Sunday, May 26, 2013

* ஆண்கள் பெண்களை ஏமாற்ற காரணங்கள்


ஆண்கள் பெண்களை ஏமாற்ற காரணங்கள்


திருமணம் என்பது அன்பு மற்றும் மரியாதை நிறைந்த இனிய உறவு. அதன் அருமை மற்றும் பெருமையை அறியாத சில ஆண்களால் பெண்கள் ஏமாற்றப்படுகின்றனர். அன்பு ,பாசம், பண்பு கொண்ட பெண்களை சில ஆண்கள் ஏமாற்றுதல், வஞ்சித்தல் மற்றும் மரியாதையின்மையுடனும் நடத்துகின்றர். 



அதில் சில ஆண்கள் சுயநலவாதிகளாக இருப்பதால் பெண்களின் உணர்வுகளோடு விளையாடுகின்றனர். தனது கணவர் இன்னொரு பெண்ணுடன் கள்ள தொடர்பு கொண்டிருந்தால், அதை அப்பெண்ணால் ஏற்க முடியாது. மேலும் அந்த விஷயத்தை சாதாரணமாக விடமாட்டார்கள்.

ஒருவேளை நிலைமையானது கட்டுக்குள் அடங்காமல் போய் விட்டால், சட்டப்படி விவாகரத்து தான் பெறும் நிலைமை ஏற்படும். இவ்வாறாக ஆண்கள் பல வழிகளில் பெண்களை ஏமாற்றுகிறார்கள். அவை என்னவென்று பார்க்கலாம்.....

* ஆண்களுக்கு எப்பொழுதுமே வித்தியாசமான செயலில் ஈடுபடுவதில் அதிக உந்துதல் உண்டு. அவர்கள் தங்கள் வழக்கமான வாழ்க்கையிலிருந்து ஒரு மாற்றம் வேண்டும் என்று நினைக்கின்றனர் மற்றும் காதலை ஒரு உற்சாகமான விஷயமாக நினைக்கின்றனர். அதனால் அவர்கள் தற்போதுள்ள வாழ்க்கையில் சலிப்புத்தன்மைக் கொள்கின்றனர்.

* ஓயாது தொல்லைப்படுத்தும் மனைவியும், ஆண்கள் மற்றொரு பெண்ணின் உறவை நாடக் காரணமாக இருக்கிறார்கள். ஏனெனில் மற்ற பெண்களாவது தம்மை நன்றாக புரிந்துக் கொண்டு, அன்பு காட்டுவார்கள் என்று நினைத்து, மனைவியை விட்டு செல்கின்றனர்.

* பல ஆண்களுக்கு வணிக பயணங்களின் போது மற்றொரு பெண்ணிடம் உறவு வைத்துக் கொள்ள போதுமான வாய்ப்புகள் கிடைக்கும். மனைவி தூரத்தில் இருக்கின்ற காரணத்தினால், சபல புத்தியுள்ளவரால், மற்றொரு பெண்ணோடு நேரத்தை செலவிடுவதை தவிர்க்க முடியாது. ஆகவே சபலபுத்தியும், பெண்களை ஏமாற்றுவதற்கு ஒரு காரணம்.

* ஆண்கள் பெரும்பாலும் எளிதில் பெண்களை கவரும் தன்மையுடையவர்கள். அதற்கு மற்றொரு பெண்ணிடம் தங்கள் பார்வையை பதித்து மற்றும் ஏதாவது புது முயற்சிகள் செய்து, அவர்கள் கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப முயற்சிப்பர்.

* சில நேரங்களில் ஆண் தன்னுடைய ஆண் அகம்பாவத்தினால், வேறொரு பெண்ணின் துணையை நாடுவது, அவ்வளவு பெரிய தவறில்லை நியாயமானது தான் என்று கருதுகின்றனர்.

* தம்பதியினர் இடையே இணக்கமற்ற நிலையோ அல்லது ஒற்றுமையின்மையோ இருந்தால், அது அந்த ஆணை வேறொரு பெண்ணிடம் ஆறுதல் தேடி போக செய்யும்.

* மனைவி விசுவாசமில்லாதவளாக இருக்கின்ற பட்சத்தில், ஆணும் பின்னர் தன் மனைவியை ஏமாற்ற முயற்சிப்பான். அவனும் அதற்கான நேரம் பார்த்து காத்துகொண்டிருப்பார். நேரம் வரும் போது பழிவாங்க விரும்புவான்.

* ஆண்கள் தங்கள் மனைவிமார்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்ற எண்ணத்தால், மற்றொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள். இந்த விஷயம் மனைவிக்கு தெரிய வரும் போது அவர்களுக்குள் இடைவெளி அதிகமாகி பிரிய நேரிடுகிறது.

No comments:

Post a Comment