Sunday, May 19, 2013

* ஆண்களின் வெளிநாட்டு வாழ்க்கை


எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்... இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.... 

ஆண் என்பவன் யார்? 

ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான். அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் 
செய்கிறான்.  
பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி தியாகம் செய்கிறான்.  
தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான்.  
அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான். எனவே அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக எந்தவித குறையும் சொல்லாமல் தன் இளமையை தியாகம் செய்கிறான். 
 அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது. எல்லா தாயும்,மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர். இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது. பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை. அவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள். ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம். இது ஆண்களின் அன்பு வேண்டுகோள்.

* வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே! இல்லை சாதனை


வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே! இல்லை சாதனை - தினார்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து விட்டு மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கிக் கிடக்கும் மீன் குஞ்சுகள் நாங்கள்......

பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு
குதூகளிக்க முடியாமல் தங்களின் வாழ்த்துக்களை மனம் முழுக்க சோகத்தோடு கைப்பேசியில் கூக்குரலிட்டு கொஞ்சி மகிழ நேரில் இல்லாத காற்றலைகள் நாங்கள்......

இங்கே கண்ணே கனியமுதே என்றெல்லாம் தன் பெற்றக்குழந்தையை நெஞ்சுருகக் கட்டித்தழுவ முடியாதொருதுர்பாக்கியசாலிகள் நாங்கள்...

கொம்பியூட்டர், ஸ்கைப். போனிலும் சொந்த பந்தங்களின் குரல் கேட்டு கேட்டு எங்கள் பாசம் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது... தொலைதூர பாசம் செய்தே/காட்டியே தொலைந்து போனவர்கள் நாங்கள்...

நான் இங்கே நல்லா இருக்கேன். என்று எப்போதும் சொல்லும் இயற்கை நிலை குரலுக்கு சொந்தக்காரர்கள் நாங்கள்...

வியர்வையில் நாங்கள் வேலை செய்து துவண்டாலும் விடுமுறையில் ஊருக்கு போகும் முன் சென்ட் வாசனை திரவியங்கள் வாங்க மறப்பதில்லை நாங்கள்...(எங்கள் வியர்வையின் வாசம் வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க...)

உனக்கென்ன! விமானப்பயணம், வெளிநாட்டு ராஜ வாழ்க்கை என்று ஊருக்கு போனதும் உள்ளூர் வாசிகள் எங்களை பார்த்து விடும் பெருமூச்சு வளைகுடா நாட்டின் அரபி நாட்டு வெப்பத்தை விட சற்று அதிகமாகவே சுடுகிறது! (இவர்கள் பேச்சி)

வெளிநாட்டு மூட்டை பூஜ்ஜி கடியை விட இவர்கள் கடியைதான் தாங்க முடியவில்லை

கம்ப்யிட்டர்க்குள் அகப்பட்டுக்கொண்ட எலிகள்,
நாங்கள் கலப்பை பிடிக்கவில்லை ஆனால் நாங்களும்
களைத்துத்தான் போகிறோம்...

எண்ணெய் கிணற்று தவளைகள் நாங்கள்...
வாயுக்குழாயில் சிக்கிக்கொண்ட வாயில்லா பூச்சிகள் நாங்கள்...
திரைகடலோடி திரவியம் தேடும் திசைமாறிய பறவைகள் நாங்கள்...

ஆரம்பத்தில் முதலீடில்லா தொழில் இது என்று பெருமிதப்பட்டோம் எங்களுக்கே தெரியாமல் எங்கள் இளமையை அல்லவா முதலீடு செய்திருக்கின்றோம்...இப்போதுதான் புரியத்துவங்கியது சேர்ந்தே நரைக்கவும் துவங்கியது...

நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை! வாலிபத்தை!!
இழப்பீடு கிடைக்காத இழப்பு இது , நஷ்ட்டஈடு கிடைக்காத நஷ்ட்டம் இது...

, அப்பாவின் அன்பு, குழந்தையின் மழலை, நண்பர்களுடன் அரட்டை இப்படி வீட்டு சாப்பாட்டுக்கு ஏங்கி தவிக்கும் எங்கள் நாக்கு

இங்க உள்ள பர்கர், பீசா, சன்விஜ், சாப்பிட்டு சாபிட்டு எங்கள் நக்கும் செத்து போச்சி பசி கொடுமைக்காக சாப்பிடுக்றோம்.

ஏதோ எங்கள் உடம்பில் கொஞ்சம் ஓட்டி கொண்டு இருக்கும் ரெத்தத்தை கூட மூட்டை பூச்சி குடித்து விடுகிறது .

எத்தனையோ இழந்தோம்.....
எல்லாவற்றையும் இழந்த நாங்கள் இன்னும் இங்கே ஏன் இருக்கின்றோம்...

இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதாலா?
இல்லை இழப்பிலும் சுகம் கண்டுகொண்டதாலா?"

சொந்த மண்ணில் சொந்தங்களோடு சோறு திண்பவன்
......யாரடா ? இருந்தால் அவனே சொர்க்கம் கண்டவனடா!

உங்கள் விரல் தொடும் தூரத்தில் நான் இல்லை என்றாலும் !' உங்கள் மனம் தொடும் தூரத்தில் நான் இருப்பேன் !

நீங்கள் இருப்பது தொலைவில் தான் ஆனால் என் இதயம் மட்டும் உங்களுடன் பேசிக்கொண்டிருகின்றது...!

Friday, May 17, 2013

* துணை சோரந்திருக்கும்போது ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்...!


ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கவலை, சோகம், வருத்தம் வரத்தான் செய்கிறது. அந்த நேரத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆறுதல், அவர்களின் அன்புக்குரியவர்களிடமிருந்து கிடைக்கும் ஆறுதலான வார்த்தைகளும், அணுசரனையான அக்கறையும்தான்.

குறிப்பாக உங்களது துணை வருத்தத்திலோ அல்லது கவலையிலோ இருக்கும்போது நீங்கள் அவருக்கு தோள் கொடுத்து நின்று ஆறுதல் அளிக்கும்போது அவருக்குக் கிடைக்கும் நிம்மதியும், மகிழ்ச்சியும் சொல்லில் வடிக்க முடியாதது.
 
அன்பாலும், பாசத்தாலும், அக்கறையாலும், பரிவாலும் உங்களது வார்த்தைகளால் அவரது புண்ணுக்கு நீங்கள் போடும் மருந்து மிகப் பெரிய நிவாரணமாக அமைகிறது. நமக்கென்று ஒரு தோள் இருக்கிறது, நமக்காக ஒரு உயிர் இருக்கிறது, நம்மை தூக்கிச் சுமக்க ஒரு சுமை தாங்கி இருக்கிறது என்ற நினைப்பே பலருக்கு சோர்வையும், சோகத்தையும் தூக்கிப் போட்டு விட உதவுகிறது.
 
உங்களது துணைக்கு உடல் நலம் சரியில்லையா, மன வருத்தத்தி்ல இருக்கிறாரா அல்லது ஏதாவது பயத்தில் இருக்கிறாரா.. கவலையேபடாதீர்கள், ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள். அப்படிய பறந்து போய் விடும் அவரது கவலைகள்.
 
கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லலாம்...
இது ஒரு உபாயம்.சிலருக்கு கட்டி அணைத்து தோளோடு தோள் சேர்த்து, தலையை வருடிக் கொடுத்து, முதுகைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறும்போது அதை அவர்கள் விரும்புவார்கள். இது எல்லோருக்குமே பிடித்தமான விஷயமும் கூட. இது ஒருவகையான பாசம் பரிவு கலந்த அரவணைப்பு. எத்தகைய துன்பத்தில் இருந்தாலும் இந்த கட்டிப்பிடிக்கு முன்பு அது கால் தூசுதான். எனவே வருத்தமெல்லாம் அப்படியே கரைந்து போய் விடும்.
 
உனக்காக நான் இருக்கிறேன் கண்ணம்மா, கண்களில் ஏன் இந்தக் கவலை. எல்லாவற்றையும் மறந்து விடு, நிம்மதியாக இரு. உனக்கான தோள் நான். என் மீது உன் பாரத்தை ஏற்றிவிட்டு, நிம்மதியாக இரு என்று சொல்லும்போது அவர்களுக்கு்க கிடைக்கும் அந்த பாதுகாப்பு உணர்வுக்கு ஈடு இணையே கிடையாது.
 
கவனத்தைத் திருப்புங்கள்
சிலருக்கு தேவையில்லாத பயம், கவலை வந்து மனதை வருத்தும். அதுபோன்ற சமயங்களில் அவர்களை அந்தப் பிரச்சினையிலிருந்து திசை திருப்ப முயற்சியுங்கள். ஜாலியாக ஏதாவது பேசுங்கள், வேறு டாப்பிக் குறித்து அவர்களது சிந்தனையை திருப்புங்கள். அதையே நினைத்துக் கொண்டு பயப்படாதே என்று தட்டிக்கொடுங்கள். அவர்களுக்கு ஊக்கமாக, பக்கபலமாக இருந்து, அவர்களின் பயத்தைப் போக்குங்கள். அவரது மனதுக்கு இதமாக ஏதாவது பேசிக் கொண்டிருங்கள்.
 
மனம் விட்டு பேசச் சொல்லுங்கள்
சிலருக்கு பிரச்சினையை யாரிடம் சொல்லி அழுவது என்ற குழப்பம் இருக்கும். அப்போது அவரிடம் உங்களைப் புரிய வையுங்கள். என்னிடம் கொட்டி விடு, எல்லாவற்றையும் வெளியில் போட்டு விடு, பிரச்சினையை சொல் நான் தீர்வு சொல்கிறேன் என்று நம்பிக்கை அளியுங்கள். அவர் சொல்லும்போது அக்கறையுடன் கேட்டு அவருக்குப் பொருத்தமான தீர்வை சொல்லுங்கள். நிச்சயம் அவருக்கு ஆறுதல் கிடைக்கும்.
 
உங்கள் துணையின் கண்களிலிருந்து நீர் வழியும்போது அதை வேடிக்கைப் பார்க்காமல், அதைப் பரிகாசம் செய்யாமல், உண்மையான பாசத்தோடும், நேசத்தோடும், காதலோடும், அன்போடும் நீங்கள் அணுகும்போது தானாகவே அந்தக் கண்ணீர் நின்று போகும். அன்பைக் கொட்டி நீங்கள் தரும் ஆதரவு அவருக்கு ஒரு தாயின் மடியைப் போலவே காட்சி தரும்.எனவே உங்கள் துணை சோரந்திருக்கும்போது நீங்கள் தாயாக மாறி அவருக்கு இளைப்பாறுதலைக் கொடுங்கள்...!

* ஆண்களிடம் பெண்களை கூச்சப்பட வைக்கும், எரிச்சலூட்டும் விஷயங்கள்


உலகளாவிய அளவில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில். ஆண்கள், ஒரு பெண்ணைப் பார்க்கும்போது முதலில் பார்வை போவது மார்பகங்கள் மீதுதான் என்று பெருவாரியாக கருத்து தெரிவிக்கப்பட்டதாம். இது மட்டுமல்ல, இன்னும் பல விஷயங்கள் ஆண்களிடம் அதிகமாகவே இருக்கிறதாம். இதெல்லாம் பெண்களை கூச்சப்பட வைக்கும், எரிச்சலூட்டும் விஷயங்களாக பட்டியலிட்டுள்ளனர். இது மட்டுமல்லாமல், ஒரு பத்து விஷயங்களை பட்டியல் போட்டு வெளியிட்டுள்ளனர். இதெல்லாம் பெண்களை ஆண்கள் பார்க்கும் வக்கிரப் பார்வையின் கீழ் வருகிறதாம்...

ஈகோ..
எந்த ஆணாக இருந்தாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் பெண்களிடம் தங்களது ஈகோவைக் காட்ட அவர்கள் தவறுவதே இல்லையாம். குத்திக் காட்டிப் பேசுவது, வேண்டும் என்றே நக்கலடிப்பது, கிண்டலடிப்பது ஆகியவை அவர்களின் ஈகோவின் வெளிப்பாடுதானாம். இது பெண்களுக்கு சுத்தமாக பிடிப்பதில்லையாம்.
 
நான் தப்பே செய்யலையே
அதேபோல தாங்கள் ஒருதவறும் செய்வதில்லை என்றும் தவறு செய்வதெல்லாம் பெண்களின் வழக்கம் என்றும் பாட்டு பாடுவது ஆண்களின் இயல்பாம். இதையும் பெண்கள் கட்டோடு வெறுக்கிறார்களாம். மேலும் தாங்கள் செய்த தவறுகளை மட்டும் அப்படியே மறந்து விடும் ஆண்கள், பெண்கள் தவறு செய்தால் மட்டும் அதை மறக்காமல் சொல்லிச் சொல்லிக் காட்டுகிறார்களாம்.
 
பார்வை
பெரும்பாலான ஆண்களுக்கு, பெண்களைப் பார்க்கும்போது அவர்களின் அந்தரங்கத்தை ஊடுறுவிப் பார்ப்பதில் அலாதி விருப்பம் இருக்கிறதாம். குறிப்பாக அவர்களின் மார்பகங்களை அப்படியே விழுங்கி விடுவது போல பார்ப்பார்களாம். மேலும் இடுப்பு, உதடுகள், பின்புறம் உள்ளிட்டவற்றையும் விழுந்து விழுந்து பார்ப்பார்களாம். இதையும் பெண்கள் பெரும்பாலும் விரும்புவதில்லையாம்.
 
பொறாமை
பெண்களை விட ஆண்களுக்குத்தான் பொறாமை ஜாஸ்தியாம். அவர்களுக்குப் பிடித்த பெண் வேறு ஆணுடன் பேசுவதையோ, சிரித்துப் பேசுவதையோ, வெளியில் போவதையோ ஆண்கள் விரும்புவதில்லையாம். இதை பெண்கள் ரசிப்பதில்லையாம்.
 
சுய தம்பட்டம்
ஏதாவது ஒன்றை செய்து விட்டு, அந்தக் காரியம் என்னால்தான் நடந்தது. நான் இல்லாமல் உன்னால் இதைச் செய்திருக்க முடியாது என்று தம்பட்டம் அடிப்பதில் ஆண்கள்தான் நம்பர் ஒன்னாம். பெண்களுக்குப் பிடிக்காத விஷயம் இதுவாம். மாறாக, தங்களது ஆண்களின் வெற்றியில் பெரும் பங்கெடுத்தாலும் கூட அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் அடுத்த வேலையைப் பார்ப்பது பெண்களின் வழக்கமாம்.
 
ரொம்பத்தான் பாசம்
தங்களுக்குப் பிடித்தவர்கள் மீது பாசத்தைக் கொட்டுவதில் பெண்களை விட ஆண்களே முன்னணியில் உள்ளனராம். இருந்தாலும் இந்த பாசம் சில நேரங்களில் ஓவராகி சம்பந்தப்பட்ட பெண்களை டென்ஷன் ஆக்கி விடுகிறதாம். ஏண்டா இந்த கொலை வெறி என்று கேட்கும் அளவுக்கு பாசத்தைக் கொட்டி விடுகிறார்களாம் ஆண்கள்.
 
என்னைப் போல வருமா
சில நேரங்களில் பெண்களுக்கு உதவப் போகும் ஆண்கள் தங்களை ஒரு சூப்பர் மேன் போல நினைத்துக் கொண்டு ஏகத்துக்கும் மெனக்கெடுவதை பெண்கள் ரசிப்பதில்லையாம். உனக்காக சூரியனை கொண்டு வருவேன், சந்திரனை தூக்கி வருவேன் என்று டயலாக் விடும் ஆண்களை பெண்கள் இப்போதெல்லாம் கண்டு கொள்வதே இல்லையாம்.
 
கிண்டல் செய்வது பிடிக்காது
பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் துயரத்தில் இருக்கும்போதோ, சோகத்தில் இருக்கும்போதோ அதை கிண்டலடித்துப் பேசினால் அதை அவர்கள் பெரும் பாதிப்பாக எடுத்துக் கொள்கிறார்களாம். நக்கல் செய்வது, குத்திக் காட்டுவது ஆகியவற்றை ஆண்கள் செய்யும்போது பெண்கள் மன வேதனைக்குள்ளாகிறார்களாம்.
 
வேற வேலையே இல்லையாடா...
சில ஆண்கள் எப்போது பார்த்தாலும் தங்களது பெண் நண்பிகளுடனேயே இருக்க விரும்புவார்கள், இருக்கவும் முயற்சிப்பார்கள். இதை பெண்கள் ரசிப்பதில்லையாம். உனக்கு வேற வேலையே இல்லையா, என்னோட பிரைவசியை புரிஞ்சுக்க மாட்டேங்கிறானே இந்தப் பய என்று பல பெண்கள் புலம்பித் தள்ளுகிறார்களாம்.
 
படுக்கை அறையில் ஆதிக்கம்
படுக்கை அறையில் ஆண்கள் காட்டும் ஆதிக்கத்தைத்தான் பெரும்பாலான பெண்கள் வெறுக்கிறார்களாம். எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல அவர்கள் நடந்து கொள்வதும், முரட்டுத்தனம் காட்டுவதும், அவசரப்படுவதும், காயப்படுத்துவது போல நடந்து கொள்வதும் பெண்களுக்கு பெரும் கடுப்பைத் தருகிறதாம். இப்படி செய், அப்படி செய் என்று அவர்கள் ஆணையிடுவது போல நடப்பதை பெண்கள் கட்டோடு வெறுக்கிறார்களாம்.
 
இப்படி பெண்களை எப்படியெல்லாம் இந்த ஆண்கள் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று அந்த சர்வே கூறினாலும் கடைசியில், என்னதான் ஆண்கள் இப்படிச் செய்தாலும் அவர்களைத்தான் பெண்கள் அதிகம் நேசிக்கிறார்கள், விரும்புகிறார்கள், ஆசைப்படுகிறார்கள் என்றும் கூறி வைத்துள்ளது.
இந்த கணக்கெடுப்புஆண்களுக்கு நல்லதா.. இல்லை கெட்டதா...

* மனைவி கணவரிடம் எதிர்பார்ப்பது

 எந்தவொரு முடிவை கணவன் எடுத்தாலும், அதில் மனைவியின் பங்களிப்பும் இருக்க வேண்டும். முடிவு எடுக்கும் விஷயத்தில் மனைவியை புறந்தள்ளக் கூடாது. 
ஒரு குடும்பத்தில் கணவனிடம் மட்டுமே குடும்ப வருமானம் இருக்கக் கூடாது. மனைவியிடமும் கொஞ்சம் பணம் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தன்னை மதிப்பார்கள் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைக்கிறாள். 
 
அதிகம் பேசுவதில் பெண்களுக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. அதனால், செல்போனில் அவர்கள் நீண்ட நேரம் அரட்டை அடித்தாலும் கண்டு கொள்ளக்கூடாது. `அய்யோ... பில் அதிகமாகி விடும்' என்று சொன்னால் அவர்கள் எரிச்சல் ஆகிவிடுவார்கள். அதனால், அவர்களை மனம்போல் பேச விட்டுவிட வேண்டும். 
 
வீட்டிலேயே அடைந்து கிடக்க எந்தவொரு பெண்ணும் ஆர்வம் காட்ட மாட்டாள். வாரத்திற்கு ஒரு முறை பக்கத்தில் உள்ள பார்க், பீச், ஓட்டல், தியேட்டருக்கோ, வருடத்திற்கு ஒருமுறையாவது வெளிர் சுற்றுலாவுக்கோ அழைத்துச் செல்ல வேண்டும். 
 
கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லாப் பெண்களிடமும் உள்ளது. அந்த வேலையை கணவன் தேடித் தந்தால் அவர்கள் மிகவும் மகிழ்வார்கள். 
 
இப்போதெல்லாம் இடுப்பு சிறுத்த பெண்களைத்தான் ஆண்கள் விரும்புகிறார்கள். சிலநேரங்களில் எதிர்பாராதவிதமாக பெண்களது உடம்பு பெருத்துவிட்டால், அதற்காக அவர்களை இன்னும் வருத்தத்திற்குள்ளாக்கக் கூடாது. இடை குறைக்கும் முயற்சிக்கு கணவர் தரப்பில் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறார்கள். 
 
இப்படி பெண்களின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றினாலே போதும். அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி எப்போதும் நிறைந்திருக்கும்.


Thursday, May 16, 2013

* உணர்வுகளால் வெளிப்படுத்துங்கள் காதலை!


 தம்பதியரிடையேயான உறவு தனித்துவமானது. அவர்கள் இருவரைத் தவிர வேறு வேறு எவராலும் அந்த அன்பின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது. நேசத்தை தெரிவிக்க ‘ஐ லவ் யூ' என்று வார்த்தைகள் தான் வேண்டும் என்றில்லை. ஒவ்வொரு செயலிலும் நேசத்தை உணர்த்தலாம். உணர்வு பூர்வமான அந்த நிகழ்வுகள் வார்த்தைகளை விட வலிமையானவை. சொற்கள் இல்லாமல் காதலை தெரிவிக்கும் விதம் பற்றி நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

 பூக்கள் சொல்லும் காதல்

அலுவலகம் முடிந்து வருகிறீர்களா? உங்கள் டிபன் பாக்ஸ் அல்லது பையில் மனைவிக்கு பிடித்த மல்லிகையோ, ரோஜாவோ வாங்கி வைத்திருங்களேன். அதை மனைவியின் கண்ணில் படுமாறு கவனமாய் வைத்துவிட்டு மறைந்திருந்து பாருங்கள். டிபன்பாக்ஸ் திறக்கும்போது அந்த பூக்களை விட உங்கள் மனைவியின் முகம் புன்னகையில் மலரும்.காலையில் எழுந்த உடன் காதலை சொல்ல வேண்டுமா? மனைவி படுத்திருந்தால் எழுப்ப வேண்டாம். சுவையாய் ஒரு கோப்பை தேநீரோடு சென்று மனைவியின் நெற்றியில் முத்தமிடுங்கள். அப்புறம் தேநீருக்குப் பரிசாக அன்றைக்கு நாள் முழுவதும் முத்தமழை கிடைத்தாலும் ஆச்சரியமில்லை.
 
சொல்ல நினைப்பதை வார்த்தைகளால் சொல்வதை விட மனதிற்குப் பிடித்த பாடல்களை ரெக்கார்ட் செய்து மனைவியின் காதுகாளுக்கு மட்டும் கேட்கும் வகையில் செட் செய்து கொடுங்களேன். அந்த மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போவார். அன்பால் உணர்த்திய இந்த காதல் ஆயுளுக்கும் மறக்காது.
 
தேடல் சொல்லும் காதல்
 
சின்னதாய் விளையாடுங்கள். உங்கள் மனைவிக்கு பிடித்தமான இடங்களில் க்ளுவை எழுதி வையுங்கள். அதிகம் புழங்கும் அஞ்சறைப் பெட்டி, படுக்கை அறை, பீரோ, டிரஸ்சிங் டேபிள் என ஒவ்வொரு இடத்திலும் ஒரு க்ளு இருக்கட்டும். கடைசியில் உங்கள் நேசத்தை உணர்த்தும் காதல் வார்த்தைகளை தலையணைக்குள் ஒளித்து வையுங்கள். நிச்சயம் அவர் கண்டுபிடிக்கும் பட்சத்தில் விலைமதிப்பற்ற பரிசினை கொடுங்களேன். கண்டுபிடிக்காவிட்டாலும் பரவாயில்லை. போட்டியில் பங்கேற்றதற்கு ஆறுதல் பரிசாவது அளியுங்கள். அது அன்பினை மிகையாய் உணர்த்தும்.
 
புன்னகை தரும் பொன்னகை
 
தங்கம் விற்கும் விலை நகை எங்கே வாங்குவது என்று நினைக்காதீர்கள். பவுன் கணக்கில் இல்லாவிட்டாலும் கிராம் கணக்கில் சின்னதாய் வாங்கி பரிசளிக்கலாம். அதை கண்டதும் உங்கள் மனைவியின் கண்கள் விரியுமே. அதை பார்க்கவேணும் பரிசளித்துப் பாருங்களேன்.
 
முதல் சந்திப்பின் நினைவுகள்
 
இருவரும் எங்கே, எப்பொழுது சந்தித்தீர்கள் என்ற நினைவு இருக்கிறதா? அப்படி எனில் அந்த இடத்திற்கு அவரை சர்ப்ரைசாக அழைத்துச் செல்லுங்கள். அதே நேரம், அதே இடம் அந்த சந்திப்பு மீண்டும் நிகழும் போது அந்த இடத்தில் எழும் அற்புத தருணத்தை விவரிக்க வார்த்தை இருக்காது. அப்பொழுது உங்கள் மனைவி பார்ப்பாரே ஒரு காதல் பார்வை அது நூறு வார்த்தைகளுக்கு சமம்.
 
கடற்கரை மணலில் காதல்
 
கடற்கரை பகுதிக்கு பிக்னிக் அழைத்துச் செல்லுங்கள் வாக்கிங் செல்லும் போது மனைவியை விட்டு சற்று முன்னதாக நடந்து செல்லுங்கள். கண்களில் படுமாறு காதலை எழுதி பதிவு செய்யுங்கள். அலைகள் அடித்துச் செல்லும் முன் உங்கள் மனைவி பார்த்து விடட்டும். அப்புறம் மனைவியின் மனதில் அலை அலையாய் காதல் பொங்குமே.

* உங்கள் உறவு முறியும் நிலையில் உள்ளதா ...?



தொடக்கம் என்று இருந்தால் நிச்சயம் முடிவு என்றும் ஒன்று கூடவே இருக்கும். அதுபோலத்தான் பிரிவும். அது வரும்போது எதிர்கொள்ளத் தயாராகிக் கொள்வதுதான் எல்லோருக்கும் நல்லது.

ஒவ்வொரு உறவும் ஒரு கட்டத்தில் உராய்வுகளையும், உரசல்களையும், சந்திக்க நேரிடுகிறது. இதுபோன்ற நிலையில் பல உறவுகள் முறியும் நிலைக்குப் போய் விடுகின்றன.

பிரிவோம் என்ற வார்த்தையைச் சொல்லவே பலருக்கு கிலியாக இருக்கும். பிரிந்து விடுவோம், ஒருவரை ஒருவர் மறந்து விடுவோம் என்று நினைக்கும்போதே நெஞ்சம் பதை பதைத்துப் போய் விடுகிறது. இனிமேல் நமக்குள் எதுவும் இல்லை என்பதைச் சொல்ல பலருக்கும் தைரியம் வருவதில்லை. ஆனால் இனியும் உறவைத் தொடர முடியாது என்ற நிலைக்கு தள்ளப்படும்போது என்னதான் செய்வது...?

பிரிவு கஷ்டம்தான்... மன முறிவு பெரும் துயரம்தான்... ஆனால் எடுத்தாக வேண்டும் என்று வரும்போது அதைச் சமாளிப்பது எப்படி...?

பிரிய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால், அதை எளிதாக ஏற்றுக் கொள்ள முதலில் உங்களது மனதைப் பழக்கப்படுத்திக கொள்ளுங்கள். இன்று எல்லாவற்றுக்குமே முதலில் மனசுதான் காரணமாக அமைகிறது. மனசைக் கட்டுக்குள் கொண்டு வந்து உங்கள் சொல்படி கேட்க வைப்பது நிச்சயம் பெரும் சவாலான காரியம்தான்.

நெஞ்சம் பதறத்தான் செய்யும், மனசெல்லாம் வலிக்கும், எங்காவது போய் விடலாமா என்று கூடத் தோன்றும்... ஆனால் எங்கு போவீர்கள், என்ன தான் செய்ய முடியும் உங்களால்... முயன்றுதான் பார்க்க வேண்டும், முடிவு என்று வந்து விட்டால்.

டெனிஸ் நோல்ஸ் என்ற மன நல ஆலோசகர் இப்படிக் கூறுகிறார்... உறவு முறிவு என்பது மிகவும் வேதனையான விஷயம். பலரால் அதை ஜீரணிக்கவே முடியாது. ஆனால் உங்களது மனதை நீங்கள் எப்படித் தட்டிக் கொடுத்து உங்களது கட்டுக்குள் கொண்டு வருகிறீர்கள் என்பதைப் பொறுத்தே அந்தப் பிரிவை தாங்கும் சக்தி உங்களுக்கு கைகூடும்...

பிரிய வேண்டிய நிலை வரும்போது, பிரிவுக்கான சூழல்கள் உங்களை நோக்கி பாயும்போது அதைத் தைரியமாக எதிர்கொள்ளுங்கள். மனதை கட்டுப்படுத்துங்கள், கவனத்தை வேறு பக்கம் திருப்புங்கள். இப்படிச் செய்வதன் மூலம் மனதை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்கிறார் நோல்ஸ்.

உறவுகள் எப்போதுமே பசுமையானவை... கண்களுக்குக் குளிர்ச்சி தரும் பச்சைப் புல்வெளி போல மனசுக்குள் ஒரு சுகானுபவத்தைக் கொடுக்கக் கூடியவை. அதிலும் உடல் ரீதியானதாக இல்லாமல், மனதைத் தொட்ட உண்மையான காதலுக்கும், உறவுகளுக்கும் என்றுமே மரணம் கிடையாது.
உன் உடல் வேண்டாம், உன் காதல் போதும், உன் அன்பு போதும், உன் பாசம் போதும் என்று நினைத்திருக்கும் மனங்களுக்கு பிரிவுகள் பெரும் பிரளயமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே எந்தச் சூழ்நிலையில், எந்த நிலையில் உறவுகள் பிரிந்தாலும், முறிந்தாலும், மனசுக்குள் அந்த உறவுகளின் நினைவுகள் ரீங்காரமிட்டபடிதான் இருக்கும்...நீங்கள் பிரிந்து போனாலும், உங்களை உங்களது உறவுகள் வேண்டாம் என்று தட்டி விட்டாலும். அந்த நினைவுகளுடன் நீங்கள் ஆயிரம் வருடங்கள் வாழ்ந்து விட முடியும்... !