்தால், அது செக்ஸ் அடிமை என்ற நிலை என்பதை உறுதி செய்ய முடியும்.

*அடிக்கடி சுய இன்பம் காணுதல்

*பல்வேறு உறவுகள்

*எப்போதும் செக்ஸ் படங்கள் பார்த்தல்

*போன் செக்ஸ் அல்லது கம்ப்யூட்டர் செக்ஸ்

*எக்ஸிபிஸனிசம் எனப்படும் அடுத்தவர்களிடம் தன் உறுப்பைக் காட்டுவதில் ஆனந்தம் அடைதல்

*செக்ஸ் துன்புறுத்தல்

*கற்பழித்தல்

*அதிக பார்ட்னர்களை விரும்புதல்

இது போன்ற குறைபாடுகள் இருந்தால், உடனடியாகப் போதிய சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் உடல் நலம், பணம், சமுதாயச் சிக்கல் ஏற்படுவது மட்டுமின்றி, காவல்துறை நடவடிக்கையிலும் சிக்கிக் கொள்ள நேரிடலாம். அதனால் குடும்ப உறவு சீரழிந்து கணவன் மனைவி உறவு கெட்டுப்போகலாம். தம்பதிகளுக்குள் இருவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவு உறவு கொள்வது மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடியது. இதை மருத்துவச் சிகிச்சை, கவுன்சலிங், மருந்துகள் கொடுப்பதன் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும்.

பொதுவாக சிலருக்கு செக்ஸ் உணர்வு மிக குறைவாக அல்லது இல்லாத நிலையும், சிலருக்கு மிக அதிகமாகவும் இருக்கும். ஆணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக உள்ள நிலையை சேட்டிரியாஸிஸ் (satyriasis) என்று சொல்வார்கள். பெண்ணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக இருந்தால் நிம்போமேனியா (nymphomania) என்று சொல்லுவார்கள். இந்த குறைபாட்டால் தான் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவி மக்களைப் பயமுறுத்துகின்றன. எப்படியாயினும் அதிக முறை உறவு அனுபவிக்க விரும்புபவரை செக்ஸ் அடிமை என்று சொல்லிவிடக் கூடாது, செக்ஸில் தவறான அணுகுமுறையைக் கடைப்பிடித்து எந்த நேரமும் அதே சிந்தனையில் இருப்பவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க வேண்டும்

நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanParkumUlagam

Friday, September 27, 2013

* இருபது வயதுகளில் தம்மை அறியாமல் செய்யக்கூடிய தவறுகள்!!


இருபது வயதுகளில் தம்மை அறியாமல் செய்யக்கூடிய தவறுகள்!!

பொதுவாக அனைவரும் தம்மை அறியாமல் பல தவறுகளை சிறு வயது என்று சொல்லும் இருபது வயதுகளில் தான் செய்வோம். ஏனெனில் இந்த வயதில் அனைவருக்கும், நாம் பெரிய ஆளாகிவிட்டோம் என்ற எண்ணம் எழும். இதனால் யார் என்ன சொன்னாலும் கேட்கமாட்டோம். நம் மனம் சொல்வதை மட்டும் தான் செய்வோம். மேலும் இந்த வயதில் உடல் மற்றும் மனம் முற்றிலும் வேறுபட்டிருக்கும். 

குறிப்பாக டீனேஜ் பருவம் முடிந்து அடுத்த பருவத்தில் காலடி எடுத்து வைக்கும் போது, மனதில் தோன்றும் முதல் எண்ணம், நான் ஒரு சுதந்திரப் பறவை என்பது. இக்காலத்தில் நண்பர்கள் மிகவும் முக்கியமானவர்களாக இருப்பர். பெற்றோர்கள் எதையும் செய்ய விடாமல் தடுக்கும் எதிரிகளாக இருப்பது போல் இருக்கும். மேலும் இந்த பருவத்தில் எண்ணற்ற தவறுகளை செய்ய நேரிடும். 

அதிலும் அத்தகைய தவறுகளை சற்று பெரியவர்களான பின்னர் நினைக்கும் போது, அவற்றில் சில வருத்தப்பட வைப்பவையாகவும், சில நகைச்சுவையாகவும் இருக்கும். இப்போது டீனேஜ் பருவம் முடிந்து அடுத்த பருவத்தில் காலடி வைக்கும் போது, பெண்கள் செய்யக்கூடிய சில பொதுவான தவறுகளை கொடுத்துள்ளோம்.

சமூக வலைத்தளங்களான ஃபேஸ் புக், ட்வீட்டர் போன்றவற்றில் எந்நேரமும் இருப்பது. இதனால் தேவையில்லாத நபர்களிடம் நட்புறவு கொண்டு, பின் பிரச்சனையில் சிக்கிக் கொள்வது.

டீனேஜ் பருவம் முடிந்து அடுத்த பருவத்தில் காலடி வைக்கும் போது, இரவில் சரியாக தூங்காமல், காரணமே இல்லாமல் ஆண் நண்பர்களுடன் சாட்டிங் செய்வது.

பெண்களை எளிதில் காதலில் விழும் காலம் தான் இருபது வயது. இந்த விவரம் தெரியாத இருபது வயதில் பெண்கள் காதலில் விழுந்து, இறுதியில் காதல் முறிவடையும் போது தான் தவறை உணர்வார்கள்.

இன்றைய மார்டன் உலகில் ஃபேஷன் என்ற பெயரில் பெண்கள் கூட சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது என்றெல்லாம் செய்கிறார்கள். அதிலும் இந்த பழக்கம் விவரம் தெரியாத இருபது வயதில் தான் எளிதில் தொற்றிக் கொள்ளும்.

இந்த வயதில் கட்டுப்பாட்டில் இருப்பது சற்று கடினமானது. அந்த கட்டுப்பாடு இல்லாவிட்டால், எளிதில் தவறுகளை செய்ய நேரிடும். ஏனெனில் இந்த காலத்தில் ஆசை, காம உணர்ச்சி போன்றவை அளவுக்கு அதிகமாக இருக்கும்.

குண்டாகிவிடக்கூடாது என்று ஆண்கள் மற்றும் பெண்கள் செய்யும் ஒரு செயல் தான் சாப்பிடாமல் இருப்பது. இவ்வாறு சாப்பிட வேண்டிய காலத்தில் ஒழுங்காக சாப்பிடாவிட்டால், பின் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், பிற்காலத்தில் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.

20 வயதுகளில் அனைத்து பெண்களும் செய்யும் ஒரு தவறு தான், அனைவரையும் கண்மூடித்தனமாக நம்புவது. யார் என்ன சொன்னாலும், அதை நம்பி அதற்கேற்றாற் போல் நடந்து கொண்டு, பின் வருத்தப்படுவார்கள்.

இந்த வயதில் வீட்டு சாப்பாடு சாப்பிட பிடிக்காது. மாறாக நண்பர்களுடன் வெளியே சென்று கண்ட கண்ட உணவுகளை வாங்கி சாப்பிடுவார்கள்.

நான் பார்க்கும் உலகம்
◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘
www.fb.com/NanaparkumUlagem

Sunday, September 22, 2013

* மது அருந்துதல்


மது அருந்துதல்

மது அருந்துதல் குறித்த இறைவனின் எச்சரிக்கை: -

“(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2: 219)

மது அருந்துதல் ஷைத்தானின் அருவக்கத்தக்க செயலாகும்: -

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்-குர்ஆன் 5:90-91)

மது அருந்துபவர் மற்றும் மதுவுடன் தொடர்புடையவர்கள் அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்களால் சபிக்கப்பட்டவராவர்: -

மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். (ஆதாரங்கள் : அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)

மேற்கூறப்பட்ட ஹதீஸ் அஹ்மத், இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிம் ஆகிய கிரதங்களில் இடம்பெறும் போது “அல்லாஹ் சபிக்கிறான்” என்று வந்துள்ளது.

மது அருந்துபவன் சுவனம் புக மாட்டான்: -

மதுவில் மூழ்கி இருப்பவனும், பெற்றோரைத் துன்புறுத்துபவனும், தன் மனைவியின் மீது வீண்பழி சுமத்துபவனும் சுவனம் புகமாட்டான்” (ஹாகிம்)

“தொடர்ந்து மது அருந்துபவர், ஓடிப் போன அடிமை, தம் குடும்பத்தார்கள் செய்யும் தீய செயல்களைக் கண்டு திருப்தியடைந்தவர் ஆகிய இந்த மூவருக்கும் அல்லாஹ் சுவர்க்கத்தைத் தடை செய்திருக்கிறான்”

மது அருந்துபவர்களுக்கு மறுமையில் புகட்டப்படும் பானம்: -

“போதைப் பொருளை அருந்துபவர்களுக்கு “தீனத்துல் கப்பால்” எனும் பானத்தை புகட்டுவதாக அல்லாஹ் முடிவு செய்துள்ளான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “தீனத்துல் கப்பால் என்றால் என்னவென்று” கேட்டனர். அது ‘நரகவாசிகளின் வேர்வை’ அல்லது ‘நரகவாதிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம்’ என பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.

மதுபோதையில் மரணித்தவன் சிலை வணங்கியைப் போலவனாவான்: -

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: மதுபோதையில் மூழ்கியவன் இறந்துவிட்டால் சிலை வணங்கியைப் போன்று -மறுமையில்- அல்லாஹ்வை சந்திப்பான். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : அஹமத்

போதை தரும் அனைத்துமே மதுவைச் சேர்ந்ததாகும்: -

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: போதை தரும் அனைத்தும் மதுவாகும். போதை தரும் அனைத்தும் ஹராமாகும். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்

வெவ்வேறு பெயர்களில் புழங்கும் மது வகைகள் பற்றிய எச்சரிக்கைகள்: -

‘என்னுடைய சமுதாயத்தில் சிலர் நிச்சயம் மது அருந்துவார்கள். ஆனால் அதற்கு வேறு பெயரைக் கூறிக் கொள்வார்கள்’ அறிவிப்பவர் : அபூமாலிக் அல்-அஷ்அரி (ரலி), ஆதாரம் : இப்னுமாஜா

‘விபச்சாரம் பெருகும், மது அருந்தும் பழக்கம் பரவலாகும்’ (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

மது அருந்தியவனுக்கு தண்டனை: -

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மது அருந்தியவனைப் பார்த்து, “அவனை அடியுங்கள்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது எங்களில் சிலர் செருப்பாலும், ஆடைகளினாலும் கரத்தாலும் அவனை அடித்தனர்.” (ஆதாரம் : புகாரி)

மது அருந்திய நிலையில்:-

மது அருந்தி போதையடைந்தவனின் நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் அருந்தினால் மறுமை நாளில் ரத்கத்துல் கப்பால் எனும் பானத்தை அல்லாஹ் அவனுக்கு புகட்டுவது கடமையாகிவிட்டது என்று நபி(ஸல்)அவர்கள் கூறியபோது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களே! ரத்கத்துல் கப்பால் என்றால் என்ன? என்று கேட்டனர். அதற்கவர்கள், நரகவாசிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: இப்னுமாஜா)


* வெற்றிக்கு வழி


1.அனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதில்லை.

2. மவுனமாக தியானித்தால் மனம் தெளிவு பெறும்.

3.அடக்கமான இதயம் அனைவரின் அன்பையும் பெறும்.

4. இளமையில் படியுங்கள்; முதுமையில் அதை பயன்படுத்துங்கள்.

5.ஆசான் புகட்டாத அறிவை அனுபவம் புகட்டும்.

6. மருந்தைவிட மனக்கட்டுப்பாடு நோயை விரட்டும்.

7. அறிவாளிக்கு வாழ்க்கை ஒரு திருவிழா.

8. நம்பிக்கை செழிப்பை தராது; ஆனால் தாங்கி நிற்கும்.

9. துன்பம் இல்லாத இன்பமும், முயற்சி இல்லாத வெற்றியும் அதிக நாள் நிலைப்பதில்லை.

10. நல்ல நூலைப் போன்று சிறந்த நண்பன் வேறில்லை.

* ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???


ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???
1.விடலைப் பருவத்தில் தினமும் காலை எழுந்ததும் தனக்கு மீசை அரும்பி விட்டதா என்று கண்ணாடியில் பார்க்கும் போது.

2.இது வரை ஆண்...கள் பள்ளியிலேயே படித்துவிட்டு, இருபாலர் படிக்கும் கல்லூரியில் நுழைந்ததும் அச்சத்தோடும் கூச்சத்தோடும் பெண்களை ஓரக்கண்ணில் பார்க்கும் போது.

3.பெண்கள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யாமல், தான் தானாகவே இருக்கும் போது.

4.எவ்வளவு முரடனாக இருந்தாலும் , தன் வீரத்தையும் திமிரையும் ஓரங்கட்டிவிட்டு , பெண்ணிடம் பணிவாய் பேசும் போது.

5. சொந்த உழைப்பில் கிடைத்த தன் முதல் மாத சம்பளத்தை கை நீட்டி வாங்கும் போது.

6.காத்திருக்க முடியாதென்றுச் சொன்ன காதலியை தன் குடுபத்திற்காக தியாகம் செய்யும் போது.

7.தன் தங்கைக்கு தான் இன்னொரு தந்தை என்பதை உணரும் போது.

8.இரு சக்கர வண்டியை உர்ர் உர்ர்ர்ர்ர்ர்ர்ர் என உறுமாமல், சிக்னலில் வண்டியை நிறுத்தி விட்டு கண்ணாடியில் தலை முடியை சரி செய்யும் போது.

9.வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டே நடக்கும் போது.

10.அப்பாவிடம் அதிகம் பேசாவிட்டாலும் கூட அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் தெரிந்து வைத்திருக்கும் போது.

# சுயநலமில்லாத,செயற்கைத் தனமில்லாத எல்லா ஆண்களுமே அழகு தான்.

* பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க!’: அந்த பதினாறும் எதுவென்று உங்களுக்கு தெரியுமா?


பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க!’: அந்த பதினாறும் எதுவென்று உங்களுக்கு தெரியுமா?

புதிதாகத் திருமணமாகும் மணமக்களை ‘பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க!’ என வாழ்த்துவது வழக்கம். அவ்வாறு, வாழ்த்தும் போது ‘ஐயோ! பதினாறா எனக்கு வேண்டாம்! என்று மணமகள் வெட்கப்படுவதும், ‘பதினாறா? என்னால் முடியாது’ என்று மணமகன் கூறிச் சிரிப்பதும் கிட்டதட்ட எல்லா மணமேடைகளும் கண்ட நகைச்சுவைதான்.
‘பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க!’ என்பது பதினாறு பிள்ளைகளைப் பெற்று வளமாக வாழ்வதையா குறிக்கிறது!’ இல்லவே இல்லை. மாறாக, வாழ்க்கையில் பதினாறு செல்வங்களை அல்லது நலன்களை பெற்று சிறப்பாக வாழ்வதையே குறிக்கிறது.

அபிராமி அந்தாதி பதிகப் பாடலொன்று இந்தப் பதினாறு செல்வங்கள் என்னென்ன என்பதை அழகாகக் கூறுகின்றது இப்படி?

அகிலமதில் நோயின்மை கல்விதன் தானியம்

அழகுபுகழ் பெருமை இளமை

அறிவுசந் தானம்வலி துணிவுவாழ் நாள்வெற்றி

ஆகுநல் லூழ்நுகர்ச்சி

தொகைதரும் பதினாறு பேறும்தந் தருளிநீ

சுகானந்த வாழ்வளிப்பாய் – (அபிராமி அந்தாதி பதிகம்)

1. உடலில் நோயின்மை,

2. நல்ல கல்வி,


3. தீதற்ற செல்வம்,


4. நிறைந்த தானியம்,


5. ஒப்பற்ற அழகு,


6. அழியாப் புகழ்,


7. சிறந்த பெருமை,


8. சீரான இளமை,


9. நுண்ணிய அறிவு,


10. குழந்தைச் செல்வம்,


11. நல்ல வலிமை,


12. மனத்தில் துணிவு,


13. நீண்ட வாழ்நாள் (ஆயுள்),


14. எடுத்தக் காரியத்தில் வெற்றி,


15. நல்ல ஊழ் (விதி),


16. இன்ப நுகர்ச்சி

ஆகியவையே அந்தப் பதினாறு பேறுகள் அல்லது செல்வங்கள்.

நான் பார்க்கும் உலகம்