Saturday, June 1, 2013

* காதல் ஒருமுறைதான் வருமா...?


காதல் ஒருமுறைதான் வருமா...?


காதல்.... இந்த வார்த்தையை வாசிக்கும் போதே சிலருக்கு உற்சாகம் பீறிடும். சிலருக்கு வயிற்றில் பட்டாம் பூச்சி பறக்கும். எண்ணற்ற நபர்களுக்கு அற்புதங்களையும் மாயஜாலாங்கள் நிகழ்த்தக்கூடியதுதான் காதல்.

காதல் ஒருமுறைதான் வரும் என்பதெல்லம் ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தை. வயிற்றில் உணவு இல்லாத போது பசி எடுப்பது போல மனதிற்கு உற்சாகமும் நம்பிக்கையும் தரும் ஒருவர் வந்து சேரும் போதெல்லாம் காதல் வரும் என்கின்றனர் அனுபவசாலிகள்.

பதின் பருவம் தொடங்கி பாடையில் போகும் வரை எல்லா கால கட்டங்களிலும் பல்வேறு நபர்களிடம் பலவிதங்களில் காதல் வருமாம். ஆனால் பலரும் மனதில் அரும்பிய காதலை வெளியே காட்டுவதில்லையாம்.

காதல் வரும் போது அதை வெளிப்படுத்திவிட்டால் மனதில் பாரங்கள் இருக்காது. அதை மறைக்க மறைக்கதான் அழுத்தம் அதிகமாகி ஒருநாள் வெடித்து சிதறிவிடும்.எதற்காக காதலிக்கிறீர்கள் என்று கேட்டால் அவள் அல்லது அவன் கிடைத்தால் என்னுடைய வாழ்க்கை சந்தோசமாகவும், நிம்மதியாகவும் இருக்கும் என்று கூறுவார்கள். ஆனால் இது முற்றிலும் சுயநலமான வார்த்தை என்பதை யாரும் உணர்வதில்லை.

காதல் என்பது விட்டுக்கொடுத்தல், தான் விரும்பும் நபர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுதல், தன்னை விட தான் விரும்பும் நபர் நலமாக இருக்கவேண்டும் என்றுதான் காதலிப்பவர்கள் நினைக்கவேண்டுமே தவிர தன்னுடைய நலனுக்காக காதலிப்பவர்கள் தோற்றுத்தான் போகின்றனர்.

எனவேதான் சுயநலவாதிகள் எல்லோருக்கும் தோல்வியை பரிசாக அளிக்கிறது காதல்.
காதலியோ மனைவியோ கவனிக்காவிட்டால் கைவிட்டு போய்விடுவார்கள். எனவே காதலிப்பது எந்த அளவுக்கு முக்கியமோ அதைவிட முக்கியம் அவர்களை கவனிப்பது. இன்றைக்கு செல்போன், இமெயில் என எத்தனையோ வசதிகள் வந்துவிட்டன. நிமிடத்திற்கு நிமிடம் தொடர்பில் இருக்கமுடியும். எனவே நேரமில்லை என்ற காரணத்தைக் கூறி கண்டுகொள்ளாமல் விட்டு விடாதீர்கள்.

திருமணம் முடிந்த உடன் காதல் முடிந்து போவதற்கான காரணம் நிறைய பேருக்கு புரிவதில்லை. காதலிக்கும் போது கமிட்மென்ட் கிடையாது. காதலர்கள் திருமணம் முடிந்த உடன் தம்பதியர்களாக மாறிவிடுகின்றனர். அவர்களுக்கு பொறுப்புகள் கூடிவிடுகிறது. பணம் சம்பாதிப்பது தொடங்கி குடும்பம், குழந்தை என சமூக பொறுப்புக்களோடு வாழ வேண்டியுள்ளது.

இதனால்தான் காதலிக்கும் போது கிடைத்த இன்பத்தை ஒப்பிட்டுப் பார்த்து திருமணத்திற்குப் பின்னர் காதலர்கள் சண்டையிட்டுக்கொள்கின்றனர். எனவே காதல் வேறு கல்யாணம் வேறு என்பதை புரிந்து அதற்கேற்ப காதலிப்பவர்கள் மட்டுமே வெற்றியினை பரிசாக பெருகின்றனர் என்கின்றனர் அனுபவசாலிகள் அதனால்தான் ஒவ்வொரு நிமிடமும் காதலை காதலோடு ரசித்து அனுபவிப்பவர்களுக்கு வாழ்க்கை அழகானது என்கின்றனர் அனுபவசாலிகள். ஆதலால் காதல் செய்வீர்.

No comments:

Post a Comment