வெளிநாட்டு வாழ்க்கை
வெளிநாட்டில் வாழ்பவர்களை நாட்டுக்கு வரவிடாமல் தடுப்பது எது? யார் என்ன சொன்னாலும் நாட்டில் இருப்பவர்கள் இன்னும் வெளிநாடு வர துடிப்பதுக்கு எது காரணம்.
எல்லாவற்றிற்கும் ஒரு காரணம், ஒரே காரணம் பணம்.
பணம். பணம். பணம்.
சம்பாதித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற ஆசை. வெளிநாடு சென்றால்தான் ஊரில் உள்ள கடன்களை அடைக்க முடியும் என்ற சூழ்நிலை.
உண்மை வரிகள் ....
•பிறந்த நாட்டை விட்டு
பிரிந்து
உறவுகளை விட்டுவிட்டு
தனியனாய்
உரிமைகள் அற்று
சிதறி
கற்பனை வாழ்வில் மட்டுமே
கனவுகளில் லயித்து
நிஜமற்ற கானல்நீராய் நீள்கிறது
எங்கள் வாழ்க்கை!
•எனக்கொரு கனவு
கடனில் இருக்கும் வீட்டை
என் காலத்திலாவது
கட்டி மீட்டிட வேண்டும்!
•நண்பனுக்கொரு கனவு
தன்னோடு கஷ்டம் போகட்டும்
தன் தமையன்களுக்காவது
நல்ல படிப்பை நல்கிட வேண்டும்!
•அறைத் தோழன்னுக்கோர் கனவு
அப்பாவின் ஆப்பரேசனுக்கு
பணம் சேர்த்து
மீளாத் துயரில் இருக்கும்
குடும்பத்தை மீட்டிட வேண்டும்!
•தோழியின் கனவு
தான் முதிர்கன்னி ஆகிவிட்ட போதும்
தன் தங்கைகளுக்கு
திருமணம் செய்து பார்த்து
மகிழ்ந்திட வேண்டும்!
•இப்படியாய் நாங்கள்
கனவுகள் வெவ்வேறு
பணம் ஒன்றே பிரதானமாய்
எல்லோரும் வெளிநாட்டில்!
•காய்ச்சல் வந்ததென்றால்
கஞ்சி கொடுக்க தாயில்லை.
அன்பை பகிர்வதற்கு
அருகில் என் தங்கை இல்லை.
அதிகாரம் செலுத்திட
அருகாமையில் அப்பா இல்லை.
சோகம் சுமந்தோமேன்றால்
ஆற்றுவதற்கு ஆளில்லை.
சொல்லொண்ணா துயரில்
நாங்களும் அனாதைகள்தான்.
நாடுகடந்து வாழ்வதால்
நாங்களும் அகதிகள்தான்!
•அம்மா அழைக்கிறாள்
உன்முகம் பார்த்து
நாளாச்சு..
கண்ணுலையே நிக்குற..
வந்து காட்டிட்டு போ
உன் முகத்தைன்னு!
•தகப்பன் சொல்கிறார்
தங்கச்சிக்கு மாப்ள
பாத்துட்டேன்..
கல்யாணத்துக்கு
பணம் பத்தல
அனுப்பி வைப்பான்னு!
•தம்பி கேட்கிறான்
அண்ணா..நான் நடந்தே
பள்ளிக்கூடம் போறேன்
சைக்கிள் ஒன்னு
வாங்கி தாணான்னு!
•தங்கை கேட்கிறாள்
கண்டிப்பா
என் கல்யாணத்துக்கு
வருவியான்னு!
•முகத்தில் மலர்ச்சி காட்டி
உள்ளத்தால் அழுகின்றோம்
எப்போ விடியும்
வெளிநாட்டில் வாழ்பவர்களை நாட்டுக்கு வரவிடாமல் தடுப்பது எது? யார் என்ன சொன்னாலும் நாட்டில் இருப்பவர்கள் இன்னும் வெளிநாடு வர துடிப்பதுக்கு எது காரணம்.
எல்லாவற்றிற்கும் ஒரு காரணம், ஒரே காரணம் பணம்.
பணம். பணம். பணம்.
சம்பாதித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற ஆசை. வெளிநாடு சென்றால்தான் ஊரில் உள்ள கடன்களை அடைக்க முடியும் என்ற சூழ்நிலை.
உண்மை வரிகள் ....
•பிறந்த நாட்டை விட்டு
பிரிந்து
உறவுகளை விட்டுவிட்டு
தனியனாய்
உரிமைகள் அற்று
சிதறி
கற்பனை வாழ்வில் மட்டுமே
கனவுகளில் லயித்து
நிஜமற்ற கானல்நீராய் நீள்கிறது
எங்கள் வாழ்க்கை!
•எனக்கொரு கனவு
கடனில் இருக்கும் வீட்டை
என் காலத்திலாவது
கட்டி மீட்டிட வேண்டும்!
•நண்பனுக்கொரு கனவு
தன்னோடு கஷ்டம் போகட்டும்
தன் தமையன்களுக்காவது
நல்ல படிப்பை நல்கிட வேண்டும்!
•அறைத் தோழன்னுக்கோர் கனவு
அப்பாவின் ஆப்பரேசனுக்கு
பணம் சேர்த்து
மீளாத் துயரில் இருக்கும்
குடும்பத்தை மீட்டிட வேண்டும்!
•தோழியின் கனவு
தான் முதிர்கன்னி ஆகிவிட்ட போதும்
தன் தங்கைகளுக்கு
திருமணம் செய்து பார்த்து
மகிழ்ந்திட வேண்டும்!
•இப்படியாய் நாங்கள்
கனவுகள் வெவ்வேறு
பணம் ஒன்றே பிரதானமாய்
எல்லோரும் வெளிநாட்டில்!
•காய்ச்சல் வந்ததென்றால்
கஞ்சி கொடுக்க தாயில்லை.
அன்பை பகிர்வதற்கு
அருகில் என் தங்கை இல்லை.
அதிகாரம் செலுத்திட
அருகாமையில் அப்பா இல்லை.
சோகம் சுமந்தோமேன்றால்
ஆற்றுவதற்கு ஆளில்லை.
சொல்லொண்ணா துயரில்
நாங்களும் அனாதைகள்தான்.
நாடுகடந்து வாழ்வதால்
நாங்களும் அகதிகள்தான்!
•அம்மா அழைக்கிறாள்
உன்முகம் பார்த்து
நாளாச்சு..
கண்ணுலையே நிக்குற..
வந்து காட்டிட்டு போ
உன் முகத்தைன்னு!
•தகப்பன் சொல்கிறார்
தங்கச்சிக்கு மாப்ள
பாத்துட்டேன்..
கல்யாணத்துக்கு
பணம் பத்தல
அனுப்பி வைப்பான்னு!
•தம்பி கேட்கிறான்
அண்ணா..நான் நடந்தே
பள்ளிக்கூடம் போறேன்
சைக்கிள் ஒன்னு
வாங்கி தாணான்னு!
•தங்கை கேட்கிறாள்
கண்டிப்பா
என் கல்யாணத்துக்கு
வருவியான்னு!
•முகத்தில் மலர்ச்சி காட்டி
உள்ளத்தால் அழுகின்றோம்
எப்போ விடியும்
No comments:
Post a Comment