Tuesday, August 6, 2013

* ஆண்கள் பெண்களுக்கு கொடுக்கும் தொல்லைகள்............


ஆண்கள் பெண்களுக்கு கொடுக்கும் தொல்லைகள்............


 ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் விரும்பத்தக்க உறவாக இருப்பது காதலன், கணவன் என அவர்களது வாழ்க்கையில் வரும் ஒரு ஆணின் உறவு மட்டும் தான். அப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அங்கம் வகிக்கும் ஆண்களுக்கு, மூர்க்கத்தனம் நிறைந்த மற்றொரு பக்கமும் இருக்கிறது. 



காதலும், மூர்க்கத்தனமும் ஒரு சேர நிறைந்த ஆண்கள், தாங்கள் பெரிதும் விரும்பும் பெண்களுக்கே கூட தங்களுக்கே தெரியாமல் பலவகைகளில் கொடுமைகள் புரிவதில் வல்லவர்கள். அப்படி ஆண்கள், பெண்களுக்குச் செய்யக்கூடிய 10 கெட்ட விஷயங்களை என்னவென்று பார்க்கலாம். 

• ஆண்கள் அனைவருமே பெண்களின் மார்புகளை கடைக்கண்ணில் பார்க்கும் வழக்கமுடையவர்கள் என உலகெங்கிலும் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. ஆனால் அப்படி ஒரு பெண்ணைப் பார்த்து, ‘ஜொள்' வடிக்கும் போது தர்ம சங்கடத்திற்கு உள்ளாவது, அவர்கள் பார்க்கும் பெண் மட்டுமல்லாது, அவர்கள் அருகில் இருக்கும் பெண்ணும் தான்! காதலியுடன் வெளியில் செல்லும் தருணங்களில் கூட, ஆண்கள் பிற பெண்களை பார்க்காமல் விடுவதில்லை! 

• அநேகமாக ஆண்கள், பெறாமை குணம் இருக்கும். பெண்கள் மிகுந்த பொறாமைக் குணம் உடையவர்கள் என குற்றம் சொல்லும் ஆண்கள், தங்கள் காதலி வேறொரு ஆணைப் பற்றி பேசினால் கூட உச்சக்கட்ட பொறாமை கொள்கிறார்கள். 

• மிகவும் சுதந்திரமான, நவநாகரீகமான பெண்ணுடன் பழகுவதே பெரும்பாலான ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் தாய்க்கு அறிமுகம் செய்யும் சமயங்களில் அடக்கமான பெண்களையே விரும்புவார்கள். ஊர் சுற்றும் போது நவநாகரீகமான உடைகளை அணிவதையும், வித்தியாசமான சிகையலங்காரத்தையும் விரும்பியவர்கள், திருமணத்தின் போது மட்டும் நேர்மாறான பெண்களைத் தேடுவது தான் ஆண்களின் மோசமான செயல்களிலேயே முதன்மையானது! 

• மனைவி வீட்டை விட்டு வெளியே கால் வைத்ததிலிருந்து, "எங்கே இருக்கிறாய்?" என நச்சரித்துக் கொண்டே இருக்கும் கணவனின் தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் வரும். ஆண்களின் இந்த அளவுக்கு அதிகமான அக்கறை பெண்களுக்கு ஒரு கட்டத்தில் எரிச்சலாக மாறிவிடுகிறது. 

பெண்களின் வாழ்க்கையில் ஆண்கள் வருவதற்கு முன்பும், இந்த உலகில் பெண்கள் கவனமாகத் தான் வாழ்ந்தார்கள் என்பதை ஆண்கள் உணருவதே கிடையாது. இதைப் படிக்கும் போதாவது சில ஆண்கள் திருந்தினால் சரி. 

• பெண்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுபவர்கள் என்றாலும், ஆண்களைப் போல் அல்லாது நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவரும் விஷயங்களை செய்வதில் வல்லவர்கள். ஆண்கள் பெண்களின் உணர்வுகளை கிண்டலடிப்பதை நிறுத்திவிட்டு, அதற்கு மதிப்பு கொடுக்க ஆரம்பித்தால், வாழ்வில் சிறப்பாக வாழ்வது நிச்சயம்.

Saturday, July 20, 2013

* எது சந்தோஷம்...?


எது சந்தோஷம்...?


எது சந்தோஷம்...? 
ஒவ்வொரு உயிருக்கும் மூலாதாரமே நம்பிக்கைதான். இது நமக்கானது, இது நமக்குக் கிடைக்கும், இதை நம்பலாம், இதுதான் நமக்கு என்ற நம்பிக்கைதான் ஒவ்வொருவரையும்
உயிர்ப்போடு வைத்திருக்க உதவுகிறது.

உலகமே ஒரு நாடக மேடை..அதில் நாமெல்லாம் நடிகர்கள் என்று சொன்ன ஷேக்ஸ்பியரின் வார்த்தைகளில்தான் எவ்வளவு உண்மை. மேலே வானம், கீழே பூமி. இந்த இரண்டும்தான் நிரந்தரம்... அதுவும் கூட இன்னும் 450 கோடி ஆண்டுகள் வரைதான் -சூரியனில் அதற்குப் பிறகு ஹீலியம் தீர்ந்து போய் அண்ட சராசரமும் அழியும் வாய்ப்புள்ளதாம் - அதற்கு இடைப்பட்ட இந்த மனித வாழ்க்கை ரொம்ப சாதாரணமானது. இப்படிப்பட்ட வாழ்க்கையை முடிவு வரை ஓட்ட உதவுவது இந்த நம்பிக்கைதான்.

வாழ்க்கைக்கு மட்டுமல்ல காதலுக்கும் கூட நம்பிக்கை மிகவும் முக்கியம். ஒரு சின்ன இழையளவு கூட அதில் தளர்வு வந்து விடக் கூடாது. மீறி வந்து விட்டால் அந்தக் காதலே உலர்ந்து உதிர்ந்து போய் விடும்.

நீ என்னை மகிழ்ச்சிப்படுத்துகிறாய் 
என்னுடைய உலகத்தை நம்பிக்கையால் நிரப்புகிறாய் 
என் வாழ்க்கையை நீ மாற்றிப் போட்டாய் 
உனக்கே தெரியாமல் என்னை நிறைய மாற்றினாய். 
நீ எனக்கு அசாதாரணப் பெண் 
என்னையே எனக்கு உணர்த்தியவள் நீ. 
என்னை விட மதிப்பானவள் நீ 
உன் மென்மையான புன்னகையால் 
என் இதயம் முழுவதையும் இதமாக்குகிறாய் 
உன்னை, உன்னைவிட நான் அதிகம் புரிந்திருக்க 
இந்தக் காதலே காரணம் 
தொடர்ந்து என்னைக் காதலி...!

இப்படியெல்லாம் ஒரு காதலன், உணர்ந்தும், உய்த்தும் சொல்லக் காரணம் அந்தக் காதல் தந்த நம்பிக்கையும் தெம்பும்தான். ஒவ்வொரு காதலும் இப்படித்தான் - நம்பிக்கையையும், நல்ல பல விஷயங்களையும் கூடவே சேர்த்துக் கொடுத்து விட்டுத்தான் போகிறது - அது நீடித்தாலும் அல்லது அல்பாயிசில் முடிந்தாலும்.

எனக்கு எப்போதெல்லாம் மனம் கணத்துப் போகிறதோ 
உன் நினைவு வந்து லேசாக்குகிறது 
எப்போதெல்லாம் எனக்கு இதயம் வலிக்கிறதோ 
அப்போதெல்லாம் நீ வந்து லேசாக்குகிறாய்

இதுவும் காதல் கொடுக்கும் நம்பிக்கைதான்.. காதலின் நினைவும், காதலியின் நினைவும், காதலனின் நினைவும் ஒவ்வொருவருக்கும் மூச்சுக் காற்று போல. எதை வாசிக்க மறுக்கிறோமோ இல்லையோ, நிச்சயம் காதலை சுவாசிக்க யாரும் மறக்க மாட்டார்கள்.

நீ வந்தது என் அதிர்ஷ்டம் 
கைக்குள் வர வேண்டிய அவசியம் கூட இல்லை 
ஏனென்றால் அதையும் தாண்டி என் மனசுக்குள் எப்போதோ வந்து விட்டவள் நீ. 
ஒவ்வொரு நாளும் உன் நினைவாகவே விடிகிறது 
ஒவ்வொரு இரவும் உன் நினைவிலேயே கழிகிறது 
இது போதும் என் தேவதையே...!

அவள் பார்க்கிறாளோ இல்லையோ, அவளுக்குப் புரிகிறதோ இல்லையோ, அவள் வருகிறாளோ இல்லையோ, அது கூட இவனுக்குத் தேவையில்லையாம்.. அவளது நினைவு தரும் அந்த சுகம் போதுமாம்... இதை விட ஒரு பாசிட்டிவான விஷயத்தை வேறு எது தரும், சொல்லுங்கள்...!

ஆதலினால் காதல் செய்யுங்கள்.. ஆயுசைக் கூட்டிக் கொள்ளுங்க

★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanaparkumUlagem

Tuesday, July 16, 2013

* திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் பெண்கள்.....இருட்டாகும் வாழ்க்கை..


திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் பெண்கள்.....இருட்டாகும் வாழ்க்கை..

 திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் டீன்ஏஜ் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. கல்லூரிக்கோ, வேலைக்கோ செல்லும் பெண்கள் அங்கு தன் வேலை என்ன என்பதை மறந்து, காதலில் ஈடுபடுவதுதான் இந்த பரிதாபத்திற்கான முதல் அடியாக இருக்கிறது. 



‘என் அழகிற்கும் அறிவுக்கும் என் பின்னால் இத்தனை பேர் வருகிறார்கள் பார்’ என்று, மற்றவர்களிடம் சொல்லவேண்டும் அதன் மூலம் மற்றவர்களை பொறாமைப்பட செய்யவேண்டும் என்று சில பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். இப்படி ஆழம் தெரியாமல் காதலில் காலை விட்டுவிட்டு தடுமாறும் பெண்களே கர்ப்ப கவலைக்கு உள்ளாகிறார்கள். 

பெண்களின் இளமைப்பருவம் கண்ணாடி போன்றது. சிறிய தவறு நேர்ந்தாலும் எதிர்காலம் சுக்குநூறாகிவிடும். எத்தகையோ சமூக மாற்றங்களுக்குப் பிறகும் இந்தியா இன்னும் பழமையை பாதுகாக்கும் நாடாகவே இருந்து கொண்டிருப்பதற்கு காரணம், இங்குள்ள பெண்களின் தாய்மை உணர்வும், பெண்மையும் தான். 

பெண்கள், ஆண்களுக்கு சமமாக வளர்கிறார்கள். வாழ்கிறார்கள். அந்த ‘சமம்‘ அவர்கள் அறிவை விசாலப்படுத்த வேண்டும். அதன் மூலம் தனக்கும்- தன் ஆண் நண்பனுக்கும் இடையே எவ்வளவு இடைவெளி தேவை என்பதை அவள் உணரவேண்டும். அந்த இடைவெளியை உருவாக்க தெரிந்த பெண்கள் மட்டுமே பிரச்சினைகள் இன்றி வாழ்கிறார்கள். 

பெண்கள் சாதனைகளை நோக்கி வளர்ந்துக் கொண்டிருக்கும் நேரத்தில், திருமணத்திற்கு முந்தைய கர்ப்பம் போன்ற செயல்கள் அவர்களை மீண்டும் இருட்டில் கொண்டுபோய் தள்ளிவிடும். ‘திருமணத்திற்கு பின்புதான் உடலுறவு’ என்ற பாரம்பரியத்தை முன்னோர்கள் வகுத்துவைத்திருக்கிறார்கள். அது பெண்மைக்கு மதிப்பும், மரியாதையும் பெற்றுத்தரும். 

அவர்கள் எதிர்காலமும் நன்றாக இருக்கும். அதைவிடவும் சுத்தமான மனதோடு அவர்கள் இறுதிக்காலம் வரை வாழ முடியும். பெற்றோர்களும், சமூகமும் பெண்களுக்கு சுதந்திரம் தந்துவிட்டன என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணியும் இன்றைய இளைய தலைமுறையினர் சற்று நிதானித்து யோசிக்க வேண்டும். 

பெற்றோர்கள் நம் சந்தோஷத்திற்கு தடையாக இருப்பவர்கள் அல்ல. அதே நேரத்தில் தவறான வழியில், முறையற்ற சந்தோஷத்தை தேட நினைக்கும் பெண்கள் பெற்றோர்களுக்கு பெரியபாரமாகி விடுகிறார்கள். திருமணத்திற்கு முந்தைய கர்ப்பம் தரும் வலியை சொல்லிமாளாது. 

அது கஷ்டம், குழப்பம், சிக்கல், அவமானம் போன்ற அனைத்தையுமே சேர்த்து தரும். அந்த வலியையும், அவமானத்தையும் பாதிக்கப்பட்ட பெண் மட்டுமல்ல, அந்த குடும்பமே சேர்ந்து அனுபவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அவமானத்தை பணத்தால் மறைக்க இயலாது. பிரபல மருத்துவர் ஒருவர் சொல்கிறார்.. 

“திருமணத்திற்கு முன்பு கர்ப்பம் அடையும் பெண்களில் பலர் என்னிடம் கருக்கலைப்பு செய்ய வருகிறார்கள். மருத்துவரீதியாக, மனோதத்துவரீதியாக நான் சொல்வதை புரியும் நிலையில் அவர்கள் இல்லை. முதன் முதலில் உருவாகும் கருவை கலைப்பது பெண்ணின் உடலுக்கு மிகவும் ஆபத்தான விஷயம். 

அதை கவனமாக கையாளாவிட்டால் வாழ்நாள் முழுவதும் அந்த பெண்ணுக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போய்விடக் கூடும். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி, முரண்பாடான முறையில் கலைத்துவிட்டு, திருமணத்திற்கு பிறகு தாய்மை அடைய வாய்ப்பில்லாமல் போனவர்கள் அதிகம். 

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான டீன்ஏஜ் பெண் ஒருத்தி என்னிடம் ஆலோசனைக்கு வந்தாள். கர்ப்பமாகி மூன்று மாதங்கள் கடந்திருந்தன. அதனால் ‘கருவை கலைக்க வாய்ப்பில்லை’ என்று நான் கூறிவிட்டேன். உடனே அவள் அம்மா என் காலைப்பிடித்துக்கொண்டு கதறியழுதார். ‘என்னால் கருவை கலைக்க முடியாது. 

மருத்துவ விஞ்ஞான முறைகளை மீறி நான் ஏதாவது செய்தால், உங்கள் பெண்ணின் உயிருக்கு ஆபத்தாக முடியும்’ என்று கூறி விட்டேன். எவ்வளவு பணம் கேட்டாலும் தருவதாக சொன்னார். ‘கர்ப்பத்திற்கு காரணமானவன் என்னை தவிக்கவிட்டு விட்டு எங்கோ சென்றுவிட்டான்’ என்று அந்த பெண்ணும் அழுதாள். 

நான், ‘காலம் கடந்து வந்திருக்கிறீர்கள். எது கிடைத்தாலும் அதை துணிவோடு ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று கூறி அனுப்பிவைத்தேன். அவர்கள் நான் சொன்னதை கருத்தில்கொள்ளாமல் வேறொரு மருத்துவரை பார்த்து கருக்கலைப்பு செய்து விட்டு வீடு திரும்பிவிட்டனர். பிறகு எதுவுமே நடக்காதது போல் அந்தப் பெண்ணுக்கு திருமணமும் முடித்து விட்டார்கள். 

அதன்பிறகு தான் ஆரம்பமானது வினையே. முதலில் கருவை கலைத்ததால் கர்ப்பப்பை வெகுவாக பாதிக்கப்பட்டு, அதை அகற்றவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. திருமணத்திற்கு முன்பு அவளுக்கு நடந்த கொடூரமான கருக்கலைப்பின் காரணமாக அந்தப் பெண்ணின் வாழ்க்கையையே இருட்டாக்கிவிட்டார்கள்” என்கிறார், அவர். 

ஒரு பெண்ணுடைய நட்பு கிடைத்துவிட்டால் அவளை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு கைவிடும் போக்கு இப்போது அதிகரித்திருக்கிறது. பெண்கள் தான் அப்படிப்பட்ட ஆண்களின் மனநிலையை புரிந்து கொண்டு கவனமாக இருக்கவேண்டும். 

ஒரு பெண்ணுடன் பழகி, அவள் கர்ப்பம் ஆகிவிட்டால் என்று தெரிந்தவுடன், சம்பந்தப்பட்ட ஆண் கூடுமானவரை தப்பிக்கவே முயற்சி செய்கிறார். ஒரு சிலர் அந்தப் பெண்ணை கருக்கலைப்பிற்கு கட்டாயப்படுத்துகிறார்கள். மறுக்கும் பட்சத்தில் கொலை செய்யக்கூட துணிகிறார்கள். ஆனால் திருமணத்திற்கு மட்டும் யாரும் ஒத்துக்கொள்வதில்லை. 

‘உன்னை திருமணம் செய்துகொள்ள என் பெற்றோர் சம்மதிக்கவில்லை’ என்று கூறிவிடுகிறார்கள். திருமணத்திற்கு முன்பு ஏற்படும் கர்ப்பத்தை தனி மனிதர்களும், சமூகமும் அவமானமாகவே கருதுகிறது. அதனால் அந்த அவமான செயலுக்கு பெண்கள் இடம் கொடுக்காமல் இருப்பதே நல்லது! 


Sunday, July 14, 2013

* என்னுயிரே.. என்னுயிரே...!




என்னுயிரே.. என்னுயிரே...! 

வலி மட்டும்தானா காதல்... நிச்சயம் இல்லை.. ஒவ்வொரு காதலுக்கும் ஒரு வலிமையும் இருக்கும்... வலிமை தருவதுதான் உண்மையான காதல்.
உயிர்கள் இரண்டின் சங்கமம் கொடுக்கும் சுகம் இருக்கிறதே... அது சொர்க்கத்தையும் ஓவர்டேக் செய்து விடும் இந்த சுகானுபவம். ஒவ்வொருவருக்கும் காதல் பரம சுகத்தை மட்டுமல்ல, பாரம் சுமக்கத் தேவையான பலத்தையும் கூடவே தந்து விட்டுத்தான் செல்கிறது.

உன் அருகாமை கதகதப்பை என் தோள்களில் உணர்கிறேன்.
உன் சுகந்தத்தை என் நாசிகளில் உணர்கிறேன்
உன் சிரிப்பொலியை என் காதுகளில் உணர்கிறேன்.
நான் எங்கோ... நீ எங்கோ இருந்தாலும்...

இதுதான் காதலின் அடிப்படை. உடல் ரீதியான உணர்வுகளையும் தாண்டி, இருப்பையும், நடப்பையும் தாண்டி, உள்ளங்கள் உரசிக் கொள்ளும் அந்த் தருணம் இருக்கிறதே... அடடா, அடடா.. அதுவல்லவோ சுகம்.

நீ எனக்கு விஷம்
நீ எனக்கு இனிப்பு
நீ எனக்கு துவர்ப்பு
நீ எப்படி இருந்தாலும்
எனக்கு நீ அமிர்தம்...

காதல் வந்தால் வரும் உணர்வு இது.

நீதான் என் இதயத்தைச் சுட்டாய்
நீதான் என் இதயத்தைப் பொசுக்கினாய்
நீயேதான் அதற்கு மருந்தையும் போட்டு விட்டாய்
உன் அன்பால்

காதலில் மட்டும்தான் இப்படி எப்படிப்பட்ட 'சூட்டையும்' தாங்கக் கூடிய பக்குவமும், பொறுமையும் வரும். நிறையப் பேர் சொல்வார்கள், காதலிக்க ஆரம்பித்து விட்டான், இனி இவன் அவ்வளவுதான் என்று. நிச்சயம் தவறு... காதலர்களிடம் போய் கேட்டுப் பாருங்கள், குறிப்பாக ஆண்களிடம் கேட்டுப் பாருங்கள், அவன் எப்படியெல்லாம் 'பலன்' அடைந்தான் என்று தெரியும்.

மனசுக்குள் ஒரு அமைதி வரும், இதுவரை இல்லாத அளவுக்குப் பொறுமை வரும், எதையும் ரசிக்கும் மன நிலை வரும், கோபம் பறந்தோடும், குணம் கூடும், ஏன் அழகு கூட கூடும். அவனையே அவன் ரசிக்க ஆரம்பிப்பான். சுற்றியிருப்பவர்களை எல்லாம் பாசிட்டிவாக பார்க்கும் சிந்தனை வரும் - காதல் உணர்வுகள் ஒருபக்கம் அலையென பொங்கி, பிரவாகமாக ஓடிக் கொண்டிருக்கும், மறுபக்கம் இப்படிப்பட்ட மாற்றங்களும் கூடவே வந்து சேரும்.

வாழ்க்கையின் அழகான விஷயம் காதல்.. ஆயிரம் அர்த்தங்களை அது உங்களுக்குச் சொல்லித் தரும்.. மனசை காதலிக்கும்போது கிடைக்கும் சொர்க்க உணர்வு இருக்கிறதே, அதற்கு ஈடு இணை எதுவுமே கிடையாது, இதைச் சொல்லிப் புரிய வைக்க முடியாது...

பிறந்த ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் முடிந்து போகும்
நீயும் அப்படியே
நானும் அப்படியே
ஆனால் கதை முடியும்போது
உன் காதல் என்னுடன் ஒட்டிக்கிடக்கும்
என் உயிருடன் கலந்த உதிரம் போல
நாம் மரித்துப் போகலாம்
நம் காதல் நம்மைப் பார்த்து சிரித்து காலத்திற்கும் நிற்கும்!.

எனவே காதலை உணருங்கள், காதல் உணர்வோடு மூழ்கிப் போங்கள்.. தவறே இல்லை!

* நாட்டுக்கோழி முட்டையும் ஆண்மைக்கு நல்லதாம்...!!


நாட்டுக்கோழி முட்டையும் ஆண்மைக்கு நல்லதாம்...!!

நாட்டுக்கோழி முட்டையும்
உண்ணும் உணவுக்கும் உறவுக்கும் தொடர்பு உள்ளது என்பதனால்தான் பண்டைய காலத்தில் இருந்தே பக்குவமாக சமைத்து உண்டுள்ளனர் நம் முன்னோர்கள். ஆனால்
இன்றைய அவசர யுகத்தில் பாஸ்ட்ஃபுட், பர்கர்,பீட்ஸா என்று உண்பதால் சரியான சத்துக்கள் கிடைக்காமல் ஆண்களின் ஆண்மைக்கே ஆபத்து ஏற்படுகிறது. இதனால் குழந்தையின்மை பிரச்சினைவேறு இளைஞர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கிவிடுகிறது. எனவே சத்தான உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆண்களுக்கு தேவையான ஆண்மையை அதிகரிக்கக் கூடிய சக்தி கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

சக்தி தரும் பேரிச்சை

காலை உணவுக்குப்பின் சிறிதுநேரம் கழித்து 10 பேரீச்சம்பழங்கள் சாப்பிட்டு சிறிது வெந்நீர் அருந்துங்கள். அதேபோல் இரவு உணவுக்குப்பின் 10 பேரீச்சம் பழங்களை உண்டு பசும்பால் குடியுங்கள். தொடர்ந்து 2 மாதம் இவ்வாறு சாப்பிட்டுவந்தால் ஆண்மை சத்தி குறிப்பிடத்தக்க அதிகரிக்கும். இந்த நாட்களில் குளிர்ச்சியான பானங்கள், உணவுகள் சாப்பிடக்கூடாது.

அரைக்கீரை சாப்பிடுங்களேன்

சைவ உணவை சாப்பிடுபவர்கள் தினசரி உணவில் அரைக்கீரையை வாரம் 2 அல்லது 3 முறை தொடர்ந்து சாப்பிட வேண்டும். செலரியில் உள்ள தாவர ஈஸ்ட்ரோஜன் செக்ஸ் கிளாச்சியை தூண்டும். ஆண்களும், பெண்களும் செலரியை சாலட் போல சாப்பிடலாம்.

ஆண்மை அதிகரிக்க வாழைப்பழம் சிறந்த உணவாகும். இதில் உள்ள பொட்டாசியம், பி வைட்டமின் உடலுக்குத் தேவையான சக்தியை அதிகரிக்கும். அதேபோல் ஆவகேடோ எனப்படும் வெண்ணெய் பழம் சக்தி தரக்கூடியது. இதில் உள்ள பி6 வைட்டமின் பெண்களுக்கு தைராய்டு பிரச்சினை இருந்தாலும் போக்கும்.

கடல்சிப்பி

மீன் வகைகளில் எது கிடைக்கிறதோ அவற்றை வாங்கிச் சாப்பிடலாம். கடல் சிப்பியில் துத்தநாகச் சத்து அதிகம் உள்ளது. இது விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும். டெஸ்ட்டோஸ்டிரன் ஹார்மோனை சரியாக சுரக்கச் செய்யும். இது மூளையில் டோபமைன் ஹார்மோனை தூண்டும்.

உப்புக்கண்டம்

வெள்ளாட்டுக் கறியும், இறால் உணவும் நல்லது. அதுவும் இறைச்சியை உப்பு மஞ்சள் பூசி காயவைத்துப்பதப்படுத்திய உப்புக்கண்டம் உண்ணலாம். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர 50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம் என்கின்றனர் நிபுணர்கள். பறவைகளில் மனைப்புறா, வான்கோழி, கௌதாரி, பச்சைப்புறா ஆகியவற்றின் இறைச்சி சிறப்பான பலன்கள்தரும். ஆனால் அவற்றிர்காக மெனக்கெடவேண்டுமே.

நாட்டுக்கோழி முட்டை

இளமையில் ஏற்படும் ஆண்மைக் குறைவை முறையாக முட்டை உண்பதன் மூலம் போக்கலாம். முட்டையில் வைட்டமின்கள் பி6, பி5 உள்ளது. இது மனஅழுத்தத்தை குறைக்கும். ஹார்மோன்களை சரியான அளவில் சுரக்கச் செய்யும். பச்சை முட்டையை சாப்பிட சக்தி அதிகரிக்கும். ஆண்களுக்கு கிளர்ச்சி ஏற்படும்.

இரண்டு நாட்டுகோழி முட்டைகளை ஒரு மண்பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் சிறிது சூடுபடுத்திய பின் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து சிறிது சூட்டோடு உண்ணவும். காலை உணவுக்குப் பதிலாக இப்படி முட்டை மட்டும் சாப்பிட்டுபின் பால் அருந்திவரவும். 3மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் முழுபலன் உண்டு.

தினசரி உறவு வேண்டாமே

புதிதாக திருமணமானவர்கள் தினசரி உறவு கொள்வதில் சிக்கல் இல்லை. அதேசமயம் திருமணமாகி சில ஆண்டுகள் கழித்த பின்னரும் தினசரியோ, வாரம் 3 அல்லது 4 நாட்களுக்கோ உறவில் ஈடுபடுவது ஆற்றலை அழித்துவிடும் என்று எச்சரிக்கின்றனர். வாரம் ஒருமுறை அல்லது இருமுறை செக்ஸ் வைத்துக்கொண்டால்உடலின் தற்காப்புத்திறன் மேம்படுவதோடு வாழ்நாட்களும் அதிகரிக்கும். மேலும் செக்ஸ் பற்றி தெரிந்து கொள்வதற்காக ஆபாச நூல்களைப் படிப்பது, இணையதளத்தில் ஆபாச படங்களைப் பார்ப்பதால் மனமும், உடலும்கெட்டுப்போகும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


Saturday, July 13, 2013

* வாழ்வில் வெற்றிக்கான வழி






 எந்த ஒரு விஷயத்திலும் மனிதன் வெற்றியைப் பெறுவதற்கு சில வழிகளை பின்பற்ற வேண்டும் என்று விவேகானந்தர் கூறியிருக்கிறார். அவர் போதித்த வெற்றிக்கான வழியை இங்கு பார்க்கலாம். 



* பட்டினி கிடக்காதீர்கள். 

* மிக அதிகமாக உணவு உண்ணாதீர்கள். 

* சோம்பலை துரத்தி அடியுங்கள். 

* சந்தேகமும், சஞ்சலமும் எதிரிகள், அவற்றை அண்ட விடாதீர்கள். 

* அதிக நேரம் உறங்காதீர்கள். 

* மிக குறைவாகவும் உறங்காதீர்கள். 

* பொறாமை அறவே இருக்கக் கூடாது. 

* உடல் தூய்மை அவசியம், ஆகையால் தினமும் நீராடுங்கள். 

* பேராசை படாதீர்கள். 

* மகிழ்ச்சியாக இருங்கள். 

* நல்லதையே நினைத்து வாருங்கள். நல்லவையே நடக்கும். நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடம் உண்டு. 

* தைரியமாக இருங்கள். 

* பொறுமையும், விடாமுயற்சியும் நல்ல நண்பர்கள். எப்போதும் இவர்களுடனே இணைந்திருக்க பழகுங்கள். 

Thursday, July 4, 2013

* ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!


ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!

* ஆண்கள், உங்களிடம் பேசும் போது தனது மனைவியை உங்களோடு ஒப்பிட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.
* தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள். இது ஆண்களை உங்களை பற்றி தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்த தூண்டும்.
* உங்கள் வீட்டில் விழா, விசேஷம் தவிர வேறு எந்த விஷயத்திற்காகவும் உடன் வேலைப் பார்க்கும் ஆணை தேவையில்லாமல் வீட்டுக்கு அழைக்காதீர்கள். நீங்களும் எந்த காரணமும் இல்லாமல் துணையில்லாமல் அவர்கள் வீட்டிற்கு செல்லாதீர்கள்.
* எதற்காகவும், எந்த பிரச்சினைகளுக்காகவும் ஆண்கள் முன்னால் அழாதீர்கள். அழும் பெண்களை சுலபமாக ஆண்கள் திசை திருப்பிவிடுகிறார்கள்.
* ஆண் எந்த நோக்கத்திற்காக உங்களிடம் பேசுகிறான் என்று அவன் நோக்கத்தை அவன் வார்த்தைகளிலும், கண்களிலும் இருந்து பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதைப்பொறுத்தே ஒரு பெண் ஆணிடம் பழகும்போது அந்த உறவை எவ்வளவு தூரத்தில் வைக்கலாம் என்று வரைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
* அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் ஆண்களை தொட்டு பேசாதீர்கள். அதே போல் உங்களையும் தொட்டு பேச அனுமதிக்காதீர்கள். இதை பயன்படுத்தி ஆண்கள் உங்களிடம் தவறாக நடக்கவும் வழியுள்ளது.