Thursday, July 4, 2013

* ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!


ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!

* ஆண்கள், உங்களிடம் பேசும் போது தனது மனைவியை உங்களோடு ஒப்பிட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.
* தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள். இது ஆண்களை உங்களை பற்றி தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்த தூண்டும்.
* உங்கள் வீட்டில் விழா, விசேஷம் தவிர வேறு எந்த விஷயத்திற்காகவும் உடன் வேலைப் பார்க்கும் ஆணை தேவையில்லாமல் வீட்டுக்கு அழைக்காதீர்கள். நீங்களும் எந்த காரணமும் இல்லாமல் துணையில்லாமல் அவர்கள் வீட்டிற்கு செல்லாதீர்கள்.
* எதற்காகவும், எந்த பிரச்சினைகளுக்காகவும் ஆண்கள் முன்னால் அழாதீர்கள். அழும் பெண்களை சுலபமாக ஆண்கள் திசை திருப்பிவிடுகிறார்கள்.
* ஆண் எந்த நோக்கத்திற்காக உங்களிடம் பேசுகிறான் என்று அவன் நோக்கத்தை அவன் வார்த்தைகளிலும், கண்களிலும் இருந்து பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதைப்பொறுத்தே ஒரு பெண் ஆணிடம் பழகும்போது அந்த உறவை எவ்வளவு தூரத்தில் வைக்கலாம் என்று வரைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
* அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் ஆண்களை தொட்டு பேசாதீர்கள். அதே போல் உங்களையும் தொட்டு பேச அனுமதிக்காதீர்கள். இதை பயன்படுத்தி ஆண்கள் உங்களிடம் தவறாக நடக்கவும் வழியுள்ளது.

* குப்பைத்தொட்டியில் குழந்தை


குப்பைத்தொட்டியில் குழந்தை


காதல் என்ற போதையிலே.
பாதை தவறி போனவரே.

காதலன் என நம்பி
காமுகனிடம் சிக்கியவரே.

கலவி என்ற சுகம் கண்டு
கற்ப்பிழந்து போனவரே.

கொண்டவன் கை கழுவ
கலங்கி இதயம் வெடித்தவரே.

கற்பு என்பது சொல் அல்ல
காலத்திற்கேற்றார் போல் மாற்றிக் கொள்ள

காமம் என்ற ஒரு சொல்லில்
உலகம் அது இயங்கவதில்லை.

தெரிந்தே நீங்கள் செய்யும் தவறுக்கு.
தண்டனை பச்சிளம் குழந்தைக்கு.

தொப்புள் கொடி அறுத்த உடனே
சேயுடனான பந்தத்தையும் அறுத்தீரோ.

எச்சில் இலைகளுடன் எதிர்க்காலம் புரியாமல்
கண் சிமிட்டி சிரிக்குதடி நீ தூக்கி எறிந்த உன் பிள்ளை.

உன்னை விட உயர்ந்ததடி உன் பிள்ளையை காத்த குப்பை தொட்டி..

கை விட்டு போகும் முன் அதன் கண்ணழகை பாரடி.

அள்ளி எடுத்து அரவணைக்க வேண்டாம் அநாதை இல்லத்திலாவது சேரடி.


Wednesday, July 3, 2013

* நீங்கள் எப்போதேனும் இப்படி நினைத்தது உண்டா?


நீங்கள் ..

நீங்கள் எப்போதேனும் இப்படி நினைத்தது உண்டா?

நான் இன்னும் இளமையாக இருந்திருக்கலாம்!’
நான் மட்டும் ஏன் வறுமையில் வாடுகிறேன்?’
எனக்கு மட்டும் ஏன் இப்படி ஓர் அப்பா-அம்மா?’
என்னைப் புரிந்துகொள்ள ஏன் இந்த உலகத்தில் ஒருவர்கூட இல்லை?’
‘என் எதிர்காலத்துக்கு எந்தவிதத்திலும் பயன் தராத விஷயங்களை ஏன் பள்ளியிலும் கல்லூரியிலும் நான் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்?’
என்னை ஏன் இவ்வளவு அசிங்கமாகப் படைத்திருக்கிறான் இறைவன்?’
‘நான் ஏன் நார்மலாக இல்லை?’
மூன்று கேள்விகளுக்கேனும் ‘ஆம்’ என்பது உங்கள் பதிலாக இருந்தால், சந்தேகமே வேண்டாம்… நீங்கள் நார்மலாகத்தான் இருக்கிறீர்கள்!
பதின் பருவத்தில் இப்படியான எண்ணங்கள் அலைக்கழிப்பதுதான் அந்தப் பருவத்தின் இயல் பான மனநிலை என்கிறார் ஆண்ட்ரு மேத்யூஸ். உலகின் 96 சதவிகித டீனேஜ் பருவத்தினர் தங்கள் தோற்றம், உடல் அமைப்பில் திருப்தியற்று இருக்கிறார்களாம்.
இதுபோலவேதான் நண்பர்கள், பெற்றோர்கள், காதலன்/காதலி ஆகியோருடனான உறவுகளையும் குழப்பிக்கொண்டு, எப்போதும் ஒருவித அவஸ்தை மனநிலையிலேயே இருக்கிறார்கள்.
அப்படியானவர்களுக்கு, தன் புத்தகம்மூலம் தோள் தட்டும் தோழனாக டிப்ஸ் தருகிறார் ஆண்ட்ரு. மிக எளிமையான ஆங்கிலம், குட்டிக் குட்டிப் படங்கள் மூலம் பெரிய உண்மைகளை எளிதில் புரியவைக்கிறார்.
வாழ்க்கை ஏன் கசக்கிறது?
உங்களையும் அறியாமல் நாக்கைக் கடித்துக் கொள்கிறீர்கள். வலிக்கிறது! கொதிக்கும் தேநீர் என்று தெரியாமல் ஒரு வாய் குடித்துவிடுகிறீர்கள். சுள்ளென்று சுடுகிறது. பென்சில் சீவும் போது, விரலை பிளேடு வெட்டிவிடுகிறது.
ரத்தம் வெளியேறி எரிகிறது. இவை எல்லாம் உடலை வருத்தும் காயங்கள். அந்தக் காயங்கள் ஏற்படுத்தும் வலி, ‘ஏதோ தப்பு. நீ செய்துகொண்டு இருக்கும் விஷயத்தை மேற்கொண்டு தொடராமல் இருப்பது நல்லது!’ என்று உணர்த்தும் சமிக்ஞை.
‘வலி’ என்ற ஒரு அலாரம் இல்லாவிட்டால், என்ன நடக்கும்? ரத்தம் வர வர… நாக்கைக் கடித்துக்கொண்டே இருப்பீர்கள். வாய் பொத்துப்போன பிறகும் அந்தத் தேநீரைக் குடித்துக்கொண்டே இருப்பீர்கள். ரத்தம் வழிந்த பிறகும் நிறுத்தாமல், பென்சிலை கூராக்கிக்கொண்டு இருப்பீர்கள். இதே லாஜிக்தான் மனதை வருத்தும் காயங்களுக்கும்!
உங்கள் மனதை ஏதோ ஒரு நடவடிக்கை அல்லது சம்பவம் வருத்துமானால், அதைத் தொடராதீர்கள். மேலும் மேலும் அதனால் நீங்கள் கஷ்டப்படாமல் இருக்கத்தான், அந்தச் சம்பவம் உங்கள் மனதில் ஒரு வலியை ஏற்படுத்துகிறது.
பிறகு ஏன் அதைத் தொடர வேண்டும்? உள்ளுக்குள் சோகமாக உணர்ந்தால், நீங்கள் யோசிக்கும் விதத்தையே மாற்றிக்கொள்ளுங்கள்.
மற்றவர் மீது பொறாமைகொள்ளும்போதோ, கேலி கிண்டல் செய்து மற்றவரைக் காயப்படுத்தும்போதோ, நமது சந்தோஷத்துக்காக அடுத்தவரை எதிர்பார்த்திருக்கும்போதோ, பிறருடன் நம்மை ஒப்பிட்டுக்கொள்ளும் போதோ… நமது மனது வலிக்கும். அலாரம் அடித்துவிட்டது. விழித்துக்கொள்ளுங்கள்!
படம் பார்த்து, பாடம் படிக்கலாமா?
‘ஒருவன் நாயிடம் இருந்து தப்பிக்க முற்படுகிறான். அவனுடைய சட்டையின் நுனிப்பகுதியை நாய் கடித்து இழுத்திருக்கிறது.
கோபமாக இருக்கும் அந்த நாய்க்கு வாலும் ஒரு காலும் வெள்ளை நிறம். ஒரு காது சிவப்பு நிறம். அவனுடைய சட்டையில் சிவப்பு மற்றும் வெள்ளைக் கோடுகள். ஒற்றைக் காலில் நிற்கிறான் அவன்!’
இதைப்படித்துக் கிரகித்து அந்தக் காட்சியைக் கற்பனை செய்ய உங்களுக்கு 20 நொடிகளேனும் பிடிக்கும். அதுவே, இந்தப் படத்தைப் பாருங்கள்…
சட்டென்று, பச்சக்கென்று மனதில் பதிந்துவிட்டதா? பல காலமாகச் சொல்லி வருவதுதான். வார்த்தைகளைக் காட்டிலும் ஒரு ஓவியம் அல்லது கார்ட்டூன் நம் மனதில் அழுத்தமாகப் பதிந்துவிடும்.
‘20-07-1969 அன்று அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதல் ஆளாகக்கால் பதித்தார்’ என்று மனனம் செய்து மறந்துபோவதைக் காட்டிலும், இப்படி நீங்களாக ஒரு கார்ட்டுன் வரைந்தால்… எப்படி இருக்கும்?
அந்தத் தேதி உங்களுக்கு மறக்கவே மறக்காது!
ஏமாற்றங்களை ஏமாற்றுவது எப்படி?
எவ்வளவுதான் ‘அலர்ட்’ ஆக இருந்தாலும், பல சமயங்களில் எல்லோரும் ஏமாற்றத்துக்கு உள்ளாவார்கள். நமது முறை வரும்போது பஸ் பாஸ் கவுன்ட்டரில் ‘உணவு இடைவேளை’ என்று போர்டு விழுவது, அத்தனை பேர் தப்பும் தவறுமாகச் செய்து இருக்கும்போது நமது ரெக்கார்ட் நோட் குளறுபடிகளை மட்டும் புரொஃபஸர் கண்டுபிடித்துத் திட்டுவது, மனதுக்குப் பிடித்தவளிடம் காதலைச் சொன்னதும், ‘என்னை உனக்குப் பிடிக்காதுன்னு நினைச்சேன்.
அதான் போன மாசம் அருண் புரபோஸ் பண்ணப்போ, ‘ஓ.கே’ சொல்லிட்டேன்!’ என்று அவள் கண்ணைக் கசக்குவது. சிறிதும் பெரிதுமாகத் தினமும் நம்மை ஏமாற்றங்கள் கடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்போதெல்லாம் நீங்கள் எப்படி ரியாக்ட் செய்வீர்கள்?
1. ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி எப்போதும் கெட்டதாகவே நடக்கிறது?’ என்று உள்ளுக்குள் புழுங்குவேன்! – இப்படி நினைத்து சுய பச்சாதாபத்தை வளர்த்துக்கொள்வதன் மூலம், அந்தப் பிரச்னையைச் சரிசெய்வதற்கான எந்த ஓர் உருப்படியான செயலிலும் உங்கள் மனம் கவனம் செலுத்தாது!
2. ‘அது எனது தப்பு அல்ல!’ என்று பழியை அடுத்தவர் மீது சுமத்துவதும் ஒரு விதத் தப்பிக்கும் மனோநிலைதான். அது உங்கள் தப்பாக இல்லாவிட்டாலும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது நீங்கள்தானே!
3. ‘இதில் இருந்து நான் என்ன பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்?’ என்று உங்களுக்குள் நீங்கள் கேட்டுக்கொண்டால்… சபாஷ்! இதுதான் மேற்கொண்டு அதுபோன்ற ஒரு தவறு நிகழாமல் தடுக்கும் மனோநிலை.
நமது ஒவ்வொரு ஏமாற்றமும், கல் மேல் விழும் உளி செதுக்கல் என்று நினைத்துக்கொண்டால், நம்மை நாமே செதுக்கி எடுக்கலாம்.
தண்டிக்கப்படுவதற்காக, நாம் இந்த உலகத்தில் அவதரிக்கவில்லை என்பதை எப்போதும் நினைவில்கொள்ளுங்களதேங்க்ஸ் :


* வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்


வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் 

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம். அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.

01. போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்? அதைப் பேசு.

02. நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு.

03. உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.

04. பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல

05. பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல

06. சொல்றவங்க நூறு சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?

07. அவன் அப்படித்தான் இருப்பான். அப்படித்தான் பேசுவான். அதையெல்லாம் கண்டுக்கலாமா? ஒதுங்கு. அப்பதான் உனக்கு நிம்மதி.

08. இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது.

09. கஷ்டம் தான் … ஆன முடியும்.

10. நஷ்டம் தான் … ஆன மீண்டு வந்திடலாம்.

11. இதில விட்டா அதில எடுத்திட மாட்டனா?

12. விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?

13. விழுந்தது விழுந்தாச்சு. எழுந்திருக்கிற வழியைப் பாரு.

14. ஒக்காந்து கிட்டே இருந்தா என்ன அர்த்தம்? எழுந்திரு. ஆக வேண்டியதப் பார்.

15. இவன் இல்லேன்னா வேற ஆளே இல்லியா?

16. இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?

17. இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.

18. இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே.

19. முடியுமா…ன்னு நினைக்காதே. முடியணும்…னு நினை.

20. கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இத விட நல்லதாகவே கிடைக்கும்.

21. அவன் கதை நமக்கெதுக்கு. நம்ம கதையைப் பாரு.

22. விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதுக்கு? வேலை தலைக்கு மேலே இருக்கு.

23. திருப்பித் திருப்பி அதயே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.

24. சும்மா யோசிச்சுக் கிட்டே இருக்காதே.குழப்பம் தான் மிஞ்சும். சட்டுனு வேலையை ஆரம்பி.

25. ஆகா, இவனும் அயோக்யன் தானா?சரி,சரி.இனிமே யார் கிட்டயும் நாலு மடங்கு ஜாக்ரதையாத்தான் இருக்கணும்.

26. உலகத்துல யாரு அடிபடாதவன்? யாரு ஏமாறாதவன்? அடிபட்டாலும் ஏமாந்தாலும், அவனவன் தலை தூக்காமலா இருக்கான்?

27. ஊர்ல ஆயிரம் பிரச்சனை. என் பிரச்சனைய நான் தீர்த்தா போதாதா?

28. கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.

29. எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?

30. அவனை ஜெயிச்சாதான் வெற்றியா? நான் தான் தினம் வளர்றேன, அதுவே வெற்றி இல்லையா?

31. அடடே, இதுவரை நல்லா தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிருந்தாலே போதும்.

32. நாலு காசு பாக்குற நேரம். கண்டதப் பேசிக் காலத்த கழிக்கலாமா?

ஆம், நண்பர்களே, வீழ்வது கேவலமல்ல, வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம். ஒன்பது முறை விழுந்தவனுக்குஇன்னொரு பெயர் உண்டு-. எட்டு முறை எழுந்தவன். எழுந்திருங்கள். உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள். எவ்வளவு உயரம் தொட முடியும் என்பதைக் காட்டுங்கள்.

* ஓடிப் போவதற்கு முன்பு யோசிக்க வேண்டும்


ஓடிப் போவதற்கு முன்பு யோசிக்க வேண்டும்


திருமண ஏற்பாடு சாதாரண விஷயமல்ல. மாப்பிள்ளை பார்ப்பதில் தொடங்கி, நகை சேர்ப்பது, மண்டபம் புக்கிங் செய்வது, சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்வது, பத்திரிகை அடிப்பது, உறவினர்களை அழைப்பது என ஏகப்பட்ட வேலைகள். அதோடு திருமணம் நல்லபடியாக முடிய வேண்டுமே என்ற பதைபதைப்பும் இருக்கும். இப்படி எல்லா ஏற்பாடுகளும் முடிந்து, திருமணம் நடக்கப் போகும்போது, திடீரென மணப்பெண் ஓடிப் போனால் எப்படி இருக்கும்? அதனால் எத்தனை பேருக்கு வேதனை? அப்படித்தான் நாளை திருமணம் நடக்க உள்ள நிலையில், மணப்பெண் காதலனுடன் ஓடி விட்டார். விழுப்புரம் மாவட்டம் சித்தாள் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபாரதி.

கல்லூரியில் 2ம் ஆண்டு மாணவி. பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. ஜெயபாரதியின் மாமன் மகன். வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இருவருக்கும் திருமணம் செய்து வைக்க 2 வாரம் முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. நாளை திருமணம். தடபுடலாக ஏற்பாடுகள் நடந்து வந்தன. ஜெயபாரதியின் அப்பாவும், அம்மாவும் உறவினர்களுக்கு பத்திரிகை வைக்க புறப்பட்டு சென்றனர். வீட்டில் ஜெயபாரதி மட்டும் இருந்தார். மதியம் வீடு திரும்பிய போது, மகளை காணாமல் திடுக்கிட்டனர். உறவினர்கள் வீடுகள் உள்பட அக்கம்பக்கத்தில் தேடினர். பீரோவில் இருந்த ரூ.3 லட்சத்தையும் காணவில்லை. தோழிகளிடம் விசாரித்த போது அதே ஊரை சேர்ந்த பிஎஸ்சி 2ம் ஆண்டு மாணவர் காமராஜ் என்பவரை ஜெயபாரதி காதலித்து வந்தது தெரிய வந்தது.

கல்லூரிக்கு பஸ்சில் சென்றபோது இருவரும் பேசி வந்துள்ளனர். வீட்டில் திடீரென திருமண ஏற்பாடுகள் நடந்ததால் அதிர்ச்சி அடைந்த ஜெயபாரதி, காதலனுடன் ஓடியது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து, கடத்தப்பட்ட மாணவி, கடத்திச் சென்ற கல்லூரி மாணவர் காமராஜ் உள்பட 5 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் இரு வீட்டாரும் சோகத்தில் உள்ளனர். திருமண பேச்சை எடுக்கும்போதே, பெண்ணின் சம்மதத்தை கேட்க வேண்டும். வேறு யாரையாவது காதலித்தால் பெண்களும் அதை பெற்றோரிடம் கூறி விட வேண்டும். சரி, சரி என தலையை ஆட்டி விட்டு, கடைசி நேரத்தில் பெற்றோரை தவிக்க விட்டு ஓடிப் போகக் கூடாது. இதனால் மணமகன் உள்பட எத்தனை பேருக்கு அவமானம்? ஓடிப்போகும் காதலர்கள் இதை ஒரு நிமிடம் எண்ணிப் பார்க்க வேண்டும்.


Monday, July 1, 2013

* ஆண்கள் பெண்களிடம் மறைக்கக் கூடிய சில விஷயங்கள்!!!


ஆண்கள் பெண்களிடம் மறைக்கக் கூடிய சில விஷயங்கள்!!!


இந்த உலகத்தில் அனைவருக்கும் இரகசியம் என்பது கண்டிப்பாக இருக்கும். அதிலும் ஒரு ஆண்களை முழுவதுமாக அறிந்தவர் யாரும் இருக்க முடியாது. ஏனெனில் நிச்சயம் அவர்களைப் பற்றிய சில விஷயங்கள் மறைக்கப்பட்டிருக்கும். அது மனைவியாக இருந்தாலும் சரி, அவர்களிடம் கூட தன்னை பற்றிய அனைத்து விஷயத்தையும் கூற மாட்டார்கள். ஏன் அத்தகையவர் நண்பனாக இருக்கலாம் அல்லது பல வருடம் பழக்கமான நபராக கூட இருக்கலாம். ஆனால் அதற்காக எல்லாம் வாழ்க்கையில் நடக்கும் சின்ன சின்ன நிகழ்வுகளை எல்லாம் ஆண்கள் சொல்லுவார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது. முக்கியமாக அவர்களின் கடந்த காலத்தை,பொக்கிஷமாக பாதுகாக்க நினைக்கும் சில நினைவுகளை தங்களுக்குள் இருக்கவே விரும்புவார்கள். அதனை யாரிடமும் கூற விரும்ப மாட்டார்கள். ஏனெனில் அவை அனைத்தையும் கூறினால், அவர்களது வாழ்க்கைக்கே உலை வைத்துக் கொள்வது போல் ஆகிவிடும். சரி, இப்போது ஆண்கள் அப்படி மறைப்பதற்கு என்ன இருக்கிறது என்று சிலவற்றை பார்க்கலாமா? 

ஸ்ட்ரிப் கிளப்ஸ் (strip clubs)


பல ஆண்களுக்கு பெண்களின் கவர்ச்சி நடனங்களை, கிளப்களில் பார்ப்பது அலாதி விருப்பமாக இருக்கும். உங்களுக்கு கணவராக வரப் போகின்றவர், நண்பர்களுடன் சேர்ந்து பெண்களின் ஆடை அவிழ்ப்பு நடனத்தை கண்டு கழிக்க சென்றிருக்கலாம். ஆனால் அதனை பற்றிய சிறு துப்பை கூட அளிக்கமாட்டார். ஏனென்றால், எந்த ஒரு பெண்ணும் தன் கணவர் திருமணத்துக்கு முன் இந்த மாதிரி செயல்களில் ஈடுப்பட்டார் என்பதை ஒரு போதும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். எனவே இத்தகைய விஷயத்தை சொல்லிக் கொள்ளமாட்டார்கள். 

உணர்ச்சிவசப்பட்டவராக இருக்கலாம் 

தான் செய்த தவறு தன் மனைவிக்கு தெரிந்த பின் அவர்களின் கண்ணீர் பல பேருக்கு நடுக்கத்தை உண்டாக்கும். அதனால் ஆண்கள் சில விஷயங்களை வெளிப்படையாக பேச மறுக்கின்றனர். எனவே ஆண்கள் தங்களை ஒரு பலசாலியாகவும், ஆற்றல் மிக்கவராகவும் காட்டவே விரும்புகிறார்கள். மேலும் கண்ணீர் விடுவதும், உணர்ச்சியை வெளிப்படுத்துவதும், பெண்கள் செய்யக்கூடியவை என்றும் இன்னும் சில ஆண்கள் எண்ணுகிறார்கள். 

ஆபாசப் படங்கள் 

ஆபாசப் படங்களை ஏற்கனவே பார்த்ததாக யாரிடமும் காட்டிக் கொள்ள மாட்டார்கள். பொதுவாக ஆண்களுக்கு ஆபாச விஷயங்களிலும், பாலின்பத்திலும் அதிக ஈடுபாடு இருந்த போதிலும், அதனை வெளிப்படையாக தங்கள் மனைவியிடம் கூற மறுப்பார்கள். 

அம்மா பிள்ளை 

பல ஆண்கள் தங்களின் தாயால் செல்லம் கொடுக்கப்பட்டு கெட்டு போய் உள்ளனர். அதனால் திருமணம் ஆன பின்பு அல்லது ஒரு பெண்ணுடன் காதல் வயப்பட்டிருக்கும் போது, அந்த பெண்ணை தன் தாயுடன் ஒப்பிடுவதை ஒரு பழக்கமாக வைத்திருப்பார்கள். இது அவர்கள் இருவருக்குள்ளும் மன ஸ்தாபத்தை ஏற்படச் செய்யும். எனவே ஆண்களுக்கு தான் தாய்க்கு செல்லப் பிள்ளையாக இருப்பது தெரிந்திருந்தாலும், அது துணைக்கு தெரியக் கூடாது என்று நினைப்பர். 

விசித்திரமான கனவுகள் 

தன் கனவுகளை மனைவியோடு பகிர்ந்து கொள்வதில் தவறேதும் இல்லை. ஆனால் சில வகை கனவுகளும், கற்பனைகளும் கேட்பதற்கு, துணையை மட்டமாக எண்ணத் தூண்டலாம். அதனால் சில கனவுகளை ஆண்கள் சொல்லத் தயங்குவார்கள். ஏனெனில் அதனை கேட்டால் அவரை விட்டு போகக் கூட பெண்கள் தயங்க மாட்டீர்கள்.

* நிஜத்தில் முத்தமிடும்போது விபச்சாரி அதுவே திரையில் செய்யும்போது நடிகை! இதுவா சமுதாயம்


நிஜத்தில் முத்தமிடும்போது விபச்சாரி அதுவே திரையில் செய்யும்போது நடிகை! இதுவா சமுதாயம்



நாம் அறிந்து ஒரு பெண் இன்று பக்கத்துவீட்டுக்காரனுடன் கொஞ்சுகிறாள். நாளை அடுத்த வீட்டுக்காரனுடன் கொஞ்சுகிறாள், மறுநாள் எதிர் வீட்டுக்காரனுடன் கொஞ்சுகிறாள் என்று வைத்துக்கொள்வோம். இவளை சமூகம் 
என்னவென்று அழைக்கும்? விபச்சாரி என்றுதானே. ஆனால்இதே காரியத்தை ஒரு பெண் திரையில் செய்தால் அப்பெண்ணிற்குப் பெயர் நடிகை. அது ஆணாக இருந்தால் அவன் நடிகன். அவர்கள் செய்வது கலைசேவை!

ஒரே காரியத்தை நிஜத்தில் செய்யும்போது பழிக்கும் சமுதாயம்; அந்த நிஜத்தையே காமெராவில் சுருட்டி நிழலாகக் காட்டினால் அதற்கு கைதட்டுகிறது. இவர்கள் போடும் எச்சங்களை உண்டு பிழைக்கும் அந்தக் கூத்தாடிகள் நாளடைவில் இந்த மக்களின் அன்புக்குரியவர்களாக... இஷ்ட தெய்வங்களாக.... மாறி விடுகிறார்கள்.
எந்த விபச்சாரத்தை தனது சகோதரியோ, மகளோ, மனைவியோ செய்யும்போது இவர்களுக்கு தலைவெடித்து விடுமோ அதே சமூகம் இந்த விபச்சாரிகளை தலையில் ஏற்றி வைத்துக் கொண்டு போற்றிப் புகழ்கிறது. எந்த அளவுக்கென்றால் இவர்களுக்கென சிலைகள் வடிக்கப் படுகின்றன, கோவில்கள் கட்டப் படுகின்றன, வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.


சற்றும் பொறுப்புணர்வே இல்லாத சுரணையற்ற இந்த சமூகப் போக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் ஓரளவுக்குக் காணப்பட்டாலும் மிகமிகத் தீவிரமாக காணப்படுவது நம் தமிழகத்தில்தான் என்பதற்கு சான்றிதழ் சமர்ப்பிக்கத் தேவையில்லை. இதை அறியாமையின் சிகரம் என்பதா? சமூக சீரழிவின் உச்சகட்டம் என்பதா?சாந்தை இணையம்

திரை மூலம் ஆபாசத்தையும் காமவெறியையும் கொலைவெறியையும் விதைத்து சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் வழிகெடுக்கும் இந்த திரைக் கூத்தாடிகளுக்கு பெரிய செயற்கரிய சாதனை செய்தது போன்று, மத்திய மாநில அரசுகளின் பாராட்டுக்கள்- விழாக்கள் -கேடயங்கள்- விருதுகள் .பல தரப்படுகின்றன. இவை அனைத்தும் நாட்டுக்காக உழைக்கும் மக்களின் வரிப்பணங்களில் இருந்து வழங்கப் படுபவை.

இது போக, வீர தீரர்களாக சாகச சூரர்களாக தியாகிகளாக பத்தினிப் பெண்களாக கற்புக்கரசிகளாக 'நடிக்கும்' இந்தக் கூத்தாடிகள் குவிக்கும் செல்வங்களுக்கு கணக்கும் இல்லை வழக்கும் இல்லை இவர்களால் ஏமாற்றப்படும் சமூகம் இவர்களுக்குக் கொடுக்கும் அந்தஸ்த்தோ அளவிடமுடியாதது. இந்த அநியாயத்திற்குத் தாரைவார்க்கும் சுயநலச் செய்தி ஊடகங்கள் சாந்தை இணையம் ஒருபுறம். இவர்களின் அந்தரங்க அசிங்கங்களை கிசுகிசுக்களாகப் பிரசுரித்து கொள்ளையடிக்கும் பிணந்தின்னி வல்லூறுகள் போன்றவர்கள் அவர்கள்!.

இந்தத் திரைக்கூத்தாடிகள்தான் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சாதனங்களுக்குத் தரக்கட்டுப்பாட்டு நிபுணர்கள்!சாந்தை இணையம் விளம்பரங்களில் இவர்கள் தலைகாட்டி சான்றிதழ் கொடுத்தால்தான் அவை விற்பனை ஆகுமாம்! இந்த இழிபிறவிகளின் நடை உடை பாவனைகள்தான் வளரும் சமூகத்தின் முன்மாதிரிகளாம்! .இவர்கள் ஆதரவு கொடுத்தால்தான் நாட்டை ஆளும் மக்களின் பிரதிநிதிகளும் தேர்ந்தெடுக்கப் படுவார்களாம்! இவர்கள்தான் மாறிமாறி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து ஒருபுறம் இலவசங்களைக் காட்டி மறுபுறம் நாட்டுவளங்களை தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வார்களாம்! என்ன ஒரு அவமானம்!