Sunday, September 22, 2013

* வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே! இல்லை சாதனை


வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே! இல்லை சாதனை


வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே! இல்லை சாதனை - தினார்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து விட்டு மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கிக் கிடக்கும் மீன் குஞ்சுகள் நாங்கள்......

பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு
குதூகளிக்க முடியாமல் தங்களின் வாழ்த்துக்களை மனம் முழுக்க சோகத்தோடு கைப்பேசியில் கூக்குரலிட்டு கொஞ்சி மகிழ நேரில் இல்லாத காற்றலைகள் நாங்கள்......

இங்கே கண்ணே கனியமுதே என்றெல்லாம் தன் பெற்றக்குழந்தையை நெஞ்சுருகக் கட்டித்தழுவ முடியாதொருதுர்பாக்கியசாலிகள் நாங்கள்...

கொம்பியூட்டர், ஸ்கைப். போனிலும் சொந்த பந்தங்களின் குரல் கேட்டு கேட்டு எங்கள் பாசம் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது... தொலைதூர பாசம் செய்தே/காட்டியே தொலைந்து போனவர்கள் நாங்கள்...

நான் இங்கே நல்லா இருக்கேன். என்று எப்போதும் சொல்லும் இயற்கை நிலை குரலுக்கு சொந்தக்காரர்கள் நாங்கள்...

வியர்வையில் நாங்கள் வேலை செய்து துவண்டாலும் விடுமுறையில் ஊருக்கு போகும் முன் சென்ட் வாசனை திரவியங்கள் வாங்க மறப்பதில்லை நாங்கள்...(எங்கள் வியர்வையின் வாசம் வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க...)

உனக்கென்ன! விமானப்பயணம், வெளிநாட்டு ராஜ வாழ்க்கை என்று ஊருக்கு போனதும் உள்ளூர் வாசிகள் எங்களை பார்த்து விடும் பெருமூச்சு வளைகுடா நாட்டின் அரபி நாட்டு வெப்பத்தை விட சற்று அதிகமாகவே சுடுகிறது! (இவர்கள் பேச்சி)

வெளிநாட்டு மூட்டை பூஜ்ஜி கடியை விட இவர்கள் கடியைதான் தாங்க முடியவில்லை

கம்ப்யிட்டர்க்குள் அகப்பட்டுக்கொண்ட எலிகள்,
நாங்கள் கலப்பை பிடிக்கவில்லை ஆனால் நாங்களும்
களைத்துத்தான் போகிறோம்...

எண்ணெய் கிணற்று தவளைகள் நாங்கள்...
வாயுக்குழாயில் சிக்கிக்கொண்ட வாயில்லா பூச்சிகள் நாங்கள்...
திரைகடலோடி திரவியம் தேடும் திசைமாறிய பறவைகள் நாங்கள்...

ஆரம்பத்தில் முதலீடில்லா தொழில் இது என்று பெருமிதப்பட்டோம் எங்களுக்கே தெரியாமல் எங்கள் இளமையை அல்லவா முதலீடு செய்திருக்கின்றோம்...இப்போதுதான் புரியத்துவங்கியது சேர்ந்தே நரைக்கவும் துவங்கியது...

நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை! வாலிபத்தை!!
இழப்பீடு கிடைக்காத இழப்பு இது , நஷ்ட்டஈடு கிடைக்காத நஷ்ட்டம் இது...

, அப்பாவின் அன்பு, குழந்தையின் மழலை, நண்பர்களுடன் அரட்டை இப்படி வீட்டு சாப்பாட்டுக்கு ஏங்கி தவிக்கும் எங்கள் நாக்கு

இங்க உள்ள பர்கர், பீசா, சன்விஜ், சாப்பிட்டு சாபிட்டு எங்கள் நக்கும் செத்து போச்சி பசி கொடுமைக்காக சாப்பிடுக்றோம்.

ஏதோ எங்கள் உடம்பில் கொஞ்சம் ஓட்டி கொண்டு இருக்கும் ரெத்தத்தை கூட மூட்டை பூச்சி குடித்து விடுகிறது .

எத்தனையோ இழந்தோம்.....
எல்லாவற்றையும் இழந்த நாங்கள் இன்னும் இங்கே ஏன் இருக்கின்றோம்...

இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதாலா?
இல்லை இழப்பிலும் சுகம் கண்டுகொண்டதாலா?"

சொந்த மண்ணில் சொந்தங்களோடு சோறு திண்பவன்
......யாரடா ? இருந்தால் அவனே சொர்க்கம் கண்டவனடா!

உங்கள் விரல் தொடும் தூரத்தில் நான் இல்லை என்றாலும் !' உங்கள் மனம் தொடும் தூரத்தில் நான் இருப்பேன் !

நீங்கள் இருப்பது தொலைவில் தான் ஆனால் என் இதயம் மட்டும் உங்களுடன் பேசிக்கொண்டிருகின்றது...!


நான் பார்க்கும் உலகம்

* வெளிநாட்டு வாழ்க்கை


வெளிநாட்டு வாழ்க்கை

!!..நான்கு சுவர்களுக்குள் எங்கள் வாழ்க்கை..!!

நெஞ்செல்லாம் இளமையின் மோகம், ஒரு புறம்..!

பஞ்சாய் பற்றி எரியும் தனிமையின் பாரம் மறு புறம்..!!

சகோதிரிகளின் வாழ்க்கயைப் பற்றிய கவலை,

வீட்டிலோ தலைக்கி மேலாகக் கடன்..!!

சகோதரர்களின் படிப்பைப் பற்றிய கவலை,

புறப்பட்டோம் வெளிநாட்டிற்கு உடன்..!!

நிழலே இல்லாத பாலைவனம்..

இருப்பினும், அதுவே எங்களுக்கு உணவளிக்கும் பூங்காவனம்..!!

எங்களை வாட்டி எடுக்கும் இன்ஜிநியர் ஒரு பக்கம்..

அவரயும் வாட்டி எடுக்கும் manager மறு பக்கம்..

அனைவரயும் வரட்டி போல் வாட்டி எடுக்கும் வெயில் இருக்கின்றதே..,

அந்தோ...எங்கள் துக்கம்..!!

வேலை முடிந்து , வீட்டிற்குச் செய்யும் தொலைபேசி அழைப்பில்

வருமே ஒரு வகைப் புன்னகை..!!

அதற்கு இந்த உலகத்தில் இல்லை; ஈடு இணை..!!

கணவன் தன் மனைவியோடு..,

மகன் தன் தாயோடு,

தகப்பன் தன் மகனோடு,

சகோதரன் தன் சகோதரிகளோடு..

காதலன் தன்னை மனப்பதற்கான நேரம் வந்தும்,

தனக்காக காத்திருக்கும் அவனின் காதலியோடு.,

பேரன் தன் பாட்டியோடு..!!

அந்த தொலைபேசி அழைப்பு ஒன்று போதும்..,

எங்களின் உழைப்பின் களைப்பே இல்லாது போன்று ஆகிவிடும்..

எங்களுக்கு மாத உணவின் செலவிற்காக எடுப்பதைத் தவிர்த்த்து,

மீதத்த்தை இம்மி அளவில் கூட எங்களுக்கென சேர்த்து வைக்காமல் வீட்டிற்கு அனுப்பும் என் போன்ற இன்ஜிநியர்கள் எத்தனயோ பேர்-இருக்க,

பாவம்..!! கூலி தொழில் செய்யும் தொழிலார்களின் நிலமயைப் பற்றி என்ன சொல்வது..!

விடிந்ததும் காலெந்தரை (calender) பார்க்கும் பழக்கம்..

விடுமுறை நாள் வரும் வரைக்கும் இதுவே எங்களின் அன்றாட வழக்கம்..!!

பண்டிகைத் திருநாளோ,

இல்லை;

ஈதுப் பெருநாளோ..

எங்களுக்கு தெரிந்ததெல்லாம் பெட்ஷீட்டிற்குள் உறக்கம்..

அந்தோ... உறக்கம் கூட வராமல் கண்ணீர் எங்கள் கண்களில் ஒரு ஓரமாய் வடிந்திருக்கும்..!!

தலைப் பிள்ளையாய் பிறந்தது.

எங்கள் தலை எழுத்து தானோ..!!

சிந்தும் வேர்வை எங்களுக்கு பாரம் அல்ல..!!

இறைவன் எங்களுக்காக கொடுத்த வரம்..!!


நான் பார்க்கும் உலகம்
★☆★☆★Share ✔ Like ✔ Comment ✔☆★☆★☆★
www.facebook.com/NanaparkumUlagem

* சிசேரியன் கொடுமை விழிப்புணர்வு அவசியம்! ! ! !



சிசேரியன் கொடுமை விழிப்புணர்வு அவசியம்! ! ! !

சகோதரர்களே அவசியமாக இதை முழுமையாக படிங்க...

தாய்மை ஒரு பெண்ணிற்கு மிக்க மகிழ்ச்சியளிக்கும் விஷயம். நிழலின் அருமை வெயிலின் போது தான் தெரியும் என்பதை போல, தாய்மையடைவதின் அருமை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மிக்க நன்றாக புரியும். தாய்மையடைவது எவ்வளவு மகிழ்ச்சியானதோ,அதே நேரத்தில் கர்ப்ப காலமும் குழந்தை பெற்றுக் கொள்வதும் அதற்கு நேர் எதிரானது என்பதை பெண்கள் நன்றாகவே உணர்ந்து இருக்கின்றனர்.

இயற்கை மார்க்கமான இஸ்லாம், தாய்மையடையும் போது ஒரு தாய் அடையும் துன்பத்தை எடுத்துக்காட்டி, பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமையை அழகாக எடுத்து காட்டுகிறது.

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலி-யுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.
(திருக்குர்ஆன் 31 : 14)

கர்ப்ப காலம், பிரசவம் ஒரு பெரும் சோதனை என்றிருக்கும் போது, இன்றைய நவீன விஞ்ஞானம் பிரசவத்தை இலகுவாக்கியிருப்பதை காட்டிலும், கடினம் ஆக்கியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். சுக பிரசவம் என்பது இன்று அரிதாகி விட்டது.

ஆங்கில செய்தி தொலைக்காட்சியானNDTV வலைத்தளத்தில் 26.04.2011 அன்று வெளியான செய்தி ஒன்று திடுக்கிடச் செய்கிறது. கேரள மாநிலத்திலுள்ள ஆலப்புழாவில் காரணமின்றி பிரசவங்களின் போது சிசேரியன் செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இதைப் போலவே, ஏப்ரல் 16, 18 மற்றும் 19 தேதிகளில், மூன்று நாட்களில் மட்டும் கொல்லம் மாவட்டத்தில் கடக்கால் தாலுக்காவில் 19 சிசேரியன் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

சிசேரியன் செய்யப்பட்டதற்கான காரணம் விநோதமானது. ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் மருத்துவமனையில்பணியாற்றும்மயக்கமடைய செய்யும் மருத்துவ நிபுணர் (Anaesthetist) பத்து நாட்களுக்கு விடுமுறையில் செல்ல இருந்ததால், பிரசவங்கள் முன்கூட்டியே சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட மருத்துவ அதிகாரியை இது சம்பந்தமாக விசாரிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொடூரத்தின் உச்ச கட்டம் என்னவென்றால், ஆலப்புழா அரசு மருத்துவமனையில்48 மணி நேரங்களில் 4 மருத்துவர்கள் 21 சிசேரியன் அறுவை சிகிச்சைகளை செய்துள்ளனர். காரணம் என்ன தெரியுமா? இந்த மருத்துவர்கள் தங்களுக்கு ஈஸ்டர் (புனித வெள்ளி) விடுமுறை கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரசவங்களை முன்கூட்டியே சிசேரியன் மூலம் செய்துள்ளனா;.

கல்வியில் முதன்மை மாநிலம் என பெயர் எடுத்திருக்கும்கேரளாவிலே இந்த நிலமை என்றால், மற்ற மாநிலங்களின் நிலமையை சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை.

எனவே, பெண்களே! பிரசவத்தின் போது மிகவும் கவனமாக இருங்கள். சுக பிரசவம் இல்லாமல், சிசேரியன் செய்யப்பட வேண்டும் என மருத்துவர் கூறினால் அதற்கான காரணத்தை கேளுங்கள்.

1) சிசேரியன் செய்வதற்கான காரணம் என்ன?

2) சிசேரியன் செய்யாமல் இன்னும் சில நாட்கள் சுக
பிரசவத்திற்காக காத்திருப்பதால்ஏற்படும் பாதகங்கள் என்ன?

3) வயிற்றில் இருக்கும் குழந்தையின் நலனிற்காக சிசேரியன் செய்யப்படுகிறதுஎன்றால், குழந்தையின் தற்போதைய நிலை என்ன ?

4) சிசேரியன் செய்யாமல், சுக பிரசவத்திற்கு எதிர்பார்த்தால்குழந்தைக்கு ஏற்படும் பாதகங்கள் என்ன?

போன்றவற்றை தெளிவாக மருத்துவர்களிடம் கேளுங்கள். காரணமின்றி சிசேரியன் செய்யப்படுவதை தவிர்க்க பெண்களும், ஆண்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

இதைப் போலவே, கர்ப்ப காலத்தின் போதே சுக பிரசவத்திற்கான வழிமுறைகளை மருத்துவர்களின்ஆலோசனையுடன் பெண்கள் தெரிந்து கொண்டு அதை நடைமுறைப்படுத்தினால் சிசேரியன் தவிர்க்கலாம்.

மேலும் பல மருத்துவமனைகள் பணத்திற்கு ஆசைப்பட்டு அறுவை சிகிச்சைக்கு முனைவதை காண்கிறோம். அதுவும் முஸ்லிம்கள் என்றால் பெரும்பாலும் அறுவை சிகிச்சையே செய்யப்படுகிறது.

எனவே கர்ப்பமுற்றவுடன் நீங்கள் தேர்வு செய்யும் மருத்துவமனையில்அறுவை சிகிச்சை என்பது நிர்பந்ததிற்கு மட்டுமே பயன்படுத்துவார்கள் என்று இருந்தால் மட்டுமே அங்கு காட்டுங்கள்.

பணத்திற்கு ஆசைப்படும் இஸ்லாத்தை வெறுக்கும் பல மருத்துவர்கள் முஸ்லிம்களுக்குஎதிராக அறுவை சிகிச்சை செய்கிறார்கள் என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள்.


நான் பார்க்கும் உலகம்

* தனிமை வாட்டுகிறதா........?


தனிமை வாட்டுகிறதா........?


இன்றைய நவநாகரீக உலகில் ஒருவர் தனியாக இருப்பது என்பதே அதிசயம்தான்."Socializing" என்னும் பெயரில் நமது வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக இணையதளங்கள் 6 வயது குழந்தை முதல் 60 வயது முதியவர் வரை அனைவரையும் உலகத்தோடு பிணைத்து வைத்திருக்கிறது. 

இப்படி இணையதள மோகத்தில் சிக்காதவர்கள் கூட, நண்பர்கள் அல்லது காதலன்/காதலியின் பிரசன்சில் தனிமையை தொலைத்திருப்பார்கள்.

எனவே, இன்றைய சூழலில் ஒருவர் தனியாக இருக்கிறார் என்றால் அவர் தீராத மன வேதனையில் உள்ளார் என அர்த்தம். காதல் தோல்வி, ஏமாற்றம், துரோகம் என ஏதாவது ஒருவிதத்தில் பாதிக்கபட்டிருக்கும் இவர்கள், இனி யாரையும் நம்ப வேண்டாம். மற்றவர்களுடன் இருந்து காயப்படுவதை விட தனியாக நிம்மதியுடன் இருப்பதே மேல் என்ற அளவிற்கு தீர்மானித்திருப்பார்கள்.

இந்த முடிவு நடைமுறைப்படுத்துவதற்கு மிகவும் கடினமான ஒன்று. எப்போதும் நண்பர்களுடன் இருந்து பழகியவர்களுக்கு தனியாக இருப்பது என்பது கண்ணை‌‌க் கட்டி காட்டில் விட்டது போல் இருக்கும். ஒரே நாளில் வாழ்க்கையே வெறுத்தது போல தோன்றும். இந்த சிக்கலான சூழலில் இருந்து வெளியே வர அதிக மன வலிமையும் சில எளிமையான டிப்ஸும் தேவை... அந்த எளிமையான டிப்ஸ் இதோ...

தனிமையில் இனிமை - நமது அனைவரது வாழ்விலும் ஏதாவது ஒரு தருணத்தில் கண்டிப்பாக தனிமை அதன் சுயரூபத்தை காட்டும். தனியாக இருப்பது ஒரு பெரிய இழப்பல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள். தனிமையாக இருக்கும் போது நீங்கள் உங்கள் வாழ்வை உங்களின் விருப்பத்திற்கு ஏற்ற விதத்தில் வாழலாம்.

தனிமையை புரிந்துகொள்ளுங்கள் - தனிமையில் இரண்டு வகை உள்ளது. ஒன்று நாமே நம் சந்தோஷத்திற்காக இருப்பது. மற்றொன்று மிக சோகமாக இருக்கும் சமயம் தனிமையில் வாடுவது. இந்த இரண்டாம் வகையான தனிமை படுத்தும் பாட்டை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அச்சமயம் நம்மை புரிந்து கொண்டவர்களிடம், ந‌ம்முடைய வேதனைகளை கொட்டித் தீர்ப்பதால் ஓரளவு அந்த தனிமையிலிருந்து விடுபடலாம்.

தனிமையை புறக்கணியுங்கள் - உங்களை போல் தனிமையில் வாடும் வேறு ஒருவரை‌க் கண்டால் அவரிடம், சாதாரணமாக பேச்சு கொடுங்கள். ஒரு சிம்‌ப்பிளான அறிமுகத்திற்கு பின் நலம் விசாரியுங்கள். இப்படி செய்வதானால், உங்களின் புதிய நண்பரை தனிமையின் பிடியிலிருந்து விடு‌வி‌த்‌திருப்பீர்கள். கொஞ்சம் நேரத்திற்கு உங்களைவிட்டும் தனிமை விலகியிருக்கும்.

குடும்பம் கைகொடுக்கும் - உங்கள் குடும்பத்தினரிடம் அதிக நேரம் செல‌விடு‌ங்கள். உங்களை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது என நீங்கள் எண்ணினாலும், உங்களுக்கு தேவையான அனைத்து சந்தோஷமும் உங்கள் குடும்பத்திலேயே இருக்கலாம்.

தனிமையை வெல்லுங்கள் - தனிமையை மறக்க முயற்சி செய்யுங்கள். சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். சிறு வயதிலிருந்து உங்களை கவர்ந்த விஷயத்தை கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு உபயோகப்படும் வகையில் பொழுதுபோக்கு விஷயங்களை மாற்றி அமையுங்கள்.

இவை அனைத்தையும் விட தனிமையை நொடி பொழுதில் களைய ஒரு வித்தியாசமான, சுவாரஸ்யமான முறை உடனடியாக ஒரு செல்ல‌ப் பிராணி வாங்குவதுதான்.

நாய், பூனை, பறவைகள் என எதுவாக இருந்தாலும் உங்களிடம் இருந்து அன்பு மற்றும் சிறிது அக்கறையை மட்டும் எதிர்பார்க்கும் இவை என்றும் உங்களை மீண்டும் தனிமையில் விடாது என்பது உறுதி.

நான் பார்க்கும் உலகம்


* காதல் என்னும் வேதனை!


காதல் என்னும் வேதனை!

உன்னைப் பார்க்கும் போதெல்லாம்

என் மனத்தில் பட்டாம்பூச்சி சிறகடிக்கிறது

உன்னுடன் பேச முயலும்போதெல்லாம்

வார்த்தைகள்சிக்கிக் கொண்டு செயலிழக்கின்றன

நம் கண்கள் கலந்து பிரிகையில்

தலை முதல் கால் வரை மின் அலை தாக்குகிறது

எப்படிச் சொல்ல என் காதலை உன்னிடம்

கவிதையில் சொல்ல நான் கம்பனில்லை

வார்த்தையில் சொல்ல நான் வசனகர்த்தா இல்லை

பாட்டில் சொல்ல நான் பாகவதன் இல்லை

ஒன்றும் செய்ய இயலாத ஒரு காதலன் நான்

எப்படிச் சொல்வேன் அன்பே என் காதலை உன்னிடம்?!


என்ன முயன்றும் உன் இதயத்தை

என்னால் திறக்க முடியவில்லை.

அன்பென்ற சாவியும் ,

கொஞ்சல் என்ற சாவியும்

கெஞ்சல் என்ற சாவியும்

கோபம் என்ற சாவியும்

புகழ்ச்சி என்ற சாவியும்

எல்லாமே பயனற்றுப் போயின!

நீயே சொல்லி விடு

எப்படித்தான் திறப்பது

உன் இதயத்தை?!


நான் பார்க்கும் உலகம்

* மன ஊனமில்லா மணமகன் தேவை


* இஸ்லாமிய ஆண்கள் கண்டிப்பாக படிக்க வேண்டியவை மன ஊனமில்லா மணமகன் தேவை


மன ஊனமில்லா மணமகன் தேவை


அல்லாஹ்வின் திருப்பெயரால்...

‘’பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்!’’ (அல்குர்ஆன் : 4:4)


வல்ல அல்லாஹ் மணமகளுக்குமஹர் கொடுத்து மணமுடி என்று சொல்லநீ கொடுக்க வேண்டிய மஹரைபெண்ணான என்னிடம் கேட்கநீ கேட்ட மஹரை கொடுக்கஎன் தந்தையோ இன்னும் பாலை வெயிலில்தன் அனைத்து சுகங்களையும் இழந்து!

என்னைப் பார்க்க வந்தஉன் தாயும், உன் சகோதரியும்பெண்ணுக்கு என்ன கொடுப்பீர்கள்என்றவுடன் என் தாயோ நடுக்கத்துடன்வெளிறிய பார்வையுடன் என்னை பார்த்துஎங்களால் ஆனதை கொடுப்போம் என்கிறார்நீங்கள் தெளிவாக சொன்னால்தான்அடுத்த பேச்சுகளை தொடங்குவோம்!

உன்தாயின் பட்டியல் தொடங்கியதுலட்சத்துடன் - பால்குடம், தயிர்குடம்பிறை அனைத்தையும் கணக்கு எடுத்துஒரு வருட விதவிதமான சீர், நகை பின்எத்தனை பேருக்கு சாப்பாடு தருவியஎத்தனை பேருக்கு பசியாற தருவிய!(சாப்பாட்டையே பார்க்காத மாதிரி)

மனை உள்ளது வீட்டைகட்டி கொடுத்து விடுங்கள்!(தற்பொழுது குடிசைதான் வீடாம்)என் குடும்ப சூழ்நிலையில்இந்த சம்பந்தம் அமையுமாமணமேடையில் அமருவோமாஎன்று மனதுக்குள் அழ!

என் தந்தையோ நோயின்வாசல்படியை தட்டநானோ வீட்டின் நிலைப்படியில்!எத்தனையோ பேர் என்னைபெண் பார்த்து சென்ற பிறகும்இன்னும் முதிர் கன்னியாகஉனக்கு கொடுக்க என்னிடம் தங்கம் இல்லை!ஆனால் என் தலையிலோ நிறைய வெள்ளிகள்!

பெண் பார்க்கவந்தவர்களில் சிலர்என் பையன் சிகப்பு பெண்தான்பார்க்க சொல்கிறான்பெண் கருப்புதான்இருந்தாலும் நாங்கள் கேட்பதை(வரதட்சனையை) தந்து விட்டால்என் பையனைசம்மதிக்க வைத்து விடுகிறோம்!பணம் படைத்தவர்களின்கருப்பு நிற பெண் கரையேறி விடும்!பணம் இல்லா குடும்பத்துகருப்பு நிற பெண்களைகடலில் தள்ளி விடலாமா?


பெண்ணை பெற்றவன்ஜமாத்தில் லட்டர் வாங்கிஊரில் பிச்சை எடுத்தால் கேவலம்என்று முகம் தெரியா ஊரில்பள்ளியில் தொழுகை முடிந்தவுடன்பாவா குமராளி வந்திருக்கிறேன்திருமணம் நிச்சயம் ஆகிவிட்டதுஉதவி செய்யுங்கள் என்றுதுண்டை ஏந்தி நிற்பதைபார்த்திருக்கிறாயா?பார்த்தவுடன்கோபம் வரவில்லையா?என்ன செய்தாய் நீ?என் தாய் தந்தை மனம்கோணாமல் நடப்பேன் என்றாய்!

இளைஞனே திருமணம் முடிக்கும்நாள்வரை வீரபேச்சுக்கள் உன்னிடத்தில்மணப்பெண் பார்க்க ஆரம்பித்தால்இதுநாள்வரை தாய், தந்தைபேச்சைகேட்காத நீ கூட திருமணபேச்சு வார்த்தையில் மட்டும்என் தாய் தந்தையின் மனம்நோக நடக்கமாட்டேன் என்கிறாய்!

இளைஞனே உன் தெருவில்திருமண வயதில் ஏழை பெண்ணிருக்கநீயோ பணம் படைத்த வீட்டில்பெண்ணை தேட!அவளும் திருமண வயதை தாண்டிய பிறகுவேற வழி இல்லை என்றுபிறமத பையனோடு ஓட!இப்பொழு வருகிறது உனக்கு கோபம்என் தெரு பெண்எப்படி ஓடலாம்!அவளை கண்டால் வெட்டுவேன் என்று!அவள் ஓடியதற்கு நீயும்உன்னை போன்றவர்களும்காரணம் இல்லையா?

முகமூடி திருடன் இரவில் திருடுகிறான்நீயோ முகமூடி இல்லாமல் குடும்பத்தோடுபகல் நேரத்தில் பலரின் அங்கீகாரத்தோடுகொள்ளை அடிக்கிறாய் வரதட்சனைஎன்ற பெயரில் மணமகள் வீட்டில்மனசாட்சியும் இல்லை!மறுமை பயமும் இல்லை உனக்கு!

மணமகனே நான்உன்னிடம் கேட்கிறேன்நீ என்ன மஹர் தருவாய்எனக்கு - எதற்காக என்கிறாயா?உன் வீட்டில் வந்துஆயுள் முழுவதும் உனக்கும்உன் குடும்பத்திற்கும்சேவை செய்வதற்கும்!குடும்பத்தலைவன் என்ற பட்டத்திற்காக!உன் பிள்ளையை பெற்று தந்தவுடன்நானும் தகப்பன் என்றுபெருமிதம் அடைவதற்காக!என் தாய் தந்தையைஎன் உடன்பிறந்தவர்களை, தோழிகளைநான் வாழ்ந்த இடத்தையேவிட்டு விட்டு நீ காட்டில் இருந்தாலும்வெளிநாட்டில் இருந்தாலும் உன்னோடுவருவதற்கு! - எத்தனை லட்சம்? மஹர் தருவாய்?

இளைஞர்களே! இன்னுமா உறக்கம்!உறக்கத்திலிருந்தும் மன ஊனத்திலிருந்தும்விழித்தெழுங்கள்!இந்த பூமி பந்தில் தப்பித்து விடலாம்நாளை மஹ்ஷர் பெருவெளியில்இறுதி தீர்ப்பின் நாளின்அதிபதியாம் வல்ல அல்லாஹ்விடம்என்ன பதில் சொல்வாய்தாய் தந்தையை கை காட்டுவாயா?முடியாது இளைஞர்களே!

நீங்கள் மட்டும்தான் உங்களின்காரியத்திற்கு பதில் சொல்வீர்கள்வல்ல அல்லாஹ்வை அஞ்சுங்கள்!பிறமதக்கலாச்சாரத்தில் இருந்துநம் சமுதாயத்தில் வேரோடி இருக்கும்இந்த வரதட்சனை என்னும் கொடுமையைஅகற்றி முதிர் கன்னி இல்லா நிலைக்குமஹர் கொடுத்து மணமுடியுங்கள்!இம்மை மறுமையில் வெற்றியடைங்கள்.

நான் பார்க்கும் உலகம்

* வெற்றிக்கு வழி


வெற்றிக்கு வழி
**************


1. தினமும் அரை நாள் (12 மணி நேரம்) கடுமையாக உழையுங்கள்.
2. வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்புதான் என்பதை மறக்காதீர்.
3. வெற்றி ஒன்றையே மனம் நினைக்கவேண்டும்.
4. வெற்றி என்னும் ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏறவேண்டும்.
5. ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது,
மற்றொன்று நாமே ஏறுவது.
6. வியாபார அபாயங்களை கண்டு அஞ்சக்கூடாது.
7. பிடித்த காரியத்தை செய்யவேண்டும் என்பதைவிட செய்யும் காரியத்தை நமக்கு பிடித்ததாய் ஆக்கிக்கொள்ளவேண்டும்.
8. முடியாது, தெரியாது, நடக்காது, என்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது.
9. பாதுகாப்பாய் ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது.
10. வெற்றிக்கு தேவை பாதி அதிர்ஷ்டம் பாதி அறிவு.