Wednesday, May 29, 2013

* பெண்ணுக்கு ஆண் உயிர் தோழனா இருக்க முடியுமா?


பெண்ணுக்கு ஆண் உயிர் தோழனா இருக்க முடியுமா?


இன்றைய காலத்தில் ஒவ்வொரு உறவுகளுக்குள்ளும் பெரும் பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கு காரணம் இருபாலாருக்கும் சரியான புரிந்து கொள்ளும் திறன் இல்லாததே ஆகும். அதிலும் தற்போது காதலர்களுக்கு வரும் பிரச்சனைகளில் முக்கியமானது, காதலிக்கு ஆண் இனத்திலோ, காதலனுக்கு பெண் இனத்திலோ நண்பர்கள் இருப்பது தான்.


அதிலும் அந்த நட்பை பார்க்கும் போது வரும் பிரச்சனை காதலர்களுக்குள் மட்டும் வராமல், அதனை கேட்பவர்களுக்கு, பார்ப்பவர்களுக்கு தவறாகவே தோன்றும். இப்போது உதாரணமாக ஒரு பெண்ணுக்கு ஆண் தோழன் இருப்பது யாருக்காவது தெரிந்துவிட்டால், அதைக் கேட்கும் போது அனைவரது புருவமும் நிச்சயம் மேலே எழும்பும்.

மேலும் நமது சமுதாயத்தின் கண்ணில் இத்தகைய விஷயம் பட்டால், அது பல வழிகளில், கோணங்களில் நகரும். அத்தகைய நமது சமுதாயம், ஒரு திருமணத்திற்கு மேல் திருமணம் செய்து கொள்பவர்களைப் பற்றியோ அல்லது திருமணம் செய்து கொள்ள போகும் இருவர் ஒரே வீட்டில் திருமணமாகாமல் வாழும் முறையை எல்லாம் பார்க்கும் போது கூட பெரிய விஷயமாக நினைக்காது. ஆனால் ஒரு பெண்ணுக்கு ஆண் தோழன் இருந்தால் மட்டும் ஒவ்வொரு விதமான பேச்சு எழும்.
சரி, இப்போது உண்மையில் ஒரு பெண்ணுக்கு அத்தகைய தோழன் இருந்தால், என்னவெல்லாம் நடக்கும் என்று சிறிது பார்ப்போமா!!!

பெண் தோழிகளை விட ஆண் தோழர்கள் இருந்தால், நிறைய சந்தோஷம் இருக்கும். எப்படியெனில் அவர்கள் எப்போதும் கலகலப்பாக இருப்பார்கள். அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார்கள். எந்நேரமும் ஒரே வேடிக்கையாக இருக்கும்.

ஏதேனும் அவசர உதவி என்றால் பெண் தோழிகள் கூட சில சமயங்களில் செய்யமாட்டார்கள். ஆனால் அதுவே ஒரு ஆண் தோழனிடம் சொன்னால், நிச்சயம் அந்த உதவி கிடைக்கும்.

ஆண்கள் ஒரு பெண்ணை உண்மையில் தோழியாக நினைத்துவிட்டால், அது எத்தகைய சூழ்நிலையிலும் மாறாமல் இருக்கும். மேலும் அந்த நட்பிற்கு ஏதேனும் கலங்கம் ஏற்படும் வகை நேர்ந்தால், அவர்கள் அந்த நட்பிற்காக அவர்களை விட்டு விலக கூட முயல்வர்.

அதிலும் ஒரு பெண்ணுக்கு ஒரே ஒரு ஆண் தோழன் இருந்தால், இருவருக்கும் ஒரு நல்ல புரிதல் இருக்கும். மேலும் அந்த நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஏதாவது நண்பர்கள் கிடைத்தால் கூட, அந்த இடத்தில் எந்த ஒரு பொறாமை, கோபம் போன்றவை வராமல் இருக்கும்.
ஆண் உயிர் நண்பனாக இருப்பது கடினம்...

இந்த உலகில் உள்ள பெண்கள் அனைவரும் சரியான வாயாடிகள். அத்தகைய ஒரு பெண்ணுக்கு காதலனும் இருக்கிறான், நண்பனும் இருக்கிறான். அந்த சமயத்தில், அந்த பெண் நண்பனிடமும், காதலனிடமும் ஒரே மாதிரியான முறையில் பேசுகிறாள் என்றால், அந்த நேரத்தில் காதலனுக்கும், நண்பனுக்கும் என்ன வித்தியாசம். பொதுவாக அந்த விஷயத்தில் வாழ்க்கைத்துணைவர்கள் யாரும் புரிந்து கொள்ளமாட்டார்கள்.

அவர்களுக்கு கோபம் தான் வரும். அப்படியிருக்கையில் நண்பன் உங்களை நன்கு புரிந்து கொள்பவனாக இருந்தால், பின் எதற்கு இத்தனை நாள் அவனுடன் நட்புடன் இருக்க வேண்டும், பழக வேண்டும். அது வேஸ்ட் அல்லவா?

இப்போது நீங்கள் வாழ்க்கைதுணை மற்றும் உயிர் நண்பன் மீது ஒரே அளவில் பாசம் வைத்திருக்கிறீங்கள் என்று வைப்போம். இல்லை, உங்கள் துணையின் மீது கொஞ்சம் அதிகமாகவே தான் இருக்கும். ஆனால் ஒரு சமயம் உங்கள் உயிர் நண்பனால், உங்களுக்கும் உங்கள் வாழ்க்கை துணைக்கும் பிரச்சனை வந்தால், நீங்கள் இந்த நேரத்தில் யாருக்கு ஆதரவாக பேசுவீர்கள். இது தேவையா?

ஆண் மற்றும் பெண்ணின் எண்ணம் மற்றும் அலைநீளம் ஒரே போல் இருக்காது. நீங்கள் என்னவேண்டுமென்றாலும் நினைக்கலாம். ஆனால் அதை ஆண்கள் எப்போதும் அவர்கள் மனதில் தோன்றுவதை வைத்து தான் பேசுவார்கள. பின் அது இறுதியில் வாழ்க்கையை முற்றுபுள்ளியாக்கிவிடும்.

எனவே நீங்கள் உங்கள் வாழ்க்கையை நன்கு யோசித்து முடிவெடுங்கள். உங்கள் நண்பன் உங்களுக்கு வாழ்க்கை முழுவதும் ஒரே நிலையில் இருக்க முடியாது. அப்படி இருக்க வேண்டுமெனில் அவனே உங்கள் வாழ்க்கை துணையாக இருக்க வேண்டும். சொல்லப்போனால் இதைப் பற்றி பேசினால் பேசிக் கொண்டே போகலாம். உங்கள் உயிர் நண்பனால், உங்களுக்கும் உங்கள் வாழ்க்கை துணைக்கும் பிரச்சனை வந்தால், நீங்கள் இந்த நேரத்தில் யாருக்கு ஆதரவாக பேசுவீர்கள். முதலில் இதற்கு பதிலளியுங்கள்.

* காதலிருந்தும் பெண்கள் ஏன் காதலை ஏற்க மறுக்கின்றனர்?


காதலிருந்தும் பெண்கள் ஏன் காதலை ஏற்க மறுக்கின்றனர்?


காதல் இல்லாத ஒருவரைக் கூட இந்த உலகில் பார்க்க முடியாது. அந்த அளவில் அது ஒரு உன்னதமான ஒரு தெய்வீக உணர்வு. இவ்வாறு காதல் செய்பவர்களில் அதிகம் யோசிப்பவர்கள் யார் என்று பார்த்தால், அது பெண்கள் தான். ஏனெனில் அவர்களுக்கு சற்று பயம் அதிகம். அந்த பயத்தால் தான் அவர்கள் தனக்கு காதல் இருந்தாலும், அதை வெளிப்படுத்த தயங்குகிறார்கள்.


மேலும் பெண்களின் மனமானது ஒரு பூ போன்றது. அதில் அவர்கள் எப்போதும் சந்தோஷம் வேண்டும் என்று தான் விரும்புவார்கள். மேலும் அவர்கள் மனதில் ஒரு சில கேள்விகள், சந்தேகங்கள் எழுவதாலும் அவர்கள் வெளிப்படுத்த மறுக்கிறார்கள். சரி, இப்போது பெண்கள் எதனால் தங்கள் காதலை ஒப்புக் கொள்ள மறுக்கின்றனர் என்ற உண்மையை அனுபவசாலிகள் கூறுகின்றனர். அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
பெண்களின் காதலில் முதலில் தடையாக இருப்பது அவர்களது பெற்றோர்கள் தான். ஏனெனில் இத்தனை நாட்கள் தன்னை பெற்று வளர்த்தெடுத்த பெற்றோர் தன் காதலை ஒப்புக் கொள்ளவில்லையெனில் என்ன செய்வது என்ற ஒரு பயம், எப்போதுமே அவர்களது மனதில் இருக்கும். இதனால் அவர்கள் தங்கள் மனதில் காதல் இருந்தாலும், அதனை வெளிப்படுத்தாமல், மனதிலேயே வைத்துக் கொள்வர்.

பொதுவாக பெண்கள் காதல் செய்துவிட்டால், காதலிப்பரையே மணக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அது நடக்காவிட்டால், பின் அவர்கள் மனதை கல்லாக்கிக் கொண்டு பெற்றோர் சொல்பவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இவை அனைத்தும் வேண்டுமா என்று நினைத்து, அந்த காதலை மனதிலேயே புதைத்துவிடுவர்.

நமது சமுதாயம் கூட பெண்களின் காதலை வெளிப்படுத்துவதற்கு ஒருவித தடையாக உள்ளது என்றும் சொல்லலாம். ஏனெனில் நமது சமுதாயத்தில் ஜாதி, மதம் போன்றவற்றை அதிகம் பார்ப்பது வழக்கம். இதனால் எவரும் விரும்பியவர்களை மணக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதிலும் ஒரு இந்து பெண், கிறித்துவ ஆணை மணந்துவிட்டால், அந்த சமுதாயம் அதனை வித்தியாசமாக பார்ப்பதோடு, தவறாக பேசுவதால், வீட்டில் இருக்கும் பெற்றோர்களும் அவர்களை ஏற்க மறுகின்றனர். இதுவும் பெண்களின் காதலுக்கு தடையாக உள்ளது. ஆண்கள் தைரியத்துடன் பார்க்கலாம் என்று இருப்பார்கள். ஆனால் பெண்கள் அத்தகையவர்கள் அல்ல.

சில பெண்கள் தைரியத்துடன் காதலித்து தான் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருப்பார்கள். ஆனால் சில ஆண்கள் காதலித்து மணப்பதற்கு தைரியமின்றி, காதலித்தப் பின் அவர்களை விட்டு போய்விடுவார்களோ என்ற எண்ணத்தில், காதல் தனக்கு வந்தாலும் மனதை கல்லாக்கிக் கொண்டு வெளிப்படுத்த தயங்குவார்கள். இந்த விஷயத்தில் பெண்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மேற்கூறிய காரணங்களாலேயே பெண்கள் தங்கள் மனதில் காதல் மலர்ந்தாலும், அவற்றை மறைத்து மனதிலேயே புதைத்துவிடுகின்றனர்.

Monday, May 27, 2013

* பெண்களிடம் ஆண்கள் சொல்லத் தயங்கும் 9 விஷயங்கள்

பெண்களிடம் ஆண்கள் சொல்லத் தயங்கும் 9 விஷயங்கள்


மனதில் வார்த்தைகள் தோன்றினாலும் பேச வாயிருந்தாலும் ஆண்கள் சில விஷயங்களை பெண்களிடம் தெரிவிக்கத் தயங்குகிறார்கள்.பெண்களிடம் ஆண்கள் பல சில விஷயங்களை சொல்லத் துடிப்பார்கள். ஆனால் சொன்னால் எங்கேபிரச்சனையாகிவிடுமோ என்ற பயத்திலேயே சொல்ல மாட்டார்கள்.அவ்வாறு ஆண்கள் பெண்களிடம் சொல்லத் தயங்கும் 9 விஷயங்களைப் பார்ப்போம்.



1. கை நிறைய சம்பாதித்தாலும் அதை ஆண்கள் தங்கள் காதலியிடம் சொல்ல மாட்டார்கள். அப்படியே வற்புறுத்திக் கேட்டாலும் பேச்சை மாற்றிவிடுவார்கள். எங்கே சம்பளத்தை வைத்து தன்னை காதலி மதிப்பிட்டுவிடுவாளோ என்ற பயம் தான் அதற்கு காரணம்.

2. என்ன கன்ட்ராவி புத்தகத்தை படிக்கிறாய். உனக்கு வேறு புத்தகமே கிடைக்காதா என்று கேட்கத் தோன்றினாலும் நல்ல புத்தகம் படி என்றே கூறுவார்கள்.

3. உறவில் ஈடுபடும்போது மனதில் வேறு ஒரு பெண்ணை நினைத்துக் கொள்வதை ஆண்கள் ஒரு நாளும் வெளியே சொல்வதில்லை. உண்மையைச் சொல்லி யார் அடி வாங்குவது.

4. என்ன டிரெஸ் போட்டிருக்க, நீயும் உன் ரசனையும். மேக்கப்பை பார் பேய் மாதிரி இருக்கு என்று சொல்லத் தோன்றினாலும் வாவ் டிரெஸ் சூப்பர், மேக்கப் கூட கரெக்டா இருக்கு என்பார்கள்.

5. 5 நிமிடத்திற்கு ஒரு முறை போன் செய்து உயிரை வாங்காதே என்று பல ஆண்களுக்கு கத்தணும் போல இருக்கும். ஆனால் போன் பணணவில்லையென்றால் உறவு கட்டாகிவிடுமே என்ற பயத்தில் கூற மாட்டார்கள்.

6. முன்னாள் காதலியைப் பற்றி இந்நாள் காதலி பேசுவது ஆண்களுக்கு பிடிப்பதில்லை. அவள் தான் இப்போ என் வாழ்க்கையில் இல்லையே வேறு ஏன் அவளைப் பற்றியே பேசுகிறாய், உனக்கு வேற பேச்சே கிடைக்காத என்று கேட்கத் தோன்றினாலும் அதை கூறத் தயங்குவார்கள்.

7. இந்த காரியத்தை இப்படி செய், அந்த சூழ்நிலையில் இப்படி நடந்துகொள் என்று காதலி அறிவுரை கூறும்போது உன் வேலையைப் பார்த்துக்கிட்டு போ, எனக்கு எப்போ என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் என்று கூற நினைத்தாலும் மௌனமாக இருப்பார்கள்.

8. ஆண்கள் தங்களுக்கு எப்பொழுது தோன்றுகிறதோ அப்போது நண்பர்களை வீட்டு்ககு அழைப்பார்கள். அதை கடைசி நிமிடத்தில் தான் மனைவி அல்லது காதலியிடம் தெரிவிப்பார்கள். அதை கேட்டு பெண்கள் இப்படி கடைசி நிமிடத்தில் சொல்றதே உங்களுக்கு வேலையாப் போச்சு என்று சாமியாடுவார்கள். அப்போது என் நண்பர்கள், நான் எப்பொழுது வேண்டுமானாலும் அவர்களை வீட்டுக்கு அழைத்து வருவேன் என்று நச்சென்று பதில் கூற விரும்பினாலும் அதை மனதுக்குள்ளேயே சொல்லிக் கொள்வார்கள்.

9. நீ கூப்பிட்ட உடனே அந்த இடத்திற்கு வர எனக்கு வேறு வேலையே இல்லையா என்று பெண்களிடம் கேட்க நினைத்தாலும் அதை கேட்கும் துணிச்சல் பெரும்பாலான ஆண்களுக்கு வருவதில்லை.

* பெரிய மார்புகள் மீது ஆண்களுக்கு மோகம் ஏன் தெரியுமா....?


பெரிய மார்புகள் மீது ஆண்களுக்கு மோகம் ஏன் தெரியுமா....?

நமீதா பிடிக்குமா.. திரிஷா பிடிக்குமா என்று கேட்டால் நிறைய ஆண்களுக்கு நமீதாவைத்தான் பிடிக்குமாம். இதற்கான காரணம் ஆண்களின் உளவியல் சம்பந்தப்பட்டது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதாவது பெண்கள் மீதான வெறுப்புணர்வே ஆண்களின் இந்த பெரிய மார்பு மோகத்திற்கு முக்கியக் காரணம் என்பது இந்த நிபுணர்களின் வாதமாகும்.
 
ஒரு சர்வே மூலம் இந்த முடிவை தெரிவித்துள்ளனர் நிபுணர்கள். இந்த உளவியல் காரணம் மட்டுமே ஆண்களின் மோகத்திற்குக் காரணம் என்று முழுமையாக சொல்லாவிட்டாலும் கூட இதுதான் முக்கியக் காரணம் என்று கூறுகிறார்கள் அவர்கள்.

சிறிய மார்பகங்களைக் கொண்ட கீரா நைட்லியை விட பெரிய மார்புகளைக் கொண்ட கிம் கர்தஷியானைத்தான் பெரும்பாலான ஆண்கள் விரும்புவதாக லண்டனில் நடந்த இந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.

பெண்கள் மீதான வெறுப்புணர்வே…


ஆண்களின் இந்த பெரிய மார்பு மோகத்திற்குக் காரணமாக இந்த ஆய்வை மேற்கொண்ட இங்கிலாந்து உளவியாளர்கள் கூறுகையில், பெண்கள் மீதான வெறுப்புணர்வே அதாவது Misogynistic எண்ணமே இதற்கு முக்கியக் காரணம் என்று சொல்கிறார்கள்.

அடி மனதில் தேங்கிக் கிடக்கும் எண்ணம்

இந்த வெறுப்புணர்வானது ஆண்களின் அடி மனதில் தேங்கிக்க் கிடக்கிறதாம். மறைந்து கிடக்கிறதாம். இது வெளிப்படும்போதுதான் ஆண்களின் கவனமும், ஆர்வமும் பெரிய மார்புகள் பக்கம் திரும்புகிறதாம்.

செக்ஸியான எண்ணம் மட்டுமல்ல…

முன்பு செக்ஸியான எண்ணம்தான் ஆண்களுக்கு பெண்களின் பெரிய மார்புகள் பிடிக்கக் காரணம் என்று கருதப்பட்டு வந்தது. தற்போது அவர்களின் மனில் தேங்கிக் கிடக்கும் வெறுப்புணர்வே முக்கியக் காரணம் என்று கூறப்பட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

361 பேரிடம் ஆய்வு…

18 முதல் 68 வயது வரையிலான 361 பேரிடம் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர் வெஸ்டமின்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் வீரேன் ஸ்வாமி மற்றும் மார்ட்டின் டோவி ஆகியோர்.

மூன்றில் ஒரு பங்கு பேருக்கு பெரிது பிடிக்கிறதாம்
கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்கு பெரிய மார்புகள்தான் பிடிக்கிறதாம். அவைதான் கவர்ச்சியாக இருப்பதாக கூறுகிறார்கள்.

15.5 சதவீதம் பேருக்கு சிறியது ஓ.கே.

அடுத்து நடுத்தர மார்புகளுக்கு ஆதரவு கிடைத்துள்ளது. 15.5 சதவீதம் பேருக்கு சிறிய மார்புகள் பிடித்துள்ளதாம்.

8.3 சதவீதம் பேருக்கு மிகவும் சிறிய மார்பகங்களைப் பிடிக்கிறதாம்.

அது சரி பெண்கள் மீது ஏன் ஆண்களுக்கு இப்படி ஒரு வெறுப்புணர்வு.. லாஜிக் புரியலையே…!

* தனிமை ஒரு மனவேதனை.


இன்றைய நவநாகரீக உலகில் ஒருவர் தனியாக இருப்பது என்பதே அதிசயம்தான்."Socializing" என்னும் பெயரில் நமது வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக இணையதளங்கள் 6 வயது குழந்தை முதல் 60 வயது முதியவர் வரை அனைவரையும் உலகத்தோடு பிணைத்து வைத்திருக்கிறது.
இப்படி இணையதள மோகத்தில் சிக்காதவர்கள் கூட, நண்பர்கள் அல்லது காதலன்/காதலியின் பிரசன்சில் தனிமையை தொலைத்திருப்பார்கள்.
எனவே, இன்றைய சூழலில் ஒருவர் தனியாக இருக்கிறார் என்றால் அவர் தீராத மன வேதனையில் உள்ளார் என அர்த்தம். காதல் தோல்வி, ஏமாற்றம், துரோகம் என ஏதாவது ஒருவிதத்தில் பாதிக்கபட்டிருக்கும் இவர்கள், இனி யாரையும் நம்ப வேண்டாம். மற்றவர்களுடன் இருந்து காயப்படுவதை விட தனியாக நிம்மதியுடன் இருப்பதே மேல் என்ற அளவிற்கு தீர்மானித்திருப்பார்கள்.

இந்த முடிவு நடைமுறைப்படுத்துவதற்கு மிகவும் கடினமான ஒன்று. எப்போதும் நண்பர்களுடன் இருந்து பழகியவர்களுக்கு தனியாக இருப்பது என்பது கண்ணை‌‌க் கட்டி காட்டில் விட்டது போல் இருக்கும். ஒரே நாளில் வாழ்க்கையே வெறுத்தது போல தோன்றும். இந்த சிக்கலான சூழலில் இருந்து வெளியே வர அதிக மன வலிமையும் சில எளிமையான டிப்ஸும் தேவை... அந்த எளிமையான டிப்ஸ் இதோ...

தனிமையில் இனிமை - நமது அனைவரது வாழ்விலும் ஏதாவது ஒரு தருணத்தில் கண்டிப்பாக தனிமை அதன் சுயரூபத்தை காட்டும். தனியாக இருப்பது ஒரு பெரிய இழப்பல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள். தனிமையாக இருக்கும் போது நீங்கள் உங்கள் வாழ்வை உங்களின் விருப்பத்திற்கு ஏற்ற விதத்தில் வாழலாம்.
தனிமையை புரிந்துகொள்ளுங்கள் - தனிமையில் இரண்டு வகை உள்ளது. ஒன்று நாமே நம் சந்தோஷத்திற்காக இருப்பது. மற்றொன்று மிக சோகமாக இருக்கும் சமயம் தனிமையில் வாடுவது. இந்த இரண்டாம் வகையான தனிமை படுத்தும் பாட்டை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அச்சமயம் நம்மை புரிந்து கொண்டவர்களிடம், ந‌ம்முடைய வேதனைகளை கொட்டித் தீர்ப்பதால் ஓரளவு அந்த தனிமையிலிருந்து விடுபடலாம்.
தனிமையை புறக்கணியுங்கள் - உங்களை போல் தனிமையில் வாடும் வேறு ஒருவரை‌க் கண்டால் அவரிடம், சாதாரணமாக பேச்சு கொடுங்கள். ஒரு சிம்‌ப்பிளான அறிமுகத்திற்கு பின் நலம் விசாரியுங்கள். இப்படி செய்வதானால், உங்களின் புதிய நண்பரை தனிமையின் பிடியிலிருந்து விடு‌வி‌த்‌திருப்பீர்கள். கொஞ்சம் நேரத்திற்கு உங்களைவிட்டும் தனிமை விலகியிருக்கும்.
குடும்பம் கைகொடுக்கும் - உங்கள் குடும்பத்தினரிடம் அதிக நேரம் செல‌விடு‌ங்கள். உங்களை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது என நீங்கள் எண்ணினாலும், உங்களுக்கு தேவையான அனைத்து சந்தோஷமும் உங்கள் குடும்பத்திலேயே இருக்கலாம்.
தனிமையை வெல்லுங்கள் - தனிமையை மறக்க முயற்சி செய்யுங்கள். சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். சிறு வயதிலிருந்து உங்களை கவர்ந்த விஷயத்தை கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு உபயோகப்படும் வகையில் பொழுதுபோக்கு விஷயங்களை மாற்றி அமையுங்கள்.

இவை அனைத்தையும் விட தனிமையை நொடி பொழுதில் களைய ஒரு வித்தியாசமான, சுவாரஸ்யமான முறை உடனடியாக ஒரு செல்ல‌ப் பிராணி வாங்குவதுதான்.
நாய், பூனை, பறவைகள் என எதுவாக இருந்தாலும் உங்களிடம் இருந்து அன்பு மற்றும் சிறிது அக்கறையை மட்டும் எதிர்பார்க்கும் இவை என்றும் உங்களை மீண்டும் தனிமையில் விடாது என்பது உறுதி.



Sunday, May 26, 2013

* ஆண்கள் பெண்களை ஏமாற்ற காரணங்கள்


ஆண்கள் பெண்களை ஏமாற்ற காரணங்கள்


திருமணம் என்பது அன்பு மற்றும் மரியாதை நிறைந்த இனிய உறவு. அதன் அருமை மற்றும் பெருமையை அறியாத சில ஆண்களால் பெண்கள் ஏமாற்றப்படுகின்றனர். அன்பு ,பாசம், பண்பு கொண்ட பெண்களை சில ஆண்கள் ஏமாற்றுதல், வஞ்சித்தல் மற்றும் மரியாதையின்மையுடனும் நடத்துகின்றர். 



அதில் சில ஆண்கள் சுயநலவாதிகளாக இருப்பதால் பெண்களின் உணர்வுகளோடு விளையாடுகின்றனர். தனது கணவர் இன்னொரு பெண்ணுடன் கள்ள தொடர்பு கொண்டிருந்தால், அதை அப்பெண்ணால் ஏற்க முடியாது. மேலும் அந்த விஷயத்தை சாதாரணமாக விடமாட்டார்கள்.

ஒருவேளை நிலைமையானது கட்டுக்குள் அடங்காமல் போய் விட்டால், சட்டப்படி விவாகரத்து தான் பெறும் நிலைமை ஏற்படும். இவ்வாறாக ஆண்கள் பல வழிகளில் பெண்களை ஏமாற்றுகிறார்கள். அவை என்னவென்று பார்க்கலாம்.....

* ஆண்களுக்கு எப்பொழுதுமே வித்தியாசமான செயலில் ஈடுபடுவதில் அதிக உந்துதல் உண்டு. அவர்கள் தங்கள் வழக்கமான வாழ்க்கையிலிருந்து ஒரு மாற்றம் வேண்டும் என்று நினைக்கின்றனர் மற்றும் காதலை ஒரு உற்சாகமான விஷயமாக நினைக்கின்றனர். அதனால் அவர்கள் தற்போதுள்ள வாழ்க்கையில் சலிப்புத்தன்மைக் கொள்கின்றனர்.

* ஓயாது தொல்லைப்படுத்தும் மனைவியும், ஆண்கள் மற்றொரு பெண்ணின் உறவை நாடக் காரணமாக இருக்கிறார்கள். ஏனெனில் மற்ற பெண்களாவது தம்மை நன்றாக புரிந்துக் கொண்டு, அன்பு காட்டுவார்கள் என்று நினைத்து, மனைவியை விட்டு செல்கின்றனர்.

* பல ஆண்களுக்கு வணிக பயணங்களின் போது மற்றொரு பெண்ணிடம் உறவு வைத்துக் கொள்ள போதுமான வாய்ப்புகள் கிடைக்கும். மனைவி தூரத்தில் இருக்கின்ற காரணத்தினால், சபல புத்தியுள்ளவரால், மற்றொரு பெண்ணோடு நேரத்தை செலவிடுவதை தவிர்க்க முடியாது. ஆகவே சபலபுத்தியும், பெண்களை ஏமாற்றுவதற்கு ஒரு காரணம்.

* ஆண்கள் பெரும்பாலும் எளிதில் பெண்களை கவரும் தன்மையுடையவர்கள். அதற்கு மற்றொரு பெண்ணிடம் தங்கள் பார்வையை பதித்து மற்றும் ஏதாவது புது முயற்சிகள் செய்து, அவர்கள் கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப முயற்சிப்பர்.

* சில நேரங்களில் ஆண் தன்னுடைய ஆண் அகம்பாவத்தினால், வேறொரு பெண்ணின் துணையை நாடுவது, அவ்வளவு பெரிய தவறில்லை நியாயமானது தான் என்று கருதுகின்றனர்.

* தம்பதியினர் இடையே இணக்கமற்ற நிலையோ அல்லது ஒற்றுமையின்மையோ இருந்தால், அது அந்த ஆணை வேறொரு பெண்ணிடம் ஆறுதல் தேடி போக செய்யும்.

* மனைவி விசுவாசமில்லாதவளாக இருக்கின்ற பட்சத்தில், ஆணும் பின்னர் தன் மனைவியை ஏமாற்ற முயற்சிப்பான். அவனும் அதற்கான நேரம் பார்த்து காத்துகொண்டிருப்பார். நேரம் வரும் போது பழிவாங்க விரும்புவான்.

* ஆண்கள் தங்கள் மனைவிமார்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்ற எண்ணத்தால், மற்றொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள். இந்த விஷயம் மனைவிக்கு தெரிய வரும் போது அவர்களுக்குள் இடைவெளி அதிகமாகி பிரிய நேரிடுகிறது.

Saturday, May 25, 2013

* கணவர் தெரிந்து கொள்ள வேண்டிய மனைவிக்கு பிடிக்காத விஷயங்கள்:


கணவர் தெரிந்து கொள்ள வேண்டிய மனைவிக்கு பிடிக்காத விஷயங்கள்:

* உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும். உடனே மிகவும் சந்தோஷமாகி விடுவார்கள்.

* உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும்.

* வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமாவில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரி சமமாக நடத்த வேண்டும்.

* காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது. அவர்கள் தேவையை அவர்களே பொறுப்பாக பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

* விடுமுறை நாட்களில் விரும்பியபடி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.

* எந்த ஒரு விஷயத்தையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது.

* சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும். அலுவலம் விடுமுறை தினங்களில் கணவர் சமைக்க வேண்டும் என்று மனைவி விரும்புவார்கள். அன்று ஒரு நாள் மட்டுமாவது சமையலுக்கு விடுமுறை கிடைக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

* “இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது…’ என பாராட்ட வேண்டும். எந்த ஒரு விஷயத்திற்கும் கணவர் பாராட்ட வேண்டும் என்று விரும்புவார்கள்.

* மனைவி எப்படி இருக்க வேண்டும் ? - என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.


மனைவி எப்படி இருக்க வேண்டும் ? - என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டிய நிதானத்தையும், எச்சரிக்கையையும் இந்து மதம் வலியுறுத்துகிறது. அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே என்பது இந்துக்களின் எச்சரிக்கை பழமொழி.

ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும் போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்த காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே! உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறி விடுகிறான். எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு பிடிக்கிறது. அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான். பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவளுக்கு வந்து சேருகிறாள்.

பூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனது பார்வை லயித்து விட்டால், அந்த சரீரத்துக்குள்ளே இருக்கும் இதயத்தின் சலனத்தை, சபலத்தை, அகங்காரத்தை, மோசத்தை, வேஷத்தை அவன் அறிய முடியாமல் போய் விடுகிறது.

ஆனால், ஆத்மாவின் ராகம் கண்களை மட்டுமே கவனிக்கிறது. அவளது கருநீல கண்கள் அவனை பார்த்து நாணுவதிலும், அச்சப்படுவதிலும் ஆத்மாவின் புனிதத் தன்மை வெளியாகிறது. அங்கே உடல் உருவம் மறைந்து, உள்ளமே மேலோங்கி நிற்கிறது.

புனிதமான அந்தக் காதலை அறியாதவர்கள், உடல் இச்சையால் தவறான பெண்களை மணந்து, நிம்மதி இழந்து விடுகிறார்கள். எதிர்காலக் குடும்ப நிம்மதியையும், ஆனந்தத்தையும் நாடும் இளைஞர்கள், சேவை செய்வதில் தாசியை போலவும், யோசனை சொல்வதில் மந்திரியை போலவும், அழகில் மகாலட்சுமியை போலவும், மன்னிப்பதில் பூமாதேவியை போலவும், அன்போடு ஊட்டுவதில் அன்னையை போலவும், மஞ்சத்தில் கணிகையை போலவும் உள்ள பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறது வடமொழியில் உள்ள ஒரு சுலோகம்.

பார்ப்பதற்கு லட்சுமி மாதிரி இருக்கிறாள் என்கிறார்களே, அந்த மகாலட்சுமியை போன்ற திருத்தமான அழகு அந்த பெண்ணுக்கு இருக்க வேண்டும். அழகு என்றால், முடியை 6 அங்குலமாக வெட்டி, ஜம்பரைத் தூக்கிக் கட்டி, முக்கால் முதுகு பின்னால் வருவோருக்கு தெரிகிற மாதிரி ஜாக்கெட் போட்டு, பாதி வயிற்றையும் பார்வைக்கு வைக்கும் நாகரீக அழகல்ல.

காஞ்சீபுரம் கண்டாங்கி கட்டி, அரைக்கை ரவிக்கை போட்டு, ஆறடி கூந்தலை அள்ளி முடித்து, மல்லிகைப் பூச்சூடி, முகத்துக்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து, கால் பார்த்து நடந்து வரும் கட்டழகையே, மகாலட்சுமி போன்ற அழகு என்கிறார்கள். அத்தகைய பெண், பார்க்கும் போது கூட நேருக்கு நேர் பார்க்க மாட்டாள்.

எந்தவொரு ஆடவனின் அழகும் ஒரு பெண்ணின் பார்வையில் திடீர் அதிர்ச்சியைத் தரும் என்றாலும், மகாலட்சுமி போன்ற குலப்பெண்கள் அந்த அதிர்ச்சிக்கு பலியாகி விடுவதில்லை. இடிதாங்கி, இடியை இழுத்து பூமிக்குள் விட்டுவிடுவது போல், அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவள் விரட்டி விடுவாள்" என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

மேலும் சில தகுதிகளும் மனைவியாக வரும் பெண்ணுக்கு வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். அவர், பெண்களுக்கு இருக்க வேண்டும் என்று குறிப்பிடும் பண்புகள்

கணவனது சினத்தை தணிக்கும் கருவியாக அவள் இருக்க வேண்டும். மாறாக, அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி குடும்பத்தை இரண்டாக்கி விடக்கூடாது.

அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில் அவள் தாய் போல் இருக்க வேண்டும்.

பள்ளியறையில் அவள் கணிகையை போலவே நடந்து கொள்ள வேண்டும். அதாவது, கணிகையின் சாகசம், சாதுர்யம், ஊடல், கூடல் அனைத்து உள்ளவளாக இருக்க வேண்டும்.

மீண்டும், மீண்டும் அவளையே பார்க்க வேண்டும் என்ற ஆசை கணவனுக்கு ஏற்பட வேண்டும்.

- இப்படிப்பட்ட ஒரு பெண்ணை மணந்து கொண்டவன் பெரும்பாலும் கெட்டுப் போவதில்லை; வாழ்க்கையில் தோல்வியடைவதும் இல்லை என்கிறார் கண்ணதாசன்.

நல்ல பெண்ணை மணந்தவன் முட்டாளாக இருந்தாலும் அறிஞனாகி விடுகிறான். அவன் முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும் என்றும் கூறும் கண்ணதாசன், தவறான பெண்ணை ஒருவன் மனைவியாக்கிக் கொண்டாள் அவன் அறிஞனாக இருந்தாலும் முட்டாளாகி விடுகிறான், அவன் முகத்தில் ஒளி மங்கி விடுகிறது என்றும் கூறுகிறார்.

சரி... நல்ல பெண்களை கண்டுபிடிப்பது எப்படி என்பதற்கும் அவரே ஐடியா தருகிறார்.

தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால், மகளை படிக்கட்டில் பார்க்க வேண்டாம் என்பார்கள். இதேபோல், தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை என்பார்கள். அதாவது, தாயைப் போல் தான் அவளது மகளும் இருப்பாள் என்பது இதன் அர்த்தம். இன்றைய இளைஞர்கள் பெண்ணின் தாயை பார்ப்பது இல்லை. மனைவியாக வரும் பெண்ணின் வாளிப்பான அங்கங்களே அவனது நினைவை மயக்குகின்றன. இதனால் தான் பெற்றோர் பார்த்து மகனுக்கு பெண் தேட வேண்டும் என்கிறார்கள்.

பெற்றவர்கள் பெண் பார்க்கும் போது, பெண்ணின் குலம், கோத்திரம் அனைத்தையும் ஆராய்ந்த பிறகுதான் பேசி முடிக்கிறார்கள். இத்தகைய நிதானமாக அறிந்து முடிக்கப்பட்ட திருமணங்கள், 100க்கு 90 சதவீதம் வெற்றிகரமாக அமைந்திருக்கின்றன.

ஆத்திரத்தில் காதல், அவசரத்தில் கல்யாணம் என்று முடிந்த திருமணங்கள், 100க்கு 90 தோல்வியே அடைந்திருக்கின்றன. ஆகவே, ஆயுட்கால குடும்ப வாழ்க்கைக்கு நிம்மதி வேண்டும் என்றால், பெண் தேடும் பொறுப்பை பெற்றோர்களிடமே விட்டுவிட வேண்டும்"என்கிறார் கண்ணதாசன்.

தன்மானத்திற்காக எதையும் இழக்கலாம்
எதற்காகவும் தன்மானத்தை இழக்கக்கூடாது. 

Thursday, May 23, 2013

* என் மனைவிதான் வேலை பார்க்கவில்லையே!


என் மனைவிதான் வேலை பார்க்கவில்லையே!


 மகளிர் தின சிறப்புப் பதிவு!
.....................................................

ஒரு கணவன் தான் ஒருவனே வேலை சென்று சம்பாதித்துக் குடும்பத்தைக் காப்பாற்றுவதால் மிகவும் சோர்வடைந்திருப்பதாக எண்ணினான்.

தன் மனைவி வேலைக்குச் செல்லாமல் வீட்டில் அமர்ந்து சுகமாகச் சாப்பிட்டுக் காலம் கழிப்பதாகவும் எண்ணினான்;இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக ஒரு மன நல மருத்துவரைப் பார்க்கப் போனான்.

அங்கு நடந்த உரையாடல்.....

மருத்துவர்:நீங்கள் என்ன செய்கிறீர்கள்,குமார்?

குமார்:ஒரு வங்கியில் அதிகாரி.

ம:உங்கள் மனைவி?

கு:அவள் வேலை பார்க்கவில்லை

ம:காலை உணவை உங்கள் வீட்டில் யார் தயார் செய்கிறார்கள்?

கு:என் மனைவிதான்;அவள்தான் வேலை பார்க்கவில்லையே!

ம:காலை எத்தனை மணிக்கு உங்கள் மனைவி எழுந்திருக்கிறாள் என்பது 
உங்களுக்குத் தெரியுமா?

கு:5 மணிக்கே எழுந்து விடுகிறாள் என நினைக்கிறேன்.ஏனென்றால் வீடு சுத்தம் செய்து குளித்து காலைப் பலகாரம் செய்து,பின் எல்லோருக்கும் கையில் கொடுப்பதற்கு மதிய உணவும் தயார் செய்ய வேண்டுமே!

ம:குழந்தைகள் பள்ளிக்கு எப்படிப் போகிறார்கள்?

கு:பள்ளி அருகில்தான் ;மனைவியே அழைத்துச் செல்வாள்;அவள்தான்  வேலை பார்ப்பதில் லையே!

ம:அதன் பின் உங்கள் மனைவி என்ன செய்வார்கள்?

கு:கடைக்குப் போவாள் திரும்பி வந்து துணி துவைப்பாள்;துவைத்த துணிகளை இஸ்திரி போட்டு வைப்பாள்.அவள்தான் வேலை பார்க்கவில்லையே!

ம:மாலை வீடு திரும்பியதும் நீங்கள் என்ன செய்வீர்கள்?

கு:நாள் முழுவதும் உழைத்தது களைப்பாக இருக்காதா?ஓய்வெடுப்பேன் ; தொலைக்காட்சி பார்ப்பேன்.

ம:உங்கள் மனைவி என்ன செய்வாள்?

கு:குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பாள்.இரவு உணவு செய்வாள் குழந்தைகளுக்கு உணவு கொடுத்துத் தூங்கச் செய்வாள்.பின் நான் சாப்பிடுவேன்.பின்னர் அவள் பாத்திரங்கள், சமையல் அறை சுத்தம் செய்து தூங்கப் போவாள்.

ம:இதிலிருந்து என்ன தெரிகிறது?

அதிகாலை முதல் இரவு வரை உழைக்கும் ஒரு பெண்ணை ”வேலை பார்க்க வில்லை” என்று சொல்கிறீர்கள்.அவர்கள் செய்யும் வேலையை நீங்கள் மதிக்கவில்லை!

ஒரு வீட்டை நிர்வகிப்பது என்பது கடினமான பணி;அதைச் செய்கிறாள் அவள்.வாழ்க்கை யென்னும் நாடகத்தில் மிக முக்கியமான பாத்திரம் மனைவி!
மனைவியைப் புரிந்து கொள்ளுங்கள்;பாராட்டுங்கள்.அவள் செய்யும் தியாகங்கள் கணக்கற்றவை!

பரஸ்பரப் புரிதல் இருந்தால் வாழ்க்கை இன்ப மயமாக இருக்கும்!

* சிரித்து வாழ வேண்டும்!


சிரித்து வாழ வேண்டும்!


மகிழ்ச்சி என்பது பட்டாம்பூச்சி மாதிரி
துரத்தத் துரத்த விலகிப் பறக்கும்
கவனத்தை வேறு புறம் திருப்பினால்
தானே வந்து தோளில் அமரும்!

மகிழ்ந்திருக்க இடம் இதுதான்
மகிழ்ந்திருக்க நேரம் இப்போதுதான்!

இயலும்போதெல்லாம் சிரியுங்கள்
மாற்ற முடியாததை மாற்ற எண்ணி
மகிழ்ச்சியைத் தொலைக்காதீர்.

வாழும் நாள் சிறிது
வாழும் வரை மகிழ்ச்சியாய் இருங்கள்!

மகிழ்ச்சி ஒரு தொற்று நோய்;
உங்கள் மகிழ்ச்சி
சுற்றியுள்ளோரையும் மகிழ்ச்சியாக்கும்!

வயதானதால் நீங்கள் சிரிக்க மறக்கவில்லை;
சிரிக்க மறந்ததால் வயதானவராகி விட்டீர்கள்!

மற்றவர்க்காகத் துடிக்கும் இதயமே
மகிழ்ச்சி நிறைந்த இதயம்!

ஒரு நாள் எல்லாமே தெளிவாகும்
இன்று குழப்பங்களைக் கண்டு சிரியுங்கள்
கண்ணீரின் ஊடாகவும் சிரியுங்கள்
நினைவு கொள்ளுங்கள்
காரணம் இன்றிக் காரியம் நடப்பதில்லை!

* வாழ்க்கை கேள்வித்தாளா?கழிப்பறைத்தாளா?

வாழ்க்கை கேள்வித்தாளா?கழிப்பறைத்தாளா?


”நான் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன்” இதற்கு வழி என்ன? கேட்டேன்

ஞானி சொன்னார்”உன் கேள்வியில் இருக்கும் ”நான்” என்பதை எடுத்து விடு!அடுத்து நீ சொன்ன ”விருப்பம்”என்பதை எடுத்து விடு.எஞ்சியிருப்பது மகிழ்ச்சியாக இருப்பது மட்டும்தான்!”

ஆம்!முதலில் அகந்தை அகல வேண்டும்;பின் ஆசை அகல வேண்டும்;மகிழ்ச்சி தானே வரும்! 

......................................................................


தேவைப்படும்போது மட்டுமே பிறர் நம்மைப் பற்றி நினைக்கிறார்களே என வருத்தப் பட வேண்டாம்;இருட்டில் இருக்கும் போது ஒரு மெழுகுவர்த்தியின் நினைவு வருவது போல் அது எனப் பெருமை அடையுங்கள்

....................................................................

சிறுவர்களாய் இருக்கும்போது பென்சில் உபயோகித்தோம்.பெரியவர்களாக ஆனபின் பேனா உபயோகிக்கிறோம்.ஏன் தெரியுமா?

சிறுவயதில் செய்யும் தவறுகளை அழிக்க முடியும்.

ஆனால் வயதான பின்னரோ?!

..................................................................

நேற்று என்பது குப்பைத் தாள்
இன்று என்பது செய்தித் தாள்;
நாளை என்பது கேள்வித்தாள்
கவனமாகப் படியுங்கள்.
சிந்தித்து விடை அளியுங்கள்
இல்லையென்றால் வாழ்க்கை
கழிப்பறைத் தாளாகி விடும்!

................................................................

பிறந்த நாள் என்பது என்ன?
வாழ்க்கையில் ஒரே ஒரு நாள்,
நீங்கள் அழுதபோது
உங்கள் தாய் சிரித்த நாள்!—(டாக்டர் அப்துல் கலாம்)

.....................................................................
ஒருவரால் கவரப்படுவதற்கு ஒரு மணித்துளி போதும்
ஒருவரைப் பிடிக்க ஒரு மணி நேரம் போதும்
ஒருவரைக் காதலிக்க ஒரு நாள் போதும்
ஒருவரை மறக்க ஒரு வாழ்நாள் போதாது!

Wednesday, May 22, 2013

* நாளை என்பது நம் கையில் இல்லை!

நாளை என்பது நம் கையில் இல்லை!

யார் மீதேனும் வருத்தமா
யாரோடேனும் சண்டையா
சரி செய்ய யாரும் இல்லையா?
நீங்களே முயலுங்கள் 
உடன் சரி செய்ய!
இன்று அவரும் விரும்பலாம்
உங்களுடன் நட்பாயிருக்க
இன்றில்லையென்றால்
நாளை காலம் கடந்து போய் விடலாம்!

யாரையேனும் நேசிக்கிறீர்களா,
அவருக்கு அது தெரியாமலே?
உடனே சொல்லி விடுங்கள்
இன்று அவரும் உங்களை நேசிக்கலாம்
நாளை காலம் கடந்து விடக்கூடும்!

உங்களை மறந்து விட்டாரென்று எண்ணும்
நண்பர் மீது இன்னமும் நட்பா?
உடனே சொல்லி விடுங்கள்!
அவர் இன்னும் உங்கள் மீது
நட்புடன் இருக்கலாம்.
நாளை காலம் கை நழுவிப் போனதாகலாம்!

 எவருடையதேனும் நட்புஅணைப்புக்கு ஏக்கமா?
இன்றே வேண்டும் எனக் கேட்டு விடுங்கள்.
கட்டிப்பிடி வைத்தியம்
அவருக்கும் தேவைப்படலாம்.
இன்று நீங்கள் கேட்கத் தவறினால்
நாளை காலம் கடந்து போயிருக்கலாம்!

உண்மையான நண்பர்களைப்
பாராட்டுகிறீர்களா?
இன்றே சொல்லி விடுங்கள்.
அவர்களும் உங்கள் நட்பைப்
பாராட்டக்கூடும்
இன்று அவர்கள் எங்கோ
விலகிச் சென்று விட்டால்
நாளை கால தாமதமாகி விடலாம்.

இறுதியாக
உங்கள் பெற்றோரை அதிகமாக நேசிக்கிறீர்களா?
இன்று வரை அதை  வெளிக்காட்டியதில்லையா?
உடன் செயல் படுங்கள்.
இன்று அவர்கள் இருக்கிறார்கள் உங்களுடன்
உங்கள் அன்பை வெளிக்காட்ட
நாளை ?

* வாழ்க்கையின் யதார்த்தங்கள்.


வாழ்க்கையின் யதார்த்தங்கள்.

உங்களது ஆரம்பம் மட்டும் முடிவல்ல.
முன்னேற்றம் என்பது இறுதி அல்ல.வரவுகள்
சுகம் சுகமல்ல.இழப்புக்கள் மட்டும் தோல்வியல்ல.
தோல்விகளால் முடங்கிவிடாதீர்கள்.
முடங்குவிட்டீர்கள் என்றால் எழும்பவே ஏலாது.
வாழ்கையை அனுபவிக்க இன்பம் துன்பம் இரண்டும் தேவை.
இன்பத்துக்கும் துன்பத்துக்கும் நாமே காரணம் என எண்ணுங்கள்.
உங்களது வாழ்க்கையின் மேடு பள்ளங்கள் எல்லாவற்றுக்கும்
உங்கள் வாழ்க்கையின் வகுத்தலில் இட்ட தவறே காரணம்.
இறந்த பின் புகழ் பாடுவோர் அதிகமே.
பெற்றோரை அன்பில் புலத்துக்குள் அழைப்பவர்கள்
ஏன் பேஸ்மன் காவலாளியாக்கிறார்கள்.
பிள்ளைகளின் அன்புக்கு பெற்றோரின் அன்பு கீழ்தரமாகின்றது.
பெற்றோரின் கீழ்தரமான நோக்கு பிள்ளைகளை நோகடிக்கின்றது.
தாய்மை என்பது மேன்மையானது.மேன்மையான தாய்மையை சில தாய்களின் நடத்தைகள் தாய்மையை கொச்சப்படுத்துகின்றார்கள்.
ஆண்பிள்ளைகள் சுதந்திரம் பெண்களுக்கு இல்லையே ஆனால் அந்த ஆணின் நடத்தைக்கு பெயர்கள் றவுடி,காமுகன் என நீளும்.
பெண்களிடம் சுதந்திரம் என்பதால் பரம்பரையே தப்பான பாதைக்கு எடுத்து செல்கிறார்கள்.
இருக்கும்போது மதிப்பளுக்காதோருக்கு இறந்த பின் மதிப்பளிப்பதால்
புகழ்பாடிய எங்களை பிணம் கூட காறி துப்பும்.
சமூகவாதி வாழும்போது இடைஞ்சல் கொடுப்போர் இறந்த பின் புகழ் பாட முன் வகிப்பவர்களே அதிகம் வாழும் சமூகம்.
இருக்கும் போது ஒழுங்கான உணவு வழங்கார் இறந்தபின் எட்டு,செலவு, அந்தியட்டி என படையல்கள்.
வறுமையில் இருக்கும்போது நீ யாரோ நான் யாரோ பணம் வர வர உறவுகள்,நண்பர்கள் என கூட்டம் சேரும்.
ஒருவனுக்கு உதவ நினைத்தால் அவனிடம் பணமாக வளங்காதீர் அவன் தொழில் ஒன்றுக்காய் உதவுங்கள்.
நம்புவனையே நம்பிக்கொண்டே இருப்பதும் நம்பிக்கையற்றவனை நம்ப வைப்பதற்கு முயற்சிசெய்வதும் ஆபத்தானது.

Monday, May 20, 2013

* வெளிநாட்டு வாழ்க்கை



வெளிநாட்டு வாழ்க்கை

வெளிநாட்டில் வாழ்பவர்களை நாட்டுக்கு வரவிடாமல் தடுப்பது எது? யார் என்ன சொன்னாலும் நாட்டில் இருப்பவர்கள் இன்னும் வெளிநாடு வர துடிப்பதுக்கு எது காரணம்.
எல்லாவற்றிற்கும் ஒரு காரணம், ஒரே காரணம் பணம்.
பணம். பணம். பணம்.

சம்பாதித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற ஆசை. வெளிநாடு சென்றால்தான் ஊரில் உள்ள கடன்களை அடைக்க முடியும் என்ற சூழ்நிலை.
உண்மை வரிகள் ....
•பிறந்த நாட்டை விட்டு
பிரிந்து
உறவுகளை விட்டுவிட்டு
தனியனாய்
உரிமைகள் அற்று
சிதறி
கற்பனை வாழ்வில் மட்டுமே
கனவுகளில் லயித்து
நிஜமற்ற கானல்நீராய் நீள்கிறது
எங்கள் வாழ்க்கை!

•எனக்கொரு கனவு
கடனில் இருக்கும் வீட்டை
என் காலத்திலாவது
கட்டி மீட்டிட வேண்டும்!

•நண்பனுக்கொரு கனவு
தன்னோடு கஷ்டம் போகட்டும்
தன் தமையன்களுக்காவது
நல்ல படிப்பை நல்கிட வேண்டும்!

•அறைத் தோழன்னுக்கோர் கனவு
அப்பாவின் ஆப்பரேசனுக்கு
பணம் சேர்த்து
மீளாத் துயரில் இருக்கும்
குடும்பத்தை மீட்டிட வேண்டும்!

•தோழியின் கனவு
தான் முதிர்கன்னி ஆகிவிட்ட போதும்
தன் தங்கைகளுக்கு
திருமணம் செய்து பார்த்து
மகிழ்ந்திட வேண்டும்!

•இப்படியாய் நாங்கள்
கனவுகள் வெவ்வேறு
பணம் ஒன்றே பிரதானமாய்
எல்லோரும் வெளிநாட்டில்!

•காய்ச்சல் வந்ததென்றால்
கஞ்சி கொடுக்க தாயில்லை.
அன்பை பகிர்வதற்கு
அருகில் என் தங்கை இல்லை.
அதிகாரம் செலுத்திட
அருகாமையில் அப்பா இல்லை.
சோகம் சுமந்தோமேன்றால்
ஆற்றுவதற்கு ஆளில்லை.
சொல்லொண்ணா துயரில்
நாங்களும் அனாதைகள்தான்.
நாடுகடந்து வாழ்வதால்
நாங்களும் அகதிகள்தான்!

•அம்மா அழைக்கிறாள்
உன்முகம் பார்த்து
நாளாச்சு..
கண்ணுலையே நிக்குற..
வந்து காட்டிட்டு போ
உன் முகத்தைன்னு!

•தகப்பன் சொல்கிறார்
தங்கச்சிக்கு மாப்ள
பாத்துட்டேன்..
கல்யாணத்துக்கு
பணம் பத்தல
அனுப்பி வைப்பான்னு!

•தம்பி கேட்கிறான்
அண்ணா..நான் நடந்தே
பள்ளிக்கூடம் போறேன்
சைக்கிள் ஒன்னு
வாங்கி தாணான்னு!

•தங்கை கேட்கிறாள்
கண்டிப்பா
என் கல்யாணத்துக்கு
வருவியான்னு!
•முகத்தில் மலர்ச்சி காட்டி
உள்ளத்தால் அழுகின்றோம்
எப்போ விடியும்

* The Real life in Gulf வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே!


பிறந்த நாட்டை விட்டு
பிரிந்து
உறவுகளை விட்டுவிட்டு
தனியனாய்
உரிமைகள் அற்று
சிதறி
கற்பனை வாழ்வில் மட்டுமே
கனவுகளில் லயித்து
நிஜமற்ற கானல்நீராய் நீள்கிறது
எங்கள் வாழ்க்கை!

* வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே! இல்லை சாதனை -


வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே! இல்லை சாதனை - தினார்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து விட்டு மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கிக் கிடக்கும் மீன் குஞ்சுகள் நாங்கள்.....

நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை! வாலிபத்தை!!
இழப்பீடு கிடைக்காத இழப்பு இது , நஷ்ட்டஈடு கிடைக்காத நஷ்ட்டம் இது...

* வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே! இல்லை சாதனை -


வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே! இல்லை சாதனை - தினார்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து விட்டு மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கிக் கிடக்கும் மீன் குஞ்சுகள் நாங்கள்.....

நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை! வாலிபத்தை!!
இழப்பீடு கிடைக்காத இழப்பு இது , நஷ்ட்டஈடு கிடைக்காத நஷ்ட்டம் இது...

* வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே! இல்லை சாதனை


வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே! இல்லை சாதனை - தினார்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து விட்டு மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கிக் கிடக்கும் மீன் குஞ்சுகள் நாங்கள்......

* வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே!


வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே! இல்லை சாதனை - தினார்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து விட்டு மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கிக் கிடக்கும் மீன் குஞ்சுகள் நாங்கள்.....

நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை! வாலிபத்தை!!
இழப்பீடு கிடைக்காத இழப்பு இது , நஷ்ட்டஈடு கிடைக்காத நஷ்ட்டம் இது...

Sunday, May 19, 2013

* வெளிநாட்டு வாழ்க்கை


வெளிநாட்டு வாழ்க்கை


வெளிநாடு என்று வருபவர்கள்
இங்கு..
வெள்ளி சிதறிக் கிடக்கும் என்றும்
தங்கம் பொங்கி வழியும் என்றும்
காசு தேசம் முழுதும் கொட்டிக் கிடக்கும் எனவும்
நினைத்துக் கொண்டா வருகிறார்கள்?

சின்ன கஷ்டமும் படாமல்
பகட்டு வாழ்வு வேண்டுமாம்…..

ஊரில்…
என் சொத்தின் மதிப்புத் தெரியுமா?
என் அந்தஸ்து மரியாதை பற்றி விளங்குமா?
படித்தவன் நான்…

இப்படியெல்லாம் பீற்றுவதால்
இங்கு உய்வுண்டா?

மாஞ்சோலை நிழல் பற்றி
தீஞ்சுவை பலா பற்றி
வயல் பற்றி கடல் பற்றி
அயலிலிருந்த திடல் பற்றி
இரைமீட்டுப் பார்ப்பதிலே
இடைஞ்சல் இல்லைதான்

ஆனால்..
எந்நேரமும் பிரஸ்தாபித்தால்
இந்நேரம் வீணல்லவா?

வந்திறங்கி மூன்று நாளிருக்காது..
இதுதான் வெளிநாடா? ஒருவித சலிப்பு
எங்கள் நாடுபோல் வருமா? ஒரு பீற்றல்
வந்து மாட்டிக்கொண்டோம்! ஒரு பிதற்றல்

வந்து இறங்கிவிட்டாய்.. சரி..
வாழ்ந்து பார்க்க வேண்டாமா?

ஒரு பழமொழியுண்டு…
அமெரிக்காவில் அமெரிக்கனாயிரு..!
ஆனால்..
மறத் தமிழனென்பதை
மறவாதிரு!