Thursday, May 23, 2013

* சிரித்து வாழ வேண்டும்!


சிரித்து வாழ வேண்டும்!


மகிழ்ச்சி என்பது பட்டாம்பூச்சி மாதிரி
துரத்தத் துரத்த விலகிப் பறக்கும்
கவனத்தை வேறு புறம் திருப்பினால்
தானே வந்து தோளில் அமரும்!

மகிழ்ந்திருக்க இடம் இதுதான்
மகிழ்ந்திருக்க நேரம் இப்போதுதான்!

இயலும்போதெல்லாம் சிரியுங்கள்
மாற்ற முடியாததை மாற்ற எண்ணி
மகிழ்ச்சியைத் தொலைக்காதீர்.

வாழும் நாள் சிறிது
வாழும் வரை மகிழ்ச்சியாய் இருங்கள்!

மகிழ்ச்சி ஒரு தொற்று நோய்;
உங்கள் மகிழ்ச்சி
சுற்றியுள்ளோரையும் மகிழ்ச்சியாக்கும்!

வயதானதால் நீங்கள் சிரிக்க மறக்கவில்லை;
சிரிக்க மறந்ததால் வயதானவராகி விட்டீர்கள்!

மற்றவர்க்காகத் துடிக்கும் இதயமே
மகிழ்ச்சி நிறைந்த இதயம்!

ஒரு நாள் எல்லாமே தெளிவாகும்
இன்று குழப்பங்களைக் கண்டு சிரியுங்கள்
கண்ணீரின் ஊடாகவும் சிரியுங்கள்
நினைவு கொள்ளுங்கள்
காரணம் இன்றிக் காரியம் நடப்பதில்லை!

No comments:

Post a Comment