Monday, June 24, 2013

* பெண்கள் பற்றி ஏழு சிக்கலான உண்மைகளை:

பெண்கள் பற்றி ஏழு சிக்கலான உண்மைகளை:

1. அவர்கள் சேமிப்பில் அக்கறை உடையவர்கள்.

2. சேமிப்பில் அக்கறை உடையவர்கள்ஆனால் விலையுயர்ந்த ஆடைகளையே வாங்குவார்கள்.

3. விலையுயர்ந்த ஆடைகளை வாங்குவார்கள் ஆனால் அணிய எதுவும் இல்லை என வருத்தப்படுவார்கள்.

4. அணிய எதுவும் இல்லை என வருத்தப்படுவார்கள், ஆனால் எப்போதும் அழகாக உடை அணிவார்கள்.

5. எப்போதும் அழகாக உடை அணிவார்கள், ஆனால் திருப்தி அடையமாட்டார்கள்.

6. திருப்தி அடையமாட்டார்கள், ஆனால் ஆண்கள் அவர்களை புகழ வேண்டுமென எதிர்பார்ப்பார்கள்.

7. ஆண்கள் அவர்களை புகழ வேண்டுமென எதிர்பார்ப்பார்கள், ஆனால் ஆண்கள் அப்படி செய்தாலும் அவர்களை நம்புவதில்லை.


Thursday, June 20, 2013

* காதலர்கள், புதுமண தம்பதிகளுக்கு ஓர் எச்சரிக்கை


காதலர்கள், புதுமண தம்பதிகளுக்கு ஓர் எச்சரிக்கை
இளம் தம்பதிகள் பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவதால் வாழ்க்கை சீரழிந்து விடும் என புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் மிசௌரி பல்கலைகழகத்தில் ஸ்கூல் ஆப் ஜர்னலிசம் பயிலும் ஆய்வு மாணவர் ரஸ்ஸல் கிளேட்டனும், ஹவாய் மற்றும் செயின்ட் மேரீஸ் பல்கலைகழக மாணவர்களும் சேர்ந்து ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வு பேஸ்புக் பயன்படுத்தும் 18 முதல் 82 வயது வரை உள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்டது.

அவர்களிடம், எத்தனை நாளைக்கு ஒருமுறை பேஸ்புக்கை பயன்படுத்துவீர்கள், எவ்வளவு நேரம் பயன்படுத்துவீர்கள், பேஸ்புக்கை பயன்படுத்துவதால் தற்போதைய துணையோடு அல்லது முந்தைய துணையோடு என்னென்ன பிரச்னைகள் உருவானது என்பது குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டன.

ஆய்வு முடிவு குறித்து கிளேட்டன் கூறுகையில், பெரும்பாலானவர்கள் தங்களுக்கு பிடித்தமானவர்களோடு தொடர்பு கொள்ளவதற்குதான் பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இதில் பலர் தங்களது முன்னாள் துணையின் நட்பை தொடரவும் அதிக அளவில் பேஸ்புக்கை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

இதனால் பலரும் தங்களது துணையின் பேஸ்புக்கை கண்காணிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இது அவர்களிடையே உள்ள நம்பகத்தன்மையை குறைப்பதோடு, பழைய நட்பு குறித்த சர்ச்சைக்கும் காரணமாகிறது.

இது விவாகரத்தை நோக்கி இட்டு சென்றதாகவும் பலர் தெரிவித்தனர். குறிப்பாக காதலர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் போன்ற புதிதாக இணைந்த ஜோடிகளிடம்தான் இந்த பாதிப்பு அதிகம் இருந்தது.

இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றால், காதலர்கள் மற்றும் புதுமண தம்பதியினர் பேஸ்புக்கில் நேரத்தை செலவிடுவதை அளவோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

Wednesday, June 19, 2013

* ஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி?


ஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி?


ஒரு பெண் கர்ப்பம் ஆனதை
1. கர்ப்பத்திற்கான அறிகுறிகள் திருமணம் ஆன எல்லாத் தம்பதியரும் ஆவலோடு எதிர்பார்ப்பது ஒரு குழந்தையைத்தான். . ஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது
எப்படி? எந்த மாதிரியான அறிகுறிகள் அந்தநேரத்தில் தோன்றும்? என்பது பற்றி பார்ப்போம்.

ஆணின் உயிரணுவும், பெண்ணின் கரு முட்டையும் இணைந்து கருத்தரித்தல் நிகழ்கிறது. கருத்தரித்தல் நடந்த 4 நாட்களுக்குப் பிறகே கருவானது கருப்பை நோக்கி நகர்ந்து வருகிறது.

கருவானது கருப்பைக்குள் பதியமாகாமல் மிதந்து கொண்டிருக்கும் இந்த நிலையிலேயே சில ரசாயன மாற்றங்களை உண்டாக்குகிறது.

இவை கருமுட்டையைப் பதியம் செய்வதற்கு கருப்பையைத் தயார்படுத்தும் சில அறிகுறிகள் ஆகும். கருத்தரித்த ஒரு வாரம் அல்லது அதற்குப் பிறகுதான் கருப்பையுடன் கரு பதியமாகும்.

இத்தகைய சிக்கலான வேளையில் சில அறிகுறிகள் தோன்றும். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை :

* மாத விலக்கு தள்ளிப்போகுதல்

* குமட்டல்

* இரவிலும்இ பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல்

* புண்ணோஇ அழற்சியோ இல்லாமல் வெள்ளைப்படுதல்

* வாசனையைக் கண்டால் நெடி

* மார்பகம் பெரிதாவது. அதில் தொட்டால் வலி ஏற்படும். மற்றும் மார்பக நரம்புகள் புடைத்துத் தெரியும். மார்பகக் காம்புகள் கருப்பாக மாறும்

* மலச்சிக்கல் இருப்பது போன்ற உணர்வு

* புளிஇ ஐஸ்இ மாங்காய் போன்றவற்றின் மீது திடீரென ஏற்படும் ஆசை

- குழந்தையை எதிர்நோக்கும் ஒரு பெண்ணுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் அவர் கருத்தரித்திருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இத்தகைய அறிகுறிகள் தெரிந்தவுடன் சம்பந்தப்பட்ட பெண் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..

முதல் சில மாதங்கள் மிகவும் சிக்கலான மாதங்களாகும். இந்தக் காலத்தில் குழந்தையின் மூளை, நரம்பு மண்டலம், இதயம் போன்ற முக்கிய உறுப்புகளும், கை-கால்களும் உருவாகின்றன.

இந்தக் காலக்கட்டத்தில் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது, எக்ஸ்-ரே எடுப்பது, மது மற்றும் புகைப்பழக்கம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கருக் குழந்தை பாதிக்கப்படும்.

மேலும், கர்ப்பம் ஆனதாக உணர்ந்து கொள்ளும் அறிகுறிகள், சிலநேரங்களில் வேறு சில காரணங்களுக்காகவும் ஏற்படலாம். அதனால் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

கர்ப்பத்தை சில அறிகுறிகளை வைத்தே உறுதி செய்து கொள்ளலாம். அவை பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்…

1. மாதவிலக்கு நிற்பது

கர்ப்பம் தரித்திருப்பதற்கான முதல் அடையாளம் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மாதவிலக்கு நிற்பதுதான். என்றாலும், சில பெண்களுக்கு கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் வரைகூட மாதவிலக்கு ஏற்படுவது உண்டு. சில வேளைகளில் கருத்தரிக்காமலேயே மாதவிலக்கு நின்றிருக்கும்.

இதற்கு உடல் இயக்கங்களும், நோய்களும் முக்கியக் காரணமாக இருக்கும். குறிப்பாக, புதிய இடங்களில் குடியேறுதல், புதிய சூழல்களில் பணியாற்றுதல், டீன் ஏஜ் பருவ வயதின் இறுதியில் இருத்தல், அதிக கவலை, டென்ஷன் போன்ற மனநிலைகளில் இருத்தல், குறிப்பிட்ட காலத்தில் ஹார்மோன்கள் கரு முட்டைகளை வெளியிடாத நிலை ஆகிய காரணங்களாலும் மாதவிலக்கு நின்றிருக்கும்.

நோய் என எடுத்துக்கொண்டால், நாட்பட்ட நோய்கள், ரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடுகள், உடல்பருமன், அனோரெக்சியா நெர்வோசா என்ற நரம்புத் தளர்ச்சி நோய் போன்றவற்றால் மாதவிலக்குதள்ளிப்போகலாம். ஆகவே, மாதவிலக்கு நிற்பதை மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொண்டு கருத்தரிப்பை உறுதி செய்ய இயலாது.

2. களைப்பு

பல பெண்களுக்கு காலை நேரத்தில் தூக்கக் கலக்கம், இயல்புக்கு மாறான உடல்சோர்வு, மாலை வேளையில் தலை பாரமாக இருப்பதுபோன்ற உணர்வு போன்றவை உண்டாகும். சில வேளைகளில் தாமாகவே இந்த அறிகுறிகள் மறைந்துவிடும். சிலருக்கு இத்தகைய சோர்வு கருத்தரித்த 12-வது வார வாக்கிலும், சிலருக்கு மிக விரைவாகவும் தெரியும்.

3. மசக்கை

இதை ஆங்கிலத்தில் `மார்னிங் சிக்னெஸ்’ என்பார்கள். முதல் முறையாகத் கருத்தரிக்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை நிச்சயம் வரும். அடுத்தடுத்த குழந்தை பெறும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை வரும் வாய்ப்பு குறைவு. பொதுவாக கருத்தரித்த இரண்டாம் மாதத் துவக்கத்தில் இந்த அறிகுறியை உணரலாம். மாதவிலக்கு நிற்பதோடு, மேற்கண்ட அறிகுறிகளும் இருந்தால், தாங்கள் கர்ப்பம் தரித்திருப்பதை பெரும்பாலும் உறுதி செய்துகொள்ளலாம்.

சில கர்ப்பிணிகளுக்கு உறங்கி எழுந்தவுடனோ, காலை உணவுக்குப் பிறகோ குமட்டல், வாந்தி போன்றவை இருக்கும். எதைச் சாப்பிட்டாலும் நெஞ்சின் மீதே இருப்பதாகத் தெரியும். சாப்பிட நினைத்தாலே குமட்டும்; வாந்தியும் வந்துவிடும். இந்தப் பிரச்சினைகள் காலை நேரத்திற்குப் பிறகு சரியாகும். மீண்டும் அடுத்த நாள் காலையில் மீண்டும் வந்து விடும். இந்த நிலை மாதவிலக்கு நின்ற அடுத்த நாளோ அல்லது இரண்டு வாரங்களுக்குப் பின்னரோ தோன்றும்.

அதுசரி… இந்த மசக்கை ஏன் வருகிறது தெரியுமா?

கருமுட்டையும், உயிரணுவும் சேர்ந்து கருவானவுடன், முட்டையை வெளியிட்ட கருவணுக்கூடு ஈஸ்டரோஜென் ஹார்மோனை அதிகமாகச் சுரக்கும். இதன் காரணமாகவே இத்தகைய குமட்டலும், வாந்தியும் தோன்றுகின்றன. இதனால் ஏற்படும் சோர்வின் காரணமாக இரைப்பையின் இயக்கம் குறைந்து உணவுப் பொருட்கள் நெஞ்சில் நிற்கின்றன. இதனால் உணவுப் பொருட்களைச் சாப்பிட்டாமல் தவிர்க்கவேண்டியிருக்கும். அப்படி இருந்தும் மசக்கை இருக்கும்போது பெண்கள் மாங்காய் தின்ன ஆசைப்படுவதும், மண்ணையும், அடுப்புக்கரியையும், சாம்பலையும் தின்பதை வழக்கமாகக் கொள்வதும் நடக்கிறது.

இதற்கு காரணம் என்ன?

இந்த காலத்தில் தனக்கு மட்டுமின்றி, தனது கருக்குழந்தைக்கு தேவையான சத்தையும் தாய் பெற வேண்டியுள்ளது. இதனால் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டு கருத்தரித்த ஆரம்ப காலத்தில் சிலருக்கு அதிகப் பசி உணர்வும், பலருக்கு பசியின்மையும் உண்டாகும்.

4. அடிக்கடி சிறுநீர் கழித்தல்

சிறுநீர்த்தாரைத் தொற்றோ, அதிகமான சிறுநீர் சேமிப்போ இல்லாதபோதிலும் கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இடுப்புக் கூட்டுப் பகுதியில் ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப்பையில் தோன்றும் அழற்சிகளே இதற்குக் காரணம். இத்தகைய அறிகுறிகள் கருக்காலத்தின் இரண்டாவது, மூன்றாவது மாதங்களில் ஆரம்பிக்கும். வளரும் கருவானது கருப்பையை அழுத்தி, கருப்பை அருகில் இருக்கும் சிறுநீர்ப்பையையும், அழுத்துவதால் இந்த நிலை உண்டாகி, மாதங்கள் செல்லச் செல்ல இந்தப் பிரச்சினைகள் குறைந்து மறைந்து விடும்.

5. மார்பகப் பகுதி மாற்றங்கள்

முதல் முறையாக கர்ப்பம் தரிக்கும்போது மார்பகத்தில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின்றன. மார்பகத்தில் உள்ள ரத்த நாளங்களும், மொத்த சுரப்பிகளும் பெரிதாகின்றன. மார்பகக் காம்புகள் நீண்டு, குமிழ்களுடன் பருத்துக் காணப்படும். தொட்டால் வலிக்கும். மார்பகக் காம்புகளில் இருந்து சீம்பால் போல பழுப்பு நிறத்தில் திரவம் சுரக்கும்.

கர்ப்பக் காலம் தவிர, கருப்பை மற்றும் சினைப்பைகளில் கட்டிகள் ஏற்பட்டிருந்தாலும் மார்பகத்தில் இந்த மாற்றங்கள் தோன்றும். எனவே, மார்பக மாற்றங்களையும் கருத்தரிப்புக்கு அடையாளமாகக் கொள்ள சில வேளைகளில் இயலாமல் போய்விடுகிறது.

6. மனநிலை மற்றும் எடையில் மாற்றம்

சில பெண்கள் கர்ப்பம் தரித்த ஆரம்பக் காலத்தில் மிகவும் கவலை மற்றும் துக்கம் நிறைந்தவர்களாகவோ, எதையோ இழந்தவர்களைப் போலவோ காணப்படுகிறார்கள். சிலருக்கு இதனால் தாங்க முடியாத தலைவலி, குறிப்பாக ஒற்றைத் தலைவலி உண்டாகும். கர்ப்பிணிகளுக்கு இந்தக் காலத்தில் உடல் எடை அதிகரிக்கும். இல்லாவிட்டால் குறையக்கூடும்.

7. வயிறு பெரிதாகுதல்

கருக்குழந்தை உருண்டு திரண்டு வளரும்போது இடுப்புக் கூட்டுக்கு மேல் வயிறு பெரிதாக ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் குழந்தையின் அங்க அசைவுகள் போன்றவை தெரிய ஆரம்பிக்கும். குறிப்பாக 18 முதல்20-வது வாரங்களில் இந்த அசைவு தெரிய ஆரம்பித்து குழந்தை பிறக்கும்வரை நீடிக்கும்.

கட்டிகள் இருந்தாலும் வயிறு பெரிதாகி, அசைவு தெரியும் நிலைகளும் உண்டு.

இந்த கர்ப்பக்கால அறிகுறிகள் சிலருக்கு நோயின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். அதனால், கரு தரித்திருப்பதை பரிசோதனைகள் மூலம் உறுதி செய்வது அவசியம்.

அறிகுறிகளை வைத்துக் கர்ப்பத்தைக் கண்டறிவதைவிட, நம்பகமான அறிவியல் முறையான பரிசோதனைகளை மேற்கொள்வதுதான் சிறந்தது.

பெண் உறுப்பில் ஏற்படும் மாற்றங்கள், கருப்பை வளர்ச்சி, அதன் மிருதுத்தன்மை ஆகியவற்றைக் கொண்டு மருத்துவரால் முதல் முன்று மாதங்களில் கருத்தரித்திருப்பதை உறுதி செய்து கொள்ள முடியும் என்றாலும், சிறுநீர் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை, அல்ட்ரா சவுண்டு பரிசோதனை போன்றவற்றின் முலமே கர்ப்பம் தரித்திருப்பதை நிச்சயமாக உறுதி செய்ய முடியும்.

அந்த பரிசோதனை முறைகள் :

1. சிறுநீர்ப் பரிசோதனை

இந்த பரிசோதனையின்போதே எளிதில் கர்ப்பத்தை உறுதி செய்துவிட முடியும். இந்த பரிசோதனைக்கு தேவையான பெர்க்னன்ஸி டிப் மருந்து கடைகளிலேயே கிடைக்கும். காலையில் விழித்து எழுந்ததும், முதல் சிறுநீரை சுத்தமான பாட்டிலில் பத்திரப்படுத்தி, அதில் ஓரிரு துளிகளை எடுத்து, இந்த டிப்பின் குறிப்பிட்ட பகுதியில் விடவேண்டும். கரு உறுதி செய்யப்பட்டதற்கான அடையாளமும், கரு பதியவில்லை என்பதற்கான அடையாளமும் அந்த டிப்பில் இருக்கும். அதை வைத்து கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

2. ஹார்மோன் பரிசோதனை

இது இரண்டாவது பரிசோதனை வகை. ஒரு பெண் கருத்தரித்திருந்தால், ஹிமன் கோரியானிக் கொனடோட்ரோபிக் ஆன்டிசீரம் எனப்படும் சோதனை முலம் அறியலாம். காலையில் எழுந்ததும் வெளிவரும் முதல் சிறுநீரைப் பிடித்து இந்த சோதனையை செய்ய வேண்டும். அதில் சிறுசிறு கட்டிகள் கலந்து வந்தால் பெண் கருத்தரிக்கவில்லை என்றும், அவ்வாறு இல்லாமல் இருந்தால் பெண் கருதரித்திருப்பதையும் அறிந்து கொள்ளலாம். இந்த பரிசோதனையின்போது சிறுநீர் கலங்கலாகவோ, ரத்தம் கலந்து வந்தாலோ பரிசோதனை முடிவில் தவறுகள் நிகழவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதைத் தவிர்ப்பதற்காக அல்ட்ரா சவுண்டு பரிசோதனை முறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

3. அல்ட்ரா சவுண்டு பரிசோதனை

மாதவிலக்கு நின்ற ஐந்தாவது வாரத்திலேயே ஒரு பெண் கருவுற்றிருக்கிறாளா இல்லையா என்பதைத் துல்லியமாக இந்த முறையில் கூறிவிடலாம். கருவுற்ற எட்டாவது வாரத்தில் குழந்தையின் இதயம் துடிப்பதையும் இக்கருவியின் முலம் அறிந்து கொள்ளலாம். குழந்தை வளர, வளர அதன் இதயத் துடிப்புகள், வளர்ச்சி போன்ற அனைத்து நிலவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலான மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்டு பரிசோதனையை மேற்கொள்கிறார்கள்.

4. கரு நெளிவுப் பரிசோதனை

கர்ப்பம் தரித்திருப்பதை அறிந்த பிறகு, நான்காவது மாத வாக்கில் கருவானது தாயின் அடிவயிற்றில் ஒரு துடிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு கரு நெளிவு அல்லது `குயிக்கனிங் டெஸ்ட்’ என்று பெயர். இதைக்கொண்டு குழந்தை எப்போதும் பிறக்கும் என்பதை மருத்துவர்கள் தெளிவாகக் கூறுவார்கள். கருவின் அசைவை பிறப்புறுப்பினுள் கையை வைத்துப் பார்த்தல், வயிற்றின் மீது கையை வைத்துப் பார்த்தால் ஆகிய முறைகளிலும் கண்டறிய இயலும்.

இதுபோன்ற வேறு பல பரிசோதனை முறைகளையும் மருத்துவர்கள் பின்பற்றுகிறார்கள்.


Monday, June 17, 2013

* காதலில் அகப்படாமல் இருப்பதே, வாழ்கையை வலியில்லாமல் வாழ சிறந்த வழியாகும்....


காதலில் அகப்படாமல் இருப்பதே, வாழ்கையை வலியில்லாமல் வாழ சிறந்த வழியாகும்....

 காதலுக்கு கொடி பிடிக்கும் விஷயத்தில் இந்திய சினிமாவை வெல்ல வேறு எதுவுமே கிடையாது. ஏன், காதல் இல்லாத இந்திய சினிமாவே இல்லை என்று கூறும் அளவிற்கு காதலுக்கு அப்படியொரு முக்கியமான இடம். இதன் விளைவாக, கண்ட உடன் காதல், காணாமலே காதல், தொலைப்பேசியில் காதல், இன்டர்நெட்டில் காதல், பள்ளிக் காதல், கல்லூரிக் காதல் என எங்கு பார்த்தாலும் காதல் மயம். இப்போது தான் பிடித்த ஒருவரை பார்த்திருக்கிறேன்!!. இது காதலா என்பது தெரியவில்லை. காதலிக்கலாமா, வேண்டாமா ? என்ன செய்வது ? என்று குழம்பிக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்காகத் தான் இந்த கட்டுரை. கொஞ்சம் பொறுமையாக, திறந்த மனதோடு வாசித்துப் பார்த்து பிறகு முடிவெடுங்கள். 



காதல் ஒரு உன்னதமான உணர்வு. காதலுக்கு விளக்கம் கூற முடியாது, அதை உணர்வுப் பூர்வமாக தான் அறிய முடியும். மனதுக்கு புத்துணர்ச்சி அளிப்பது காதல். இது போல காதலை தலையில் தூக்கி கொண்டாடுபவர்கள் பலர். ஆனால், எங்களைப் பொறுத்த வரை காதல் ஒரு வலி. சந்தோஷமாக, உல்லாசமாக வாழ்க்கையை அனுபவிக்கும் மனிதனுக்கு வரக்கூடாத ஒரு உணர்வு, காதல். சரி, அப்படி என்ன காதல் மேல் இவ்வளவு கோபம் என்று நினைக்கிறீர்களா? கொஞ்சம் இருங்கள். காதலே வேண்டாம் பாஸ்... இதை விட நல்ல விஷயங்கள் உலகில் எவ்வளவோ இருக்கிறது என்ற தரப்பு நியாயத்தை வலுப்படுத்த, இதோ உங்களுக்காக 10 காரணங்கள். 

காதல் ஒரு வலி 

தலை வலி, கால் வலி, முதுகு வலி போன்ற வலிகள் எல்லாம் மருந்து எடுத்துக் கொண்டால் சரியாகி விடும். ஆனால் இந்தக் காதல் இருக்கே, மனதை வருடி, ஏமாற்றி, பிறகு உடைத்தே விடும். இந்த வலிக்கு மருந்தே கிடையாது. இப்படி உடைந்து போன பழைய காதலை மறப்பதற்கு, நாம் படும் அவஸ்தையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஏன் இப்படி காதலில் விழுகிறோம் என்று பார்த்தால், அதற்கு முக்கிய காரணம் நம் பலவீனம் தான். காதல் செய்ய முடிவெடுத்துவிட்டேன் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அதற்கு பதிலாக காதலில் விழுந்தேன் என்று தான் சொல்வார்கள். விழுவது என்பது சுயநினைவோடு செய்யும் செயல் அல்ல, அது ஒரு விபத்து. காதலும் அப்படி தான். இந்த விபத்தில் அகப்படாமல் இருப்பதே, வாழ்கையை வலியில்லாமல் வாழ சிறந்த வழியாகும்.

ரகசியம் 

காதலில் இரு மனங்கள் ஒன்றாக கலந்து, இரு உடல் ஓர் உயிராக மாறிவிடுகின்றனர். அப்படியிருக்கும் போது, எந்த ஒரு ரகசியத்தையும் மனதுக்குள் வைத்திருக்க முடியாது. நம்மைப் பற்றி எல்லாவற்றையும் காதலரிடம் சொல்ல வேண்டும் என்பது கட்டாயம். என்ன தான் காரணம் சொன்னாலும், காதலன்/காதலி என்பவர் ஒரு வெளி நபர். நம்மைப் பற்றி, நம் குடும்பத்தைப் பற்றி, நம் ரகசியங்களைப் பற்றி, வெளி நபர் ஒருவரிடம் சொல்வது எந்தளவுக்கு நம்பகத் தகுந்ததாக இருக்கும். நம்முடைய ரகசியங்களை வேறொரு நபருக்கு எதற்காக சொல்ல வேண்டும்? நம்முடைய பலவீனங்களை நாமே எதற்கு வெளிகாட்டிக் கொள்ள வேண்டும்? வேணவே வேணாம் பாஸ்... இப்படிப்பட்ட காதலே வேணாம்.

காசு தீர்ந்து விடும்.

கொஞ்ச நஞ்சம் இருக்கும் காசும், செல்போனுக்கு ரீசார்ஜ் செய்தே தீர்ந்து விடும். காதலரின் பிறந்த நாள் தொடங்கி, அவர் வளர்க்கும் நாய்குட்டியின் பிறந்தநாள் வரைக்கும், அனைத்துக்கும் பரிசுப் பொருட்கள், வாழ்த்து அட்டைகள் வாங்கிக் கொடுக்கணும். அப்போது தான் அவர்களை சந்தோஷப் படுத்தி பார்க்க முடியும். நாம் இருக்கும் பொருளாதார நிலைமையில் இதெல்லாம் நமக்கு தேவையா பாஸ் ? இப்படி காதலுக்காக தேவையில்லாமல் பணம் செலவழிப்பதை விட, நிம்மதியா 10 ரூபாய் கொடுத்து, ரோட்டு ஓர கடையில் பானி பூரி சாப்பிடுவது எவ்வளவோ மேல். கோவப்படாதீங்க... கொஞ்சம் பொறுமையாக கேளுங்க... காதலில் விழாதீங்க...

மூளையை நசுக்கிப் பிழியும் 

காதலரை எப்படி ஆச்சர்யப்படுத்துவது? எந்த மாதிரி பரிசுப் பொருட்கள் கொடுக்கலாம்? வார இறுதியில் எங்கு அழைத்துச் செல்லலாம்? எந்த மாதிரியெல்லாம் செய்தால் காதலர் நம் அன்பை நினைத்து மகிழ்வார்? இப்படி யோசித்து யோசித்து, நமக்கு இருக்கும் மூளையை கசக்கிப் பிழிய வைக்கும் இந்தக் காதல். காதலுக்காக இவ்வளவு சிரமப்பட்டு சிந்தனை செய்வதற்கு பதிலாக, வேறு ஏதாவது நல்ல விஷயத்துக்கு சிந்தனை செய்தால், வாழ்வில் முன்னேற வழிவகுக்கும். ஆனால், இந்தக் காதல் நம் காலை வாரி விடவே பார்க்கும்.

சுதந்திரமே போச்சு 

இத்தனை நாட்கள் பெற்றோரின் பேச்சு வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடந்திருப்போம். அது நல்லது, நம் வாழ்கையை நல்வழிப்படுத்த உதவும். ஆனால், காதலுக்குப் பிறகு, காதலரின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும். இவன் கிட்ட பேசாதே... அவள் கிட்ட பேசாதே... நீ ஏன் அவளுக்கு போன் பண்ணே ? நேற்று ரொம்ப நேரம் போன் பிசியாகவே இருந்ததே... யார் கிட்ட பேசினீங்க? இப்படி எல்லாவற்றிலும், நம் சுதந்திரம் போய்விடும். ஆசைப்பட்டு நமக்கு நாமே சூனியம் வைத்துக் கொள்வது போன்ற இந்த காதல் நமக்கு தேவையா?

சந்தர்ப்பங்கள் கதவு தட்டினாலும், திறக்க முடியாது 

ஒரு சமயத்தில் ஒருவரைத் தானே காதலிக்க முடியும். சில சமயங்களில், நமக்கு ஏற்ற துணை கொஞ்சம் கால தாமதமாக வரலாம். ஆனால், அதற்குள் அவசரப்பட்டு காதலில் விழுந்துவிடுகிறோம். அவ்வாறு, காதலரை விட சிறப்பான, அன்பான வேறு ஒருவர் நம் வாழ்வில் வர முயன்றாலும், அவருக்கு நோ சொல்லி அனுப்பி விட வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஒருவரைக் காதலிப்பதால், இப்படிப்பட்ட நல்ல சந்தர்ப்பங்களை இழக்க வேண்டி வரும்.

காசு மற்றும் நேரச் செலவும் அதிகம் 

நம்முடைய பொன்னான நேரத்தை காதல் வீணடிக்கும். நாம் ஒருவரை காதலிக்கும் போது, அவருக்கென்று நேரம் ஒதுக்க வேண்டும், பேச வேண்டும், வெளியே செல்ல வேண்டும். இதுமட்டுமல்லாமல், ஓயாமல் இரவும், பகலும் காரணமே இல்லாமல் போனில் பேசிக் கொண்டிருக்க வேண்டும். இது போன்ற நிர்பந்தங்களால் நம்முடைய நேரம் பெரும்பாலும் காதலருக்காகவே செலவு செய்கிறோம். இதெல்லாம் நமக்கு தேவையா? இப்படி நேரத்தை வீணடிப்பதற்கு, டிவி சீரியல் பார்ப்பது எவ்வளவோ மேல். சண்டை, சச்சரவு இல்லாமல் பொழுது போகும்.

அழகு 

காதலில் விழுந்தவுடன், அனைவரும் காதலரின் கண்களுக்கு அழகாக தெரிய வேண்டும் என்று நினைப்போம். இந்த கலர் சுடிதார் போடுவதா, என்ன பொட்டு வைப்பது, கம்மல் நல்லா இருக்குமா, பூ வெச்சுக்கலாமா வேணாமா, லிப்ஸ்டிக் போட்டா அவருக்குப் பிடிக்குமா பிடிக்காதா என தன்னை தன் காதலர் விரும்ப என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்ய முயற்சிப்போம். ஒரு காலத்தில், தன் வெளித்தோற்றத்தைப் பற்றியெல்லாம் அதிகமாக கவலைப்படாமல் இருந்திருப்போம். ஆனால், இப்போது கதை அப்படியே தலை கீழாக மாறிவிட்டது பாருங்கள். கண்ணாடி முன்னாடி ஒரு மணி நேரம் நிற்க வைக்கும் இந்த காதல் தேவையா மேடம்...கொஞ்சம் யோசிச்சு பாருங்க!

கனவையும் லட்சியத்தையும் நாசமாக்கும் 

காதல் வந்தவுடன் காதலே கதி என்று சுற்றி உள்ள அனைத்தையும் புறக்கணிப்பார்கள். கேட்டால் அது ஒரு உணர்வு, அது வந்தால் அப்படித் தான் இருக்கும். சரி, அது எப்படியோ இருந்து விட்டு போகட்டும். ஆனால், இந்தக் காதலினால், படிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பது, வேலை போன்ற விஷயங்களில் நாட்டம் இல்லாமல் இருப்பது என வாழ்க்கையின் கனவையும், லட்சியத்தையும் காதலுக்கு அடகு வைக்கும் நிலைமை ஏற்படுகிறது. காதலுக்கு முன்னுரிமை கொடுப்பதால், வாழ்க்கையின் லட்சியங்களை அடையவிடாமல் தடுக்கிறது. இப்படி நம் வாழ்கையையே சீரழிக்கும் காதல் நமக்கு தேவைதானா?

முட்டாளாக்கும் 

10 நிமிடம் காதலரை சந்திப்பது தொடர்பாக, 4 மணி நேரம் அதையே நினைத்துக் கொண்டிருப்பார்கள். சிறிது சிறிதாக சேமித்த பணம் அனைத்தையும் காதலருக்கு பரிசுப் பொருட்கள் வாங்க செலவு செய்வார்கள். காதல் நம்மை எப்படி முட்டாளாக்குகிறது என்று பாருங்கள். ஆனால், காதலில் இருக்கும் போது இதெல்லாம் தெரியாது. அப்படியே தெரிந்தாலும், அதை ஒப்புக் கொள்ளும் நிலையில் மனம் இருக்காது. எதைச் செய்வது முட்டாள்தனம் என்று நினைத்திருப்போமே, காதல் வந்த பின் நம்மை அறியாமலேயே அதே முட்டாளதனத்தைச் செய்வோம். என்னமோ போங்க, இவ்வளவு அவஸ்தைப்பட்டு காதல் செய்யணுமா?

இவை அனைத்தையும் விட, காதல் வந்ததும் சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை, வேறு எதுவுமே செய்ய முடியவில்லை என்று சிலர் சொல்வதைத் தான் சுத்தமாக ஜீரணிக்கவே முடியவில்லை. என்னமோங்க... நாங்கள் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டோம்... இனிமேல் நீங்கள் தான் உங்கள் கருத்துக்களைச் சொல்லணும்!

Thursday, June 13, 2013

* காட்டெருமையின் சிறுநீர் கலக்கப்பட்ட சக்தி பாணங்களும் கவரப்படும் இன்றைய சந்ததியினரும்!


காட்டெருமையின் சிறுநீர் கலக்கப்பட்ட சக்தி பாணங்களும் கவரப்படும் இன்றைய சந்ததியினரும்!

லண்டன்: மனிதர்களின் களைப்பைப் போக்கி அவர்களை உற்சாகமாக வைத்திருப்பதற்காக பண்டைய காலம் தொட்டு நீராகாரங்கள் ஒவ்வொரு நாடுகளிலும் இருந்து வருகின்றன.

தேநீர், கோப்பி, இஞ்சி மற்றும் எழுமிச்சை கலந்த சாறுகள், குளிர்பானங்கள், மோர் இவ்வாறு கூறிக்கொண்டே போகலாம்.
எனினும், இன்றைய இளைஞர் சமுதாயத்தை கட்டுப்போட்டிருக்கும் உற்சாக-சக்தி பாணங்களில் (Energy Drinks) மறைமுகமான பல அபாயங்கள் காத்திருக்கின்றன.

‘ரெட்புல்’, ‘மொன்ஸ்டர்’, ‘ரிலண்டர்ஸ்’ மற்றும் இவற்றைப் போன்று தகர பேணிகளில் அடைத்து வரும் ‘எனர்ஜி ட்ரிங்க்ஸ்’ எனக் குறிக்கப்பட்ட அத்தனை பாணங்களிலும் ‘டோரின்’ (Taurine / Ta-Urine) எனப்படும் பதார்ரத்தம் சேர்க்கப்பட்டு வருகின்றது.

டோரின்’ எனப்படுவது காட்டெருமையின் சிறுநீர் மற்றும் விந்தினைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் ஓர் இரசாயனப் பதார்த்தமாகும். 1800 களில் இப்பதார்த்தம் கண்டுபிடிக்கப்பட்டு, மேலைத்தேய குக்கிராமங்களில் வடிசாராயம் போல், பதப்படுத்தி தனது வேலைக் களைப்பைப் போக்க விவசாயிகள் இதனை அருந்தி வந்தனர்.

1990களின் பிற்பகுதிகளில் இருந்து உலகில் பிரபல்யமடைந்து வரும் ‘டோரின்’ கலக்கப்பட்ட இவ்வாறான சக்தி பாணங்கள் உலகச் சந்தைகளில் அதிக முக்கியத்துவத்தைப் பெற்றிருப்பதுடன் ஓர் சிறு கடையிலும் விரைவில் தீர்ந்துவிடக்கூடடிய ஓர் விற்பனைப் பதார்த்தமாக இத்தகைய சக்தி பாணங்கள் இன்று இருந்து வருகின்றன.

இவற்றை அருந்துவதால், குறித்த சில நிமிடங்கள் ஏதோ ஓர் உற்சாகம் போன்றதொரு மாற்றத்தைக் காணும் போதிலும், வேறு எந்த மாற்றத்தையும் உடலில் காணமுடியாமல் இருப்பது இத்தகைய பாணங்களின் பலவீனமாக இருந்து வருகின்றன. இப்படி இருந்தும் ஏன் உலகச் சந்தையில் அதிக முக்கியத்துவத்தைப் இத்தகைய பாணங்கள் பெறுகின்றன என்ற கேள்வி எழலாம்.

அவற்றுக்கு முக்கியமாக பின்வரும் காரணங்களைக் குறிப்பிடமுடியும்.

மனிதர்களின் உலவியல் ரீதியான தாக்கம்:

உலகம் வேகமாக முன்னேறி வரும் ஓர் காலத்தில் இருந்து வருகிறது. எந்த நாட்டிலும் எவ்வளவு உழைத்தாலும் போதாது என்ற மனப்பக்குவம் மக்களிடத்தில் இருந்து வருகிறது. தனக்கு தொடர்ச்சியான வேலை, நீண்ட பிரயாணம் இவற்றின் காரணமாக ஏற்படும் அசதி, சோர்வின் காரணமாக மக்கள் தனது இழந்த சக்தியை மீள்பெறும் நோக்கில் இத்தகைய பாணங்களை அருந்தி வருகின்றனர்.

மனிதனின் தாவும் மனநிலை:

இதுவரை தேநீர், கோப்பி, குளிர் பாணம் என்று அருந்திவந்த மனிதன், தனது பயன்பாட்டை மாற்றிக்கொள்ளும் வேறு பொருளை நோக்கித் தாவுவது மனித இயற்கை. எனவே இவ்வாறான புதியவகையான சக்தி பாணங்களை தாவும் மனப்பான்மையில் மனிதன் அருந்த அவாக் கொள்கின்றான்.

பாலியல் ரீதியான கவர்ச்சி விளம்பரம்:

இளம் சமுதாயத்தினரை கவர்ந்துகொள்ள வியாபார நிறுவனங்கள் போட்டி போட்டு விளம்பரங்களை மேற்கொண்டு வருகின்றன. தாம்பத்தியத்தில் அதிக நேரம் உற்சாகமாக ஈடுபடுவதற்கும், சோர்வில்லாமல் தங்களது விடயங்களை மேற்கொள்வதற்கும் இத்தகைய பாணங்கள் உறுதுணையாக இருப்பதாக இளைஞர் சமுதாய மத்தியில் கவர்ச்சி விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.

இதற்காக, காட்டெருமை, பாயும் குதிரை என்பவற்றின் படங்களை அச்சிட்டு, இலகுவாக மக்கள் மனங்களை வென்றெடுக்கின்றனர். இவை போதாதென்று, தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாதவர்கள் கூட அதிக விலை கொடுத்து இத்தகைய பாணங்களை வாங்கிச் செல்வதையும் காணமுடிகிறது.

விளம்பரத்தால் மனிதர்களை ஏமாற்றி அதிக இலாபம் சம்பாதிக்கும் இத்தகைய வியாபார நிறுவனங்கள், கோடிக் கணக்கில் சம்பாதித்து, தங்களது புத்தியைத் தடவிக்கொள்கின்றனர்.

ஓர் கோப்பி அல்லது தேநீரில் கிடைக்கும் சந்தோசமும் உற்சாகமும் கூட இத்தகைய பாணங்களில் கிடைப்பதில்லை என்பது மறைந்திருக்கும் ஓர் உண்மை என்பது பலருக்கு தெரிவதில்லை!

தொடர்ச்சியாக இவ்வாறான சக்தி பாணங்களை அருந்திவருவோருக்கு, இரத்தக் கொதிப்பு நோய்கள், தூக்கமில்லாமல் அவதிப்படுதல், குடற்புண்கள் உட்பட தோல் வியாதிகளும் ஏற்படும் அபாயம் இருப்பதாக இங்கிலாந்து-ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக சுகாதார ஆராய்ச்சுப்பிரிவு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, காட்டெருமையின் விந்து மற்றும் சிறுநீர் கலக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ‘டோரின்’ எனப்படும் இத்தகைய இரசாயனப் பாணங்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

Sunday, June 9, 2013

* பெண்களுக்கு மட்டும் தான் பண்பாடு' கலாச்சாரம்


பெண்களுக்கு மட்டும் தான் பண்பாடு' கலாச்சாரம்


எப்போதும் கலாச்சாரம் பண்பாடு என்று வரும் போது நம் நாட்டுப் பெண்களும், அவர்களது பொட்டும், தாலியும், உடைகளும்தான் அலசப்படுகின்றன. ஏன் எமது நாட்டு ஆண்களுக்கென்று கலாச்சாரம் பண்பாடு எதுவுமே இல்லையா? 



ஆனால் பட்டிமன்றங்களும், பெண்களின் பொட்டும், தாலியும், உடையும்தான் விவாதத்துக்கான கரு என்று சொல்லிக் கதைத்துக் கொண்டு இருக்கின்றன. அதையும் தாண்டிப் போவதானால் பெண்களின் மறுமணம் பற்றிப் பேசுகின்றன. 

ஆனால் ஆண்களின் மறுமணம் பற்றிப் பேசுவதில்லை. ஆண் மறுமணம் செய்து கொள்வது அதிசயமான விடயமே இல்லையாம். மனைவி இறந்த வீட்டுக்குள்ளேயே அவனுக்கு மறுமணம் பேசி, அவனது மனைவியின் தங்கையையோ அல்லது உறவுப் பெண்ணையோ நிச்சயித்து விடுவார்கள். ஏனென்றால் அவன் ஒரு ஆணாம்.

அவனுக்குத் துணை தேவையாம். ஆனால் பெண்ணுக்கு மட்டும் கணவன் இறந்தவுடன் பொட்டை அழித்து, தாலியைக் கழற்றி, வெள்ளைச் சேலை உடுத்த வைத்து, "இனி உனக்கு ஆசாபாசம் எதுவுமே வரக்கூடாது" என்று சொல்லி, மூலையில் தள்ளி விடுகிறார்கள்.

ஏனென்றால் அவள் ஒரு பெண்ணாம். அவளுக்குத் துணையே தேவையில்லையாம். ஆசையே வரக் கூடாதாம். பெண் ஒன்று பிறந்து விட்டாலே பொன் வேண்டும், பொருள் வேண்டும், அவளை நல்லவன் கையில் கொடுத்து விடவேண்டும். என்று சிந்திக்கத் தொடங்கி விடுவார்கள் பெற்றோர்கள்.

தமது ஆசைகளைக் குறைத்து, தேவைகளைத் தவிர்த்து அந்தப் பெண்பிள்ளைக்காகச் சேமிக்கத் தொடங்கி விடுவார்கள். ஒரே ஒரு பெண் குழந்தையைப் பெற்றவர்களுக்கே இந்தக் கதி என்றால், நான்கைந்து பெண்களைப் பெற்றவர்களின் நிலையைச் சொல்லவே தேவையில்லை.

முதலில் எமது கலாச்சாரத்தில், பண்பாட்டில் புகுத்தப்பட்ட அடாவடித்தனங்கள் களையப்பட்டு, தேவையான நல்ல புதிய விடயங்கள் புகுத்தப்பட வேண்டும். கொட்டும் பனியில் சேலை அணிவதுதான் எமது பண்பாடு என்று சொல்லிச் சேலையுடன் செல்ல முடியுமா?

அல்லது ஆண்களால் வேட்டியுடன் செல்ல முடியுமா? சில விஷயங்கள் காலத்துக்கேற்ப நேரத்துக்கேற்ப இடத்துக்கேற்ப மாறத்தான் வேண்டும். கலாச்சாரம் என்ற முறையில் கட்டிக் காக்க நம்மிடம் எத்தனையோ நல்ல விஷயங்கள் உள்ளன. அவைகளைக் கட்டிக் காப்போம்.

* குழந்தைச்செல்வம் என்பது வரம் தான்... என்பதற்கான காரணங்கள்!!!


குழந்தைச்செல்வம் என்பது வரம் தான்... என்பதற்கான காரணங்கள்!!!


தற்போது குழந்தைகள் வேண்டாம் என்று கூறும் பெற்றோர்களே அதிகம் உள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு குழந்தை செல்வத்தின் மகிமையைப் பற்றி பல பெற்றோர்கள் உணராமல் இருப்பதே காரணம். 



வேலைக்காகவும், பிஸியான சமுதாயத்திற்காகவும், இப்படி பலவித காரணங்களுக்காகவும் குழந்தைகள் வேண்டாம் என்ற முடிவை பெற்றோர்கள் எடுத்து வருகின்றனர். குழந்தைகள் பெற்றுக் கொள்வது அவர்களின் வாழ்க்கை தரத்தை குறைக்கின்றது என்று நம்புகின்றனர். ஆனால் உண்மையில் குழந்தைகள் வாழ்க்கை நிலையை உயர்த்தக் கூடியவர்கள். அதற்கான பல காரணங்களை நம்மால் கொடுக்க முடியும். அப்படிபட்ட முக்கியமானதாகவும், கவனிக்கக்கூடிய சில காரணங்களையும் பார்போமா!!!

பொறுப்புணர்ச்சி

குழந்தைக்கு தாயாகும் முன் நாம் எவ்வாறு இருக்கின்றோம் என்பது முக்கியமில்லை. ஆனால் தாயான பின் பொறுப்புகள் மிக அதிகம். பொறுப்பான அம்மாவாக இருக்கும் பட்சத்தில் அக்கறையுடன் நடந்து கொள்வதை விட, வேறு எந்த வேலையும் முக்கியமில்லை. குழந்தையை கையில் ஏந்தும் தருணத்திலிருந்து பேரப்பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் வரை பொறுப்புகள் குறைவதில்லை. இந்த அக்கறை என்னும் பண்பு சிறந்த தாயாக உருவெடுக்க செய்கின்றது.

மகிழ்தல்

குழந்தை தூங்குவதை கண்டு மகிழ்வதென்பது, இது நாள் வரை பார்த்த விஷயங்களிலேயே சிறந்தது என்று கூறுவர். மேலும் அது நம்மை பரவச படுத்தும் காட்சி என்றும் சொல்வார்கள். அத்தகைய குழந்தையை தொடும் பொழுதும், நெஞ்சோடு அணைத்து கொள்ளும் போது ஒருவித அதிர்வை உணர நேரிடும். அதுவே தாங்க முடியாத மகிழ்ச்சி.

குழந்தைப்பருவம்

குழந்தை வளர வளர நாமும் குழந்தையாய் ஆகின்றோம். முட்டாள்தனமாக நடந்து கொள்ளும் விஷயம் என்று எதை நினைக்கின்றீர்களோ, அதை குழந்தையுடன் மகிழ்ச்சியாக செய்வோம். குறிப்பாக தலையணை சண்டை, சிறு பிள்ளை விளையாட்டு போன்றவை.

புதிய பந்தம்

குழந்தைக்கும், தாய்க்குமான உறவை போல வேறு எந்த உறவையும் காண முடியாது. இதில் எல்லா வகையான உணர்ச்சிகளை உணர முடியும். குழந்தை வேண்டாம் என்று நினைத்தால், இவை அனைத்தையும் இழக்க நேரிடும்.

வாழ்க்கையின் புதிய கோணம்

குழந்தையின் சூழ்நிலையை அனுகும் திறனை கொண்டு, இக்கட்டான சூழ்நிலையை கையாளும் திறனை கற்றுக்கொள்ளலாம். அதிலும் இந்த உலகத்தில் எது தேவை, எது தேவையற்றது என்பதை குழந்தைகளின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

மன அழுத்தம்

குழந்தைகள் இருந்தால் தேவையில்லாத டென்ஷன் என்று நம்பும் பெண்கள், தயவு செய்து உங்கள் அம்மாவிடம் கேளுங்கள், குழந்தைகள் எவ்வளவு மகிழ்ச்சியை கொண்டு வரும் என்பதை உணர்வீர்கள். நாள் முழுவதும் வேளையில் அவதிப்பட்டு வீடு திரும்பும் தாய்மார்கள், வீட்டில் குழந்தைகளால் எவ்வளவு மகிழ்ச்சி, புத்துணர்ச்சி அடைகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். மேலும் எவ்வளவு டென்ஷன், விரக்தி இருந்தாலும் குழந்தையின் அரவணைப்பில், அனைத்தும் மறந்து போகும் என்பதை உணர முடியும்.

உறவு

குழந்தை செல்வம் கணவருடனான உறவை பலப்படுத்தும். திருமண வாழ்க்கையில் குழந்தை பல அற்புதத்தை நிகழ்த்துகின்றது. குழந்தை பிறந்த உடன் தம்பதியினருடனான அன்பு பலப்படுத்தப்படுகின்றது. மேலும் இடையில் தொலைந்து போன அன்பை திருப்பி தருவது குழந்தை செல்வமே.

முதுமையில் பலம்

வயதானவுடன் உடல் சோர்வடையும் போது, உடல் அளவிலும், மனதளவிலும் ஊன்றுகோளாய் இருப்பது குழந்தைகளே. கவலைகளை கேட்பதற்கும், தோள் சாய்வதற்கும் நம் குழந்தைகள் மட்டுமே இருப்பார்கள்.

நம்பிக்கை

வாழ்க்கையில் பலவித பாதைகளை கடக்கின்றோம். சில வேலைகளையும், சில விஷயங்களையும் நாம் சுமந்து செல்ல வேண்டிய நிர்பந்தம் எழுகின்றது. சில வேளைகளில் விழுவதும் உண்டு. ஆகவே குழந்தைகள் இருந்தால் வாழ்க்கையில் முன்னோக்கி செல்லும் ஆற்றல் நமக்கு அதிகமாக கிடைக்கும் என்பது சத்தியம்.