Sunday, September 22, 2013

* விபச்சாரியின் முந்தானை வாசம்


விபச்சாரியின் முந்தானை வாசம்

விரிச்சி விரிச்சி மடிச்ச பாய்க்கு
ஒரு படி சோறு மிச்சம்; எங்க
வாசம் வீசும் முந்தானைக்கு - அவிசாரின்னு
பட்டம் மிச்சம்!

கயிறு கட்டி புடவை கட்டி
உடம்பெல்லாம் வாசம் வீச;

விரிச்ச பாயி அத்தனையும் - என்
புள்ளை குடும்பம் தின்ன சோறு!

கூவி கூவி வித்ததில்லை
உடம்பு விலை பத்துரூபா; இங்கு
மாறி மாறி வந்தவனுங்க - மானம்
ரோஷம் எத்தனை ரூபா?!

உடம்பு காசு தொழிலா - இது
உடம்பு சுகம் - போதைப் பித்து;
நோய் வரும் - உயிரு போகும்
வேஷம் போட்ட வாழ்க்கை இல்லையே!

மேஞ்சி உடல் தின்னதால -
காமம் காமம் வாசம் தானே; நாங்க
விட்ட ஏப்பம் அத்தனையும் -
பலரு குடும்பம் கெடுத்த கதைங்க தானே?!

காலம் காலமா வந்த சனங்க -
கணக்குல வேணாம் விட்டுத் தள்ளு;
காலு தட்டு விழுந்த பொழப்பா -
கணக்குதுங்க எங்க வாழ்க்கை!

இரத்தம் சுண்டி நிக்கையில - உடம்பு
வெடிச்சி சாகையில - நாயி கூட
மோன்டு போகுமோ (?) இவ
வேசி தானேன்னு உமிழ்ந்து கூறுமோ?!

நாண்டுகிட்டு சாகலாம்னு - குடும்ப பாரம்
கணக்கையில; விதி
உடம்பெதுக்கு விற்கதான்னா -
இந்த சிறுக்கி புள்ள என்ன செய்ய?!

பல நாளு தயங்கி தயங்கி
விட்ட பயணம் எத்தனையோ;
இதோ.... அடுத்த ஆளு கதவைத் தட்டுதே
திறக்கவா... வேண்டாமா?

சரி... சரி;
மனசே மனசே கொள்ளாத.....
இன்னைக்கு மட்டும் வெச்சிகிட்டு -
நாளைலருந்து நிறுத்திக்கவா? !!

நான் பார்க்கும் உலகம்

No comments:

Post a Comment