Sunday, September 22, 2013

* விபச்சாரியின் முந்தானை வாசம்


விபச்சாரியின் முந்தானை வாசம்

விரிச்சி விரிச்சி மடிச்ச பாய்க்கு
ஒரு படி சோறு மிச்சம்; எங்க
வாசம் வீசும் முந்தானைக்கு - அவிசாரின்னு
பட்டம் மிச்சம்!

கயிறு கட்டி புடவை கட்டி
உடம்பெல்லாம் வாசம் வீச;

விரிச்ச பாயி அத்தனையும் - என்
புள்ளை குடும்பம் தின்ன சோறு!

கூவி கூவி வித்ததில்லை
உடம்பு விலை பத்துரூபா; இங்கு
மாறி மாறி வந்தவனுங்க - மானம்
ரோஷம் எத்தனை ரூபா?!

உடம்பு காசு தொழிலா - இது
உடம்பு சுகம் - போதைப் பித்து;
நோய் வரும் - உயிரு போகும்
வேஷம் போட்ட வாழ்க்கை இல்லையே!

மேஞ்சி உடல் தின்னதால -
காமம் காமம் வாசம் தானே; நாங்க
விட்ட ஏப்பம் அத்தனையும் -
பலரு குடும்பம் கெடுத்த கதைங்க தானே?!

காலம் காலமா வந்த சனங்க -
கணக்குல வேணாம் விட்டுத் தள்ளு;
காலு தட்டு விழுந்த பொழப்பா -
கணக்குதுங்க எங்க வாழ்க்கை!

இரத்தம் சுண்டி நிக்கையில - உடம்பு
வெடிச்சி சாகையில - நாயி கூட
மோன்டு போகுமோ (?) இவ
வேசி தானேன்னு உமிழ்ந்து கூறுமோ?!

நாண்டுகிட்டு சாகலாம்னு - குடும்ப பாரம்
கணக்கையில; விதி
உடம்பெதுக்கு விற்கதான்னா -
இந்த சிறுக்கி புள்ள என்ன செய்ய?!

பல நாளு தயங்கி தயங்கி
விட்ட பயணம் எத்தனையோ;
இதோ.... அடுத்த ஆளு கதவைத் தட்டுதே
திறக்கவா... வேண்டாமா?

சரி... சரி;
மனசே மனசே கொள்ளாத.....
இன்னைக்கு மட்டும் வெச்சிகிட்டு -
நாளைலருந்து நிறுத்திக்கவா? !!

நான் பார்க்கும் உலகம்

* ஏனெனில் இங்கு அன்பில்லை..


ஏனெனில் இங்கு அன்பில்லை..


முடிந்து போன இந்த நாள் 
எவ்வளவு அன்பானது 
சனத்தடிமிக்க ஒரு சாலையைக் கடந்திட
என்னை பற்றிக் கொண்ட
உனது கரங்கள்
யுகங்களைக் கடந்து பூமிக்கு வந்த
தேவதையொருத்தியின்
வருடலென . . .

உன் கண்களையும்
இதழ்களையும்
கம்மலையும்
உன்னருகில் இருந்து பார்த்த
போதெல்லாம்
சரணடைவது பற்றி எனக்கு தவறாக
தெரியவில்லை

சரணடைவது என்பது காதலால் அன்றி
வேறொன்றும் அல்ல
வெள்ளைக்கொடிகளோடு நான் இருப்பதாக
எண்ணியிருந்திருக்கலாம் நீ
ஏனெனில்
நீ என்னை கொன்றுபோட்டுப் போன
மதிய நேரம் என்பது துயரம் மிகுந்தது
எங்கு பார்த்தாலும் கானல் நீரில் நீந்தியிருந்தேன்
ஜோடி பிரிந்த மீனினைப் போல

உனக்கு நினைவு இருக்கிறதோ தெரியவில்லை
நீ விட்டுச் சென்ற வாசலிலோ
அல்லது ஏறிச்சென்ற வாகனத்திலோ
துடித்தபடி சாக முனையும்
என் எதிர்பார்ப்புக்களும் காதலும்
முடிந்து போன இந்த நாள்
எவ்வளவு வன்முறையானது


உனக்கு நினைவு இருக்கிறதோ தெரியவில்லை
நீ விட்டுச் சென்ற வாசலிலோ
அல்லது ஏறிச்சென்ற வாகனத்திலோ
துடித்தபடி சாக முனையும்
என் எதிர்பார்ப்புக்களும் காதலும்
முடிந்து போன இந்த நாள்
எவ்வளவு வன்முறையானது


நான் பார்க்கும் உலகம்

* வெற்றிக்கு வழி


வெற்றிக்கு வழி
**************


1. தினமும் அரை நாள் (12 மணி நேரம்) கடுமையாக உழையுங்கள்.

2. வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்புதான் என்பதை மறக்காதீர்.

3. வெற்றி ஒன்றையே மனம் நினைக்கவேண்டும்.

4. வெற்றி என்னும் ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏறவேண்டும்.

5. ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது,
மற்றொன்று நாமே ஏறுவது.

6. வியாபார அபாயங்களை கண்டு அஞ்சக்கூடாது.

7. பிடித்த காரியத்தை செய்யவேண்டும் என்பதைவிட செய்யும் காரியத்தை நமக்கு பிடித்ததாய் ஆக்கிக்கொள்ளவேண்டும்.

8. முடியாது, தெரியாது, நடக்காது, என்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது.

9. பாதுகாப்பாய் ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது.

10. வெற்றிக்கு தேவை பாதி அதிர்ஷ்டம் பாதி அறிவு.


நான் பார்க்கும் உலகம்

* மனைவிகளை கணவன்மார்கள் ஏமாற்றுவதற்கான 8 முக்கிய காரணங்கள்!!!


மனைவிகளை கணவன்மார்கள் ஏமாற்றுவதற்கான 8 முக்கிய காரணங்கள்!!!

மனைவிகளை கணவன்மார்கள்
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்வதுண்டு. ஆனால் அந்த பயிர் பல பேரின் வாழ்க்கையில் பாதியிலேயே அறுவடை
ஆகி விடுகிறது. தன் மனைவியை ஏமாற்றி. இன்னொரு பெண்ணிடம் புது உறவை வைத்துக் கொள்ள சில ஆண்கள்.


கண்ணில் விளக்கெண்ணெயை ஊற்றி கொண்டு குற்றம் கண்டுபிடிக்க காரணம் தேடி அலைவார்கள். பல நேரம் இப்படி நடப்பது தன் மனைவியை காயப்படுத்தி. அவளை பழிவாங்கவே. ஆனால் சில நேரம் தன் குற்றம் வெளிப்படாது என்ற தைரியத்தால், இந்த தவறுகளை ஆண்கள் செய்கின்றனர்

.

ஆண்கள் ஏன் தங்களின் மனைவியை ஏமாற்றுகிறார்கள்? கமல் குரானா என்ற உறவு சார்ந்த ஆலோசகர், திருமணத்திற்கு பின் ஆண்கள் ஏன் பிற பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்ற ஆய்வை நடத்தினார். இதற்காக அவர் பல தம்பதிகளிடம் கலந்துரையாடி தன் முடிவை


மனைவிமார்கள் பார்வையிலிருந்து வெளியிட்டார். அப்படி அவர் நடத்திய ஆய்வின் கண்டுபிடிப்புகளில் சிலவற்றை இப்போது பார்க்கலாமா...




திருமண பந்தத்தில் கோளாறு

வீட்டில் மனைவியுடன் தொடர்ச்சியாக சண்டை ஏற்பட்டால், அந்த சண்டைகளுக்கு தீர்வு ஏற்படாமலே போய் விட்டால், ஆண்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டு அமைதியை தொலைப்பார்கள். இப்படிப்பட்ட சந்தர்பத்தில் ஒன்று அவர்கள் சண்டை போட முற்படுவார்கள் அல்லது தப்பி ஓட முடிவெடுப்பார்கள். இப்படிப்பட்ட தருணத்தில் மற்றொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டால், மனைவியுடன் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண விரும்பாமல், அந்த புதிய உறவுடன் சந்தோஷமாக இருப்பார்கள். இப்படி செய்யும் போது, இவ்வகை குடும்ப பிரச்சனைகளில் இருந்து விலகி, மற்றொரு துணையுடன் அவர்கள் நிம்மதி அடைவார்கள். அதனால் மனைவியை ஏமாற்ற முற்படுவார்கள்.



உறவில் சலிப்பு தட்டும் போது ஏமாற்ற தொடங்குவார்கள்


சில ஆண்களுக்கு ஒரே மாதிரி செல்லும் திருமண வாழ்க்கை அலுப்பை ஏற்படுத்தி விடும். இவ்வகை ஆண்கள் வேறு ஒரு பெண்ணுடன் புது உறவில் ஈடுபடுவதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. அலுப்புத் தட்டும் உறவை நிவர்த்தி செய்வதற்கு பதிலாக, அதிலிருந்து விலகி புது உற்சாகத்தை பெற புது உறவையே நாடுவார்கள். சிக்கலில் இருக்கும் அலுப்புத் தட்டிய உறவை சரி செய்வதை விட, புது உறவில் உடனடியாக ஏற்படும் மன நிறைவையே அவர்கள் விரும்புவார்கள். இவ்வகையான புது உறவு அவர்களுக்கு உடனடியான புத்துணர்ச்சியை தரும். அந்த தைரியத்தில், அவர்கள் இடர்பாடுகளை சந்திக்க தயாராகி விடுவார்கள்.



உடலுறவில் விதவிதமான அனுபவம் பெற ஆண்கள் ஏமாற்ற நினைப்பதுண்டு


உடலுறவு என்பது எப்போதுமே தாம்பத்தியத்தில் முதன்மையான பங்கை வகித்து வருகிறது. சில ஆண்கள் ஒரே மனைவியுடன் வாழ்நாள் முழுவதும் உடலுறவு வைத்துக் கொள்வதில் திருப்தி அடைவார்கள். ஆனால் இன்னும் சிலருக்கோ உடலுறவை பல பெண்களிடம் வைத்துக் கொள்ள அலாதி பிரியம் ஏற்படும். புது வகை இன்பங்களை சோதித்து பார்க்க, பல பெண்களிடம் பல முறை உடலுறவு வைத்துக் கொள்ள விரும்புவார்கள். அதனால் இவ்வகை உறவு வைத்துக் கொள்ளும் முன், அவர்கள் எதையும் யோசிப்பதில்லை. சொல்லபோனால் செக்ஸ் விஷயத்தில் அவர்கள் கை தேர்ந்தவர்கள் என்ற பெருமையே அவர்களிடம் மேலோங்கி நிற்கும்.



ஏமாற்றும் ஆண்கள் பாசத்தில் திருப்தி அடையாமல் இருப்பார்கள்


மனைவிகள் அவர்களுடைய வாழ்க்கையை கவனிப்பதில், வேலை பார்ப்பதில், குழந்தைகளை கவனிப்பதில், மாமனார் மாமியாரை கவனிப்பதில் அல்லது பெற்றோர்களை கவனிப்பதில் முழுமையாக ஈடுபட்டிருக்கும் போது, கணவன்மார்கள் தனிமைப்படுத்தப்பட்டு பாசத்தை எதிர்பார்ப்பார்கள். ஆண்கள் மட்டும் என்ன மரக்கட்டைகளா என்ன? தன் மீதும் தன் மனைவி அக்கறை காட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். தாங்கள் படும் பாட்டை மனைவிகள் புரிந்து, அவர்களை பாராட்ட வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். பல ஆண்கள் தங்களை பாராட்ட வேண்டும் என்று கேட்பது குழந்தைத்தனம் என்று எண்ணுவதாலேயே அவர்களுக்குள் இந்த மனக்குழப்பம் ஏற்படுகிறது. சில நேரம் அவர்களுக்கு இடையே உள்ள அலைவரிசை ஒத்துப்போவதில்லை. அதனால் மனைவி என்ன தான் மனம் விரும்பிய படி நடந்தாலும், சில ஆண்கள் ஏதாவது குறை கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள்.

சில நேரம் உடன் வேலை பார்க்கும் பெண்கள் அவர்களை புகழ்ந்து தள்ளி ஊக்கப்படுத்துவதால், அது கிடைக்காத வீட்டின் மீது நாட்டம் குறைந்து ஏமாற்ற தோன்றும்.

சிறு வயதின் பாதிப்பும் ஏமாற்ற தூண்டும்

சில ஆண்கள், தங்களின் குழந்தை பருவத்தில் தங்கள் பெற்றோர்கள் ஏமாற்றுவதை கண்டு வளர்ந்திருக்கலாம். இது அவர்கள் ஆழ் மனதில் தவறு என்ற தெரிந்த போதிலும், எங்கோ ஒரு மூலையில் ஏமாற்றலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடும். நாம் அனைவரும் நம் பெற்றோர்களிடம் இருந்து பலவற்றை கற்பதால், இந்த விஷயத்தில் உள்ள இடர்பாட்டை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. நம் மூத்த சகோதர சகோதரிகள், அண்டை வீட்டார்கள் மற்றும் உடன் பழகும் நபர்கள் ஏமாற்றுவதை நாம் காணும் போது, அது நம்மையும் தொற்றிக் கொள்ளும். சில நேரம் விடலை பையனாக, சில ஆண்கள் பல பெண்களிடம் காதல் வயப்பட்டிருக்கலாம். அவர்கள் வேண்டுமென்றே அல்லது எதேர்ச்சையாக தங்களின் பழைய காதலிகளை மறுபடியும் நாடுவதுண்டு. ஆனால் சிலரோ தங்கள் கடந்த காலத்தை போலவே, இப்போதும் பல பெண்களிடம் உறவு வைத்திருப்பார்கள். நம் மனம் என்ன நினைக்கிறதோ, அதை கண்டிப்பாக அடையும் என்று சும்மாவா சொன்னார்கள். அதனால் தெரிந்தோ தெரியாமலோ, இவ்வகை ஆண்களை விரும்பும் பெண்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.

ஏமாற்றும் மனைவியை ஏமாற்றும் ஆண்கள்

தங்களை ஏமாற்றும் மனைவியை பழி வாங்க பல பெண்களிடம் உறவு வைத்துக் கொள்ள ஆண்கள் விரும்புவார்கள். அவர்களின் மனைவிகள் மனம் திருந்தி உண்மையை ஒப்புக் கொண்ட போதிலும் கூட இவ்வகை தொடர்புகளை சில ஆண்கள் துண்டிப்பதில்லை. தங்கள் மனைவியை மன்னிக்க மனம் இடம் கொடுக்காத கனவான்களே, இத்தகைய செயல்களில் ஈடுபடுவார்கள்.



விவாகரத்து பெறுவதற்கு மனைவியை ஏமாற்றும் ஆண்கள்


சில ஆண்கள் வேண்டுமென்றே ஒழுக்கக்கேடாக இருப்பார்கள். இதை ஒரு சாக்காக வைத்து விவாகரத்தை நாடுவார்கள். நம் சட்டமும் ஒழுக்கக் கேடாக நடக்கும் ஆண்களிடம் இருந்து பெண்களுக்கு விவாகரத்தை பெற்று தருகிறது. வேண்டுமென்றே மனைவிக்கு தெரியும் படி ஏமாற்றி, அவளை எரிச்சலடைய செய்து தானாக விவாகரத்து கேட்க வைப்பதே அவர்களின் எண்ணமாக இருக்கும். இவ்வகை ஆண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இவ்வகை ஆண்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.



தன் மனைவிக்கு தான் தேவையில்லை என்று எண்ணும் போது ஆண்கள் ஏமாற்றுவார்கள்

தன் மனைவிக்கு தான் தேவையில்லை என்ற உணர்வு ஒரு ஆணுக்கு எப்போது எழுகிறதோ, அப்போதே அவளைப் புரிந்து கொண்டு தலையில் வைத்து தாங்கும் வேறு ஒரு பெண்ணிடம் உறவு வைத்துக் கொள்ள ஆண்கள் விரும்புவார்கள். இந்த புது உறவு ஏற்பட்ட காரணத்தினால் தான், எதிர்பார்த்ததை புதிதாக வந்த பெண்ணிடம் இருந்து பெறுவார்கள். அவர்கள் திருமண வாழ்க்கையில் நீண்ட நாட்களாக கிடைக்காத இந்த கவனிப்பு திடீரென்று வேறு ஒரு பெண்ணின் மூலமாக கிடைப்பதால், அந்த புது உறவுடன் ஐக்கியமாகி விடுவார்கள்

* றாபியதுல் அதவிய்யாவில் ஸீஸி இராணுவத்தால் ஷஹீதாக்கப்பட்ட மகள் அஸ்மாவுக்கு தந்தை பல்தாஜி எழுதிய உருக்கமான கடிதம் )


றாபியதுல் அதவிய்யாவில் ஸீஸி இராணுவத்தால் ஷஹீதாக்கப்பட்ட மகள் அஸ்மாவுக்கு தந்தை பல்தாஜி எழுதிய உருக்கமான கடிதம் )

நேசத்திற்குரிய என்னருமை மகளே!

எனக்கே ஆசானாக மாறிய ஷஹீதா அஸ்மா பல்தாஜியே!

நான் உனக்கு பிரியாவிடை வாழ்த்து சொல்லவரவில்லை. நாளை நாம் சந்திப்போம் என்று சொல்லத்தான் வந்தேன். நீ அநியாயத்திற்கெதிராக தலைநிமிர்ந்து வாழ்ந்தாய். அதன் அனைத்து விலங்குகளையும் நிராகரித்தாய். எல்லையற்ற சுதந்திரத்தை காதலித்தாய்.

இந்த உம்மத்தை மீளெழுச்சி பெறச் செய்யும் வழிகளையும் அது தன் சொந்த நாகரீகத்தை மீளவும் புதிதாய் அடைவதற்கான புதிய திசைகளையும் அமைதியாக நீ தேடினாய்.

உமது வயதை ஒத்தவர்கள் சோலியாய் இருந்த செயற்பாடுகளில் நீ ஈடுபட வில்லை. பாரம்பரிய கல்விமுறை உனது அபிலாஷைகளை உனது நலன்களை நிறைவேற்றாத போதிலும் எப்போதும் நீதான் படிப்பில் முதலாவதாக வந்தாய்.

உனது இந்த சொற்ப வாழ்நாளில் உனக்கருகே இருந்து அன்பை சுவாசிக்க முடியவில்லை. நான் மகிழ்ச்சியாக இருக்கவும் உனக்கருகே இருந்து கிடைக்கும் இன்பத்தை அநுபவிக்கவும் எனது நேரம் இடம் தரவில்லை.

கடைசியாக, நாம் சராசரியாக அமர்ந்திருந்த றாபியா மைதானத்தில் வைத்து நீ என்னிடம் ஆதங்கப்பட்டாய். ”எம்முடன் இருந்து கொண்டே நீங்கள் பிஸியாக இருக்கிறீர்களே!”.

நாம் பரஸ்பரம் சந்தோசமாயிருந்து அனுபவிப்பதற்கு இந்த வாழ்வு எமக்கு இடம்தர மாட்டாது என நான் சொன்னேன். நாம் அருகருகே இருந்து பரஸ்பரம் மகிழ்வுறும் சந்தோசம் சுவனத்தில் நமக்கு கிடைக்கவேண்டும் என இறைவனைப் பிரார்த்தித்தேன்.

நீ ஷஹீதாவதற்கு இரு நாட்களுக்கு முன்பு உன்னை நான் மணமகள் ஆடையுடன் கனவில் கண்டேன். வர்ணிக்க முடியா அழகுடன் பளிச்சிட்டுக் கொண்டு இருந்தாய்.

நீ எனக்கருகில் தூங்கிக் கொண்டிருந்த வேளை ”இந்த இரவு உனக்கு திருமண நாளா? என்று நான் உன்னிடம் இரகசியமாகக் கேட்டேன். ஆனால், மாலையில் அல்ல பகல் நேரத்திலே எனக்கு நீ சுவனத்து திருமண நாளை அறிவித்துவிட்டு விடை பெற்றுவிட்டாய்.

வியாழனன்று பகல் நேரத்தில் உன்னுடைய ஷஹாதத் செய்தி கேட்டபோது என் கனவின் அர்தத்தைப் புரிந்து கொண்டேன். அல்லாஹ் உன் ஷஹாதத்தை ஏற்றுக் கொண்டான் என்ற நற்செய்தியையும் நீ சொல்லித்தான் சென்றாய்.

நாம் சத்தியத்திலே இருக்கிறோம், எமது எதிரி அசத்தியத்தில் இருக்கிறான் என்ற நம்பிக்கையை நீ மேலும்; அதிகரித்து விட்டாய்.

உனது கடைசிப் பிரியாவிடையில் எனக்கு இருக்கக் கிடைக்கவில்லை. அந்த பிரியாவிடையை எனது இரு கண்களால் பார்க்க கிடைக்கவில்லை. உனது நெற்றியில் கடைசி முத்தமொன்றை தரமுடியாமல் போய்விட்டது. உனக்கு இமாமத் செய்யும் கண்ணியத்தை பெற முடியவில்லை. இவை எல்லாம் என்னை வாட்டி வதைக்கிறது.

அல்லாஹ் மீது ஆணையாக, என்னருமை மகளே! என்னை தடுத்தது வாழ்க்கை மீதான அச்சமோ அநியாயக்காரனின் சிறை பற்றிய பயமோ அல்ல. நீ எதற்காக உனது இன்னுயிரை நீத்தாயோ, அந்த தூதினை முழுமைப்படுத்தும் பேராசைதான் என்னைத் தடுத்தது. அந்த தூதுதான் நாம் வெற்றிவெறப்போகின்ற - இலக்குகளை நிறைவேற்றப்போகின்ற - புரட்சியை முழுமைப்படுத்தும் பணியாகும்.

நீ தலைநிமிர்ந்து முன்னோக்கி சென்ற நிலையிலே உனது உயிர் பிரிந்திருக்கிறது. ஏமாற்றின் ரவைகளை உன் மீது பாய்ச்சிய அந்தக் கொடிய அநியாயக்கார்களை நீ மிகக் கடுமையாக எதிர்த்த நிலையிலே உன்னை ஷஹாதத் வந்தடைந்திருக்கிறது.

இந்தக் கவலை எவ்வளவு உயர்ந்தது! எவ்வளவு தூய்மையான உள்ளம் இது! நீ அல்லாஹ்வை உண்மைப்படுத்தினாய். அல்லாஹ்வும் உன்னை உண்மைப்படுத்தி விட்டான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஷஹாதத்தை கண்ணியப்படுத்துவதற்காக எமக்கு முன்னால் அவன் உன்னைத் தெரிவு செய்திருக்கிறான்.

கடைசியாக, பாசம் நிறைந்த என்னருமை மகளே! எனது ஆசானே! நான் உனக்கு பிரியாவிடை சொல்ல வரவில்லை. மீண்டும் சந்திப்போம் என்று சொல்லவே வந்தேன்.

அன்பு நபியின் நீர்த்தடாகத்தில் அவர்களது தோழர்களுடன் மிக விரைவில் நீரருந்துவோம். ஆட்சியதிகாரமும் வல்லமையும் கொண்டவனிடம் உண்மையின் சிம்மாசனத்தில் மிக விரைவில் உட்காருவோம்.

அந்த சந்திப்பில்தான் நமது பேராசைகள் நிறைவேறபோகின்றன. அன்றுதான் நாம் நமது அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியைப் பருக முடியும். அதன் பிறகு நமக்கு தாகமென்பதே கிடையாது.

இப்படிக்கு, உனது அன்புத் தந்தை பல்தாஜி


நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanaparkumUlagem

* போராளிகளே புறப்படுங்கள்


போராளிகளே புறப்படுங்கள்


போராளிகளே புறப்படுங்கள்
ஒரு துப்பா...க்கியின் ரவைகளினால்
எனது இறைச்சல் அடங்கி விட்டதுக்காய்
நமது எதிரி
வென்றுவிட்டான் என்று நீ
குழம்பிவிடக் கூடாது

அன்றுதான்
போராட்டம் எனும் நமது
இருண்ட குகைக்குள்
வெற்றிச் சூரியனின்
வெண்கதிர்கள் நுழைகின்றன
என்பதை நீ மறந்து விடவும் கூடாது

உனது தலைவனுக்கு
ஒன்றுமே நடக்கவில்லை என்பதனை
நீ எப்போதும் மறந்திடாதே!
தலைவர்கள் ஒரு போதும்
மரணிப்பதில்லை என்பதனை
நான்
சொல்லித்தரவில்லையா?
என்னை அதற்காய் நீ
மன்னித்து விடுவாயாக.

நாம் அல்லாஹ்வின் பாதையில்
நடந்து வந்தவர்கள்
நீங்களெல்லாம் தொடர்ந்து அப்பாதையில்
நடக்க இருப்பவர்கள்

இந்தப் போராட்டத்தில்
சூடுண்டாலும்இ வெட்டுண்டாலும்
சுகமெல்லாம் ஒன்றேதான்
நமது போராளிகள்
யாரும் மரணிக்கப்போவதில்லை!

போராளிகளே புறப்படுங்கள்
ஓரத்தில் நின்று கொண்டு
ஓய்வேடுக்க நேரமில்லை

இந்த மையத்தைக் குளிப்பாட்டுவதில்
உங்கள் நேரத்தை வீனாக்க வேண்டாம்

தண்ணீரும் தேவையில்லை
பன்னீரும் தேவையில்லை

உங்கள் தலைவனின் உடலில்
இரத்தத்தால் சந்தனம் பூசப்பட்டுள்ளதா?

அது அவனின் மண்ணறையில்
சதா மணம் வீச வேண்டுமெனில்
தூக்கி விரைவில் எடுத்துச் சென்று
தொழுது விட்டு அடக்குங்கள்

இந்த மையித்தைக் குளிப்பாட்டுவதால்
கடைசி நேரத்தில் தலைமைத்துவக்
கட்டுப்பாட்டை மீறாதீர்கள்

கண்ணீர் அஞ்சலிகள் போதும்
கவலைகளை கொஞ்சம் மறந்து தூக்குங்கள்

இரத்தத்தால் தோய்ந்திருக்கும்
எனது ஆடைகளை எடுத்து வீசாதீர்கள்
வேண்டுமெனில் எனது "இஹ்ராம்"
துண்டுகளை
அவற்றுக்கு மேலே எடுத்துப் போடுங்கள்

எனது உடலில் இருந்து பொசிந்து வரும்
இரத்தச் சொட்டுக்கள்இ அவற்றை தழுவும்
பசியுடன் இருப்பதைப் பாருங்கள்

எனது மூக்குக்குள்ளும்
எனது காதுகளுக்குள்ளும்
பஞ்சுத் துண்டங்களை வைத்தென் முகத்
தோற்றத்தை
பழுதாக்கி விடாதீர்கள்

சில வேலைகளில் உங்களை நான்
சுவாசிக்காமலும்
சில வேலைகளில் உங்களை நான்
கேட்காமலும்
சில வேலைகளில் உங்களை நான்
பேசாமலும் இருந்திருக்கின்றேன்

குருடர்களாகவும்
செவிடர்களாகவும்
ஊமையர்களாகவும் இல்லாதவர்களால்
இப்போராட்டத்தில் நின்று பிடிக்க முடியாது

கபுறுக் குழிக்குள்ளாவது
என்னை சுவாசிக்க அனுமதியுங்கள்
ஹூர்லீன்களின் மெல்லிசைகளை
கேட்டு ரசிக்கும் பாக்கியத்தைத் தாருங்கள்

தூக்குங்கள் இந்த மையித்தை இன்னும்
சுனக்கவும் தேவையில்லை.
தூக்கி விரைவில் எடுத்துச் சென்று
தொழுது விட்டு அடக்குங்கள்
ஓரத்தில் நின்றுகொண்டு
ஓயாமல் தர்க்கம் செய்யும்

வீரத்திற்கு வையுங்கள் முற்றுப் புள்ளி

கருத்து வேறுபாடென்னும்
கறையான்கள் வந்துங்கள்
புரிந்துணர்வை சீரழிக்கும்! மிகவும்
புத்தியுடன் நடந்துகொள்ளுங்கள்

வேகத்தைக் குறைக்காமல்
வெற்றியுடன் முன்னே செல்லுங்கள்

ஆலமரமாய்
ஆயிரம் விழுதுகளுடன் நமது மரம்
வாழவேண்டும் - அதை
வாழ்விற்கப் புறப்படுங்கள்

எனது பனி இனிது மடிந்தது
உங்கள் பணிகளைச் செய்வதற்காய்ப்
புறப்படுங்கள்

அவனின் நாட்டத்தை
இவனின் துப்பாக்கி ரவைகள்
பணிந்து தலைசாய்நது
நிறைவேற்றியுள்ளன.

விக்கி அழுது
வீனாக நேரத்தை ஓட்ட வேண்டாம்
தூக்கி விரைவில் எடுத்துச் சென்று
தொழுது விட்டு அடக்குங்கள்

கவிஞர் திலகம்
எம்.எச்.எம் அஸ்ரஃப்

* வாழ்க்கை பாடத்தில்...



                                                            வாழ்க்கை பாடத்தில்...

சொந்தங்கள் சொர்க்கமே-அவர்கள்
சுய குணங்கள் தெரயும்வரை...!
நல்லதாய் நீ உள்ளவரை
நட்பும் அதுவரை நலமே ...!

உன் முன் சிரிப்பவர்கள்- எல்லோர்
உள்ளத்திலும் உண்மையில்லை...!
உதட்டோரம் தேன் மொழிகள்-அவர்
மனதோரம் கொடிவிஷங்கள்...!

தேன் சொட்டும் வார்த்தைகளை
நம்பி தேளாக துடிக்காதே- நாளை
வான் கொட்டும் மழைபோல-உன்
விழி கொட்டும் கண்ணீர்த்துளிகள்...!
உன்னை புரியாமல் பல பேச்சு
புரிந்திடாதோர் முன் என்ன பேச்சு...!

காற்றுக்கேற்ப வழைந்து கொடுக்கும்
நாணலாய் நீ இருந்தால்...!
அவர் அவர் மனதிற்கெற்ப-நீயும்
வழைந்து கொடுக்க நேர்ந்துவிடும்...!
ஆலமரத்தின் ஆணிவேராய் நீயிரு
சூறாவளி வந்தாலும்
சரிந்திடாது உன் உள்ளம்...!

கூடிவரும் கூட்டம் நாளை ஓடிவிடும்
உண்மை பாசமுள்ள கூட்டம்
உன்னை என்றும் தேடி வரும்..!
நினைவுகளை தரும் சொந்தம்
நிழலாய் தொடர மறப்பது ஏனோ...?
தேவைக்கு தேடி வந்து
தேவையில்லையென தவிர்த்திட
உறவுகள் என்ன ஜடபொருளோ????

உறவுகளுக்கில்லை அரவணைப்பு
உணர்வுகளுக்கில்லை மதிப்பு..!
ஊரவர் முன் நடிப்பு-உண்மை
அன்புக்கு இல்லை மதிப்பு...!

ஆண்டவன் போடும் கணக்கு-வாழ்வில்
ஆயிரம் பாடம் நமக்கு-யாவும்
அனுபவம் ஆனது எமக்கு...!